"பாசிஸ்ட்டுகளின் வீழ்ச்சி தெற்கிலிருந்து தொடங்கியாச்சு".. உதயநிதி ஸ்டாலின் ட்வீட்டை கவனித்தீர்களா?
சென்னை: பாசிஸ்ட்டுகளின் வீழ்ச்சி தெற்கிலிருந்து தொடங்கியுள்ளது என்று கூறியுள்ள உதயநிதி , கர்நாடக தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கர்நாடகா சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கு பொதுத்தேர்தல் கடந்த மே 10ம் தேதி நடந்து முடிந்தது. சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள், கர்நாடகா மாநிலம் முழுவதும் உள்ள 36 மையங்களில் எண்ணப்பட்டு வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. அதனை தொடர்ந்து வாக்குப்பதிவு எந்திரங்களில பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது. மதியத்திற்கு முன்பே காங்கிரஸ் கட்சி தான் அறுதிப்பெரும்பான்மை பெற போகிறது என்பது தெரியவந்தது.

தற்போது மாலை 5 மணி நிலவரப்படி, காங்கிரஸ் 132 இடங்களில் வெற்றி மற்றும் 4 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் 136 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 62 இடங்களில் பாஜக வெற்றி மற்றும் 2 இடங்களில் முன்னிலை என மொத்தம் பாஜக 64 இடங்களில் வெல்லும் நிலையில் இருக்கிறது, ஜேடிஎஸ் கட்சி (குமாரசாமியின் கட்சி)19 இடங்களில் வெற்றி ஒரு இடத்தில் முன்னிலை என 20 இடங்களில் வெல்லும் நிலையில் உள்ளது. மற்றவர்கள் 4 இடங்களில் வென்றுள்ளனர்.
காங்கிரஸ் கட்சி அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது. சித்தராமையா முதல்வராக தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதேநேரம் டிகே சிவகுமாரும் முதல்வர் ரேஸில் இருப்பதாக கூறப்படுகிறது. சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி எடுக்கும் முடிவில் தான் யார் முதல்வர், யார் யார் துணை முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் என்பது தெரியவரும் என்கிறார்கள்.
இன்று இரவு பெங்களூருவில் உள்ள ஓட்டலில் ஆலோசனை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. நாளை முடிவு எடுக்கப்படும் என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்நிலையில் கர்நாடகா சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு பல்வேறு மாநில தலைவர்கள், முதல்வர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், "கர்நாடகத்தில் மிகச் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு எனது வாழ்த்துகள்.
கர்நாடக மக்கள் வாக்களித்தபோது, நியாயப்படுத்த முடியாத வகையில் சகோதரர் ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்றத்தில் இருந்து பதவிநீக்கம் செய்தது, நாட்டின் முதன்மைப் புலனாய்வு அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராகத் தவறாகப் பயன்படுத்தியது, இந்தித் திணிப்பு, பெருமளவிலான ஊழல் என அனைத்தும் அவர்கள் மனதில் எதிரொலித்திருக்கிறது. பா.ஜ.க.வின் பழிவாங்கும் அரசியலுக்குத் தக்க பாடம் புகட்டி அவர்கள் தங்கள் கன்னடிகப் பெருமிதத்தை நிலைநிறுத்தியுள்ளனர்.
திராவிட நிலப்பரப்பில் இருந்து பா.ஜ.க. முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது. அடுத்து, 2024 பொதுத்தேர்தலிலும் வெல்ல நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம்! இந்தியாவில் மக்களாட்சியையும், அரசியலமைப்பு விழுமியங்களையும் மீட்போம்!" இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளார்.
இந்நிலையில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ள காங்கிரஸ் பேரியக்கத்துக்கு எனது வாழ்த்துகள். சர்வாதிகாரம் - மதவாதம் - மக்களைச் சுரண்டும் ஊழல் என்றிருந்த பாஜகவை வீழ்த்திய கர்நாடக மக்களின் முடிவு, வரவிருக்கிற மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாகும். பாசிஸ்ட்டுகளின் வீழ்ச்சி தெற்கிலிருந்து தொடங்கியுள்ளது." இவ்வாறு உதயநிதி தனது பதிவில் கூறியுள்ளார்.
-
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
Election Exclusive: வரம் கொடுத்த சாமி தலையில் கை வைத்த பிரேமலதா.. திமுக தொகுதிகளை கேட்டு அடம்! குட்டையைக் குழப்பு காங்.! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம்












Click it and Unblock the Notifications