சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்றான சிறகடிக்க ஆசை (Siragadikka Aasai serial june 2nd episode) தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சிந்தாமணியிடமிருந்து வீட்டை மீட்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் போராடி வரும் முத்துவுக்கு அடுத்தடுத்து சிக்கல்கள் உருவாகி வருகின்றன. குறிப்பாக நேற்று ஒளிபரப்பான எபிசோட் ரசிகர்களை பதற்றத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில் இன்று ஜுன் 3ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

Siragadikka Aasai serial Vijay TV

சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்

சிந்தாமணி வீட்டை ஏலத்தில் எடுக்காமல் தடுக்க வேண்டும் என்பதற்காக முத்து பல இடங்களில் அலைந்து திரிந்து பணத்தை ஏற்பாடு செய்து வந்தார். நீண்ட போராட்டத்திற்கு பிறகு அவர் வைத்திருந்த பழைய கார்களை அடமானமாக வைத்து 38 லட்சம் ரூபாய் கடன் கொடுக்க பைனான்சியர் ஒருவர் சம்மதித்தார். இதனால் பல நாட்களாக மன அழுத்தத்தில் இருந்த முத்து சற்று நிம்மதி அடைந்தார். ஆனால் அவரின் மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை.

இன்றைய எபிசோடு

முத்து பணத்தை ரெடி செய்த தகவல் எப்படியோ ரோகிணியின் காதுகளுக்கு சென்றுவிடுகிறது. மனோஜ் மூலம் கிடைத்த தகவலை ரோகிணி உடனடியாக சிந்தாமணியிடம் தெரிவிக்கிறார். அதுமட்டுமின்றி, "நான் மனோஜுடன் சேரும் வரை அந்த வீடு அவர்களுடைய கைக்கு போகக்கூடாது" எனவும் சொல்கிறார்.

இந்த தகவலை கேட்டதும் அதிரடியாக களமிறங்கும் சிந்தாமணி, முத்துவின் திட்டத்தை முறியடிக்க ரகசியமாக ஒரு திட்டம் தீட்டுகிறார். தனது ஆட்களை அழைத்து முத்து கொண்டு வரும் பணத்தை வழியிலேயே பிடிக்க ஃப்ளான் போடுகிறார்.

Siragadikka Aasai serial Vijay TV

முத்துக்கு கிடைத்த பணம்

இதற்கிடையில் 38 லட்சம் ரூபாயை வீட்டுக்கு கொண்டு வரும் முத்து, அதை மீனாவிடம் கொடுத்து வைக்கிறார். ஆனால் அன்றிரவு மீனாவுக்கு ஒரு பயங்கரமான கனவு வருகிறது. தன்னிடம் இருந்த பணப்பையை மர்ம நபர்கள் பறித்துச் செல்வது போல் கனவு காணும் அவர், பதறி எழுந்து முத்துவிடம் தனது பயத்தை பகிர்ந்து கொள்கிறார்.

ஆனால் அந்த கனவு வெறும் கனவாக இல்லாமல் நிஜமாக மாறுவது தான் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மறுநாள் பணத்தை எடுத்துச் செல்லும் மீனாவை வழிமறிக்கும் மர்ம கும்பல், அவரிடம் இருந்த பணப்பையை பறித்துக் கொண்டு தப்பிச் செல்கிறது.

இதனால் அதிர்ச்சியில் உறைந்து போகும் மீனா, உடனடியாக முத்துவுக்கு தகவல் தெரிவிக்கிறார். மறுபுறம் முத்துவின் காரையும் தனியாக கண்காணிக்க சிந்தாமணி தனது ஆட்களை அனுப்பி வைத்திருக்கிறார்.

Siragadikka Aasai serial Vijay TV

முத்து ப்ளான்

ஆனால் முத்து வழக்கம்போல் செயல்படாமல் புத்திசாலித்தனமாக அவர்களை ஏமாற்றிவிட்டு பைக்கில் கிளம்புகிறார். இதனால் சிந்தாமணியின் முதல் திட்டம் தோல்வியில் முடிகிறது.

இதையடுத்து நேராக பைனான்சியரை சந்திக்கும் முத்து, தனக்கு உடனடியாக பணம் தேவை எனக் கேட்கிறார். அப்போது புதிய அதிர்ச்சி ஒன்று காத்திருக்கிறது. பணத்தை கொண்டு வந்தவர்கள் போலீசில் சிக்கிக் கொண்டதாக தகவல் வருகிறது. ஒருபுறம் சிந்தாமணி வீட்டை ஏலத்தில் எடுக்க தயாராக இருக்கும் நிலையில், மறுபுறம் பணம் போலீசிடம் சிக்கியதால் முத்து மீண்டும் நெருக்கடியில் சிக்குகிறார்.

இனி முத்து பணத்தை மீட்டு வீட்டை காப்பாற்றுவாரா? சிந்தாமணியின் சதி வெற்றிபெறுமா? ரோகிணியின் துரோகம் வெளிச்சத்திற்கு வருமா? என்ற பரபரப்பான கேள்விகளுடன் அடுத்த எபிசோட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+