தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?

Subscribe to Oneindia Tamil

திருச்சி: தமிழகத்தில் தவெக ஆட்சி நல்லாதான் நடக்குது என லால்குடி அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸ் புகழாரம் சூட்டியுள்ளார். தமிழகத்தில் தவெக ஆட்சி பொறுப்பேற்று பல்வேறு கொலை, கொள்ளைகள், பலாத்காரங்கள் நடந்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியே கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் லீமா ரோஸ் தவெகவை பாராட்டியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நீதிக்கட்சியின் வைரத்தூண் என்று போற்றப்படும் சர். ஏ.டி.பன்னீர்செல்வத்தின் 138-வது பிறந்தநாள் விழா திருச்சியில் இன்று அனுசரிக்கப்பட்டது. திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது மணிமண்டப வளாகத்தில் அமைந்துள்ள சிலைக்கு, லால்குடி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ் மார்ட்டின் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

admk tvk leema rose

இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த லீமா ரோஸ் எம்.எல்.ஏ, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் சில கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

தவெக ஆட்சிக்கு அதிமுக எம்.எல்.ஏ பாராட்டு?

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய லீமா ரோஸ் எம்.எல்.ஏ, "தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி நன்றாக இருக்கிறது" என்று குறிப்பிட்டார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தைக் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அக்கட்சியின் பெண் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரே தவெகவின் செயல்பாடுகளைப் பாராட்டிப் பேசியிருப்பது அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பழ.கருப்பையாவுக்குக் கண்டனம்

அரசியல் விமர்சகர் பழ.கருப்பையாவின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய லீமா ரோஸ்: "ஆண்டவன் வாயைப் படைத்தான் என்பதற்காக, சிலர் தேவையில்லாத வகையில் வாய்க்கு வந்தபடி பேசிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக பழ.கருப்பையா இஷ்டத்திற்குப் பேசி வருகிறார். அவர் என்ன நாட்டுக்கு ஜி.எஸ்.டி (GST) வரியைக் கட்டியிருக்கிறாரா? அவர் என்ன தொழில் செய்கிறார் என்பதைப் பட்டியலிட்டுச் சொல்லச் சொல்லுங்கள்.

சி.எஸ்.ஆர். (CSR) நிதியில் மக்களுக்கு எத்தனை கோடி செலவு செய்தார், அவரது சொந்த நிதியில் எத்தனை கோடி செலவு செய்தார் என்பதை ஆதாரத்துடன் சொல்லட்டும். வாய்க்கு வந்தபடி பேசுபவர்கள் மீது சட்டப்படி நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்."

நன்றி அறிவிப்புக் கூட்டம் ஒத்திவைப்பு

தொடர்ந்து பேசிய அவர், "இன்றைய (நேற்றைய) தினம் எனது சட்டசபை தொகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டம் நடத்துவதாக இருந்தது. ஆனால், அ.தி.மு.க தொண்டர் ஒருவர் திடீரென மரணமடைந்ததால், இன்றைய நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன," என்றும் லீமா ரோஸ் குறிப்பிட்டார்.

தலைமையின் போக்கிற்கு மாறாக, அதிமுக எம்.எல்.ஏ ஒருவர் தவெக-வை பாராட்டியும், விமர்சகர்களைக் கடுமையாகச் சாடியும் பேசியிருப்பது தமிழக அரசியல் களத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

அதிமுக பிளவுக்கு லீமா ரோஸ்தான் காரணம் என சொல்லப்பட்டது. மேலும் தவெக அரசுக்கு ஆதரவு கொடுத்த மாவட்டச் செயலாளர்களின் பதவியை பறித்த எடப்பாடி பழனிசாமி, லீமா ரோஸின் பதவியை மட்டும் பறிக்கவில்லை என்ற விமர்சனம் எழுந்தது.

இந்த நிலையில் எடப்பாடி அணியுடன் எஸ்பி வேலுமணி தரப்பு எம்எல்ஏக்கள் இணைந்து விட்டனர். இந்த இணைப்பு குறித்து தான் மகிழ்ச்சி அடைவதாக லீமா ரோஸ் தெரிவித்திருந்தார். மேலும் அதிமுக பிளவுக்கு தான் ஒரு போதும் காரணமாக இருந்ததில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+