அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா
திருச்சி: சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூபாய் ₹10 லட்சம் ஒதுக்கி மக்கள் வரிப்பணத்தில் மக்களுக்காக கட்டப்பட்ட நிழற்குடையில், முதலமைச்சர் (ஸ்டாலின்), துணை முதலமைச்சர் (உதயநிதி), அமைச்சர் (K.N.நேரு) மேயர் புகைப்படம் எல்லாம் ஓகே. பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேருவுக்கு இங்கு (திருச்சியில்) என்ன வேலை? அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? என்று திருச்சி சூர்யா விமர்சித்துள்ளார்.
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில், பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதிகளில் அந்தந்த தொகுதிகளின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய பயன்படுத்தலாம். பொதுவாக அரசுப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அங்கன்வாடிகளுக்குக் கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகங்கள் மற்றும் கழிப்பறைகள் கட்டுதல். அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான மேசைகள், நாற்காலிகள் மற்றும் கணினிகள் வாங்கித் தருதல், பொது மக்கள் மற்றும் மாணவர்களின் பயன்பாட்டிற்காகப் பொது நூலகங்கள் மற்றும் அறிவுசார் மையங்கள் அமைத்தல் போன்றவற்றுக்கு எம்பி, எம்எல்ஏக்கள் நிதி பயன்படுத்தப்படுகிறது.

அதேபோல் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்பச் சுகாதார நிலையங்களுக்குக் கூடுதல் கட்டிடங்கள் கட்டுதல் அல்லது நவீன மருத்துவ உபகரணங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் வாங்கித் தருதல், கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள் அமைத்தல், ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தல், மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகள் ) மற்றும் சிறு மின்விசைத் தொட்டிகள் நிறுவுதல் போன்ற பணிகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
அதேபோல் ஊரக மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் தார்ச் சாலைகள், சிமெண்ட் சாலைகள் மற்றும் இணைப்புச் சாலைகள் அமைத்தல், தெருக்களில் எல்.இ.டி விளக்குகள் மற்றும் சூரியசக்தி (Solar) விளக்குகள் பொருத்துதல், பேருந்து நிறுத்தங்களில் பயணிகள் நிழற்குடைகள் அமைத்தல், பொது மக்கள் சுப நிகழ்ச்சிகள் நடத்த சமுதாயக் கூடங்கள் மற்றும் ரேஷன் கடைகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டுதல் உள்பட பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
அப்படித்தான் திருச்சியில் கேஎன் நேருவின் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் பேருந்து நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. அந்த நிழற்குடையில் இடம் பெற்றுள்ள புகைப்படங்களை திருச்சி சூர்யா விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா. முதலமைச்சர் (ஸ்டாலின்) , துணை முதலமைச்சர் (உதயநிதி), அமைச்சர் (K.N.நேரு) மேயர் புகைப்படம் எல்லாம் ஓகே. பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேருவுக்கு இங்கு (திருச்சியில்) என்ன வேலை?
தமிழகத்தின் கோடீஸ்வரர் பட்டியலில் இருக்கக்கூடிய கேஎன் நேரு உங்கள் மகனை அடையாளப்படுத்துவதற்கும் விளம்பரப்படுத்துவதற்கும் மக்கள் வரிப்பணமும், சட்டமன்ற வளர்ச்சி நிதியும் தேவைப்படுகிறதா? தொகுதிக்கு சம்பந்தமே இல்லாதவரின் புகைப்படம் மக்கள் வரிப்பணத்தில் கட்டும் நிழற்குடைக்கு அவசியமா? வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது திருச்சி மாநகராட்சி.
நேரடியாக முதல்வர் விஜய் கட்டுப்பாட்டில் இருக்கும் இலாகாவில் இதற்கு நடவடிக்கை எடுப்பாரா? இடம்: குமரன் நகர் பேருந்து நிறுத்தம் வயலூர் ரோடு, திருச்சி" இவ்வாறு பதிவிட்டுள்ளார் திருச்சி சூர்யா. இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள திமுக ஆதரவாளர்கள், உள்கட்சி பிரச்சனையை பற்றி பேசுவது பொதுவெளியில் அழகல்ல என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications