இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: தமிழகத்தில் தற்போது நடைபெறும் ஆட்சி வேடிக்கை விளையாட்டாக உள்ளது எனவும், பொய் புரட்டு, பேஸ்புக் பொய் இன்ஸ்டாகிராம் பொய், வாட்ஸ்அப் பொய்கள் என பலதரப்பு பொய்களை சொல்லி உண்மைக்கு மாறான தகவல்களை திரித்து பேசி தவெக ஆட்சிக்குவந்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.

விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பாக, அதிமுக ஒற்றுமைக்காக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட, தஞ்சை பூக்கடை K.S.மகேந்திரனின் உருவ படத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Rajendra Balaji

இதனைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி," பொய் புரட்டு, பேஸ்புக் பொய், இன்ஸ்டாகிராம் பொய், வாட்ஸ்அப் பொய்கள் என பலதரப்பு பொய்களை சொல்லி உண்மைக்கு மாறான தகவல்களை திரித்து பேசி வாக்குகளை பெற்றவர்கள் ஆட்சிக்கு வந்துள்ளார்கள்.

ராஜேந்திர பாலாஜி

நம்மை எதிர்த்து நின்று களமாடிய திமுகவை மட்டும் பார்த்து களத்தில் போராடினோம். அருகில் ஒரு சதுரங்க வேட்டை நடக்கிறது என்பதை நாம் மறந்து விட்டோம். அதனால் ஆட்சியை நாம் இழந்து விட்டாலும், இயக்கத்திற்கு வந்த சோதனைகள் எல்லாம் தாங்கிப்பிடித்து அதிமுகவை எடப்பாடியார் உயர்த்தி பிடித்து உள்ளார். சோதனைகளை சாதனையாக்கி சரித்திரம் படைத்த கட்சி அதிமுக எந்த சூழ்நிலையிலும் தேர்தல் களத்தில் இருந்து அதிமுக பின்வாங்கியதாக வரலாறு கிடையாது.

அதிமுக

தோற்று விட்டோம் என்பதற்காக அதிமுக தொண்டர்கள் துவண்டு போன வரலாறு கிடையாது. சோதனைகளை எல்லாம் படிக்கல்லாக்கி வெற்றியின் வாசல் விளிம்பு வரை அழைத்து சென்ற கட்சி அதிமுக, அப்படி ஒரு சூழ்நிலை தான் தற்போது ஏற்பட்டுள்ளது. கடைசி 3 நாட்களில் ஏற்பட்ட அரசியல் சதுரங்க விளையாட்டினால் இந்த ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. நினைப்பதற்கு எதிரான முடிவுகளை மக்கள் எடுத்து விட்டார்கள். தவெக பெற்ற வெற்றியை பிரமாண்டமாக பேச வேண்டிய தேவை கிடையாது.

விஜய் அரசு

அதிமுகவிற்கு கிடைத்த வாக்குகள் சல்லடை போட்டு சலிக்கப்பட்ட வாக்குகள், சல்லடை போட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட முத்துக்கள். எந்த சூழ்நிலையிலும் நமக்காக கிடைக்கும் நிலையான வாக்குகள்
கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் எந்த சூழ்நிலையிலும் கலக்கமடைய வேண்டாம். துன்பமடைய வேண்டாம். அதிமுக என்பது கொள்கை ரீதியான தலைவர்கள் மீது பற்றுள்ள கட்சி. அதிமுக ஒருக்காலமும் நீர்த்துப்போகாது, அதிமுகவிற்கு புதிய புதிய தொண்டர்களும் இளைஞர்களும் வந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆட்சி நீடிக்குமா?

தமிழகத்தில் தற்போது நடைபெறும் ஆட்சியின் சங்கதிகளையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்
தமிழகத்தில் தற்போது நடைபெறும் ஆட்சி வேடிக்கை விளையாட்டாக உள்ளது. இந்த ஆட்சி நீடிக்குமா? நிலைக்குமா? என்றால் அது அவர்கள் கையில் தான் உள்ளது. விளையாட்டுத்தனமான இந்த ஆட்சி தமிழக மக்களுக்கு காலம் முழுவதும் தேவைப்படாது, சலிப்பு தட்டிவிடும். மக்களை உண்மையாக நேசிப்பவர்களை மட்டுமே மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

தமிழக மக்கள்

படம் காட்டுவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதுவரை நாம் பொறுமையாக பொறுத்திருக்க வேண்டும்
வரும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிற்கு மிகப்பெரிய பலத்தை தமிழக மக்கள் வழங்குவார்கள். இவ்வளவு பெரிய சுனாமி அலையிலும் அதிமுக எவ்வளவு வாக்குகள் பெற்றுள்ளது என்றால் தமிழகத்தில் உள்ள அனைத்து குக்கிராமங்களிலும் அதிமுக வாக்குகள் இருக்கிறது." என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+