அன்னைக்கு ராத்திரி.. சுதீஸோடு நடந்த மீட்டிங்.. அப்பவே மனசை விட்ட தேமுதிக.. பரபரக்கும் பின்னணி!
சென்னை: தேமுதிக அதிமுக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் கூட்டணியில் இருந்தே வெளியேறுவதாக தேமுதிக அறிவித்துள்ளது. தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் நேற்று முதல்நாள்தான் அதிமுகவோடு மீட்டிங் போட்டார்.. ஆனாலும் இந்த கூட்டணி திடீரென முறிந்துள்ளது!
என்ன நடந்தாலும் சரி.. அதிமுக கூட்டணியில் தேமுதிக இருக்கும். முரண்டு பிடித்தாலும் கடைசியில் தேமுதிக உடன்படிக்கையை மேற்கொள்ளும் என்றுதான் அரசியல் வல்லுனர்கள் பலரும் கருதினார்கள். ஏன் தேமுதிகவிலேயே இப்படித்தான் பலரும் நினைத்தனர்.
ஆனால் கணிப்புகளை பொய்யாக்கி.. நாங்க கூட்டணியை விட்டே வெளியே போகிறோம் என்று தேமுதிக அறிவித்துள்ளது. நேற்று முதல் முக்கியமான மீட்டிங் ஒன்றை சுதீஷ் நடத்தியும் கூட இந்த கூட்டணி உடைந்துள்ளது.

மீட்டிங்
நேற்று முதல்நாள் இரவு திடீர் என்று தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் தமிழக முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேசினார். சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள முதல்வர் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. தேமுதிகவின் மோகன்ராஜ், பார்த்தசாரதி ஆகியோர் இந்த சந்திப்பில் உடன் இருந்தனர். இந்த பேச்சுவார்த்தை எல்லாம் நன்றாகவே சென்று இருக்கிறது.

உடன்பாடு
தேமுதிகவிற்கு 12-13 இடங்களை கொடுப்பதாக அதிமுக பேசி இருக்கிறது. இதை தேமுதிக ஏற்றுக்கொண்டுவிட்டது, எல்லாம் சுமுகமாக முடிந்துவிட்டது என்றுதான் செய்திகள் வந்தது. ஆனால் அன்று வெளியான செய்திகளுக்கு நேர்மாறாக தற்போது அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறி உள்ளது.

மீட்டிங் சரியில்லை
அந்த மீட்டிங்கில் அதிமுகவின் கோரிக்கையை ஏற்பது போலத்தான் சுதீஸ் இருந்தாராம். ஆனால் தேமுதிக நிர்வாகிகளுடன் இவர் பேசிய பின் மனம் மாறிவிட்டார் என்கிறார்கள். 12 -15 இடங்கள் எல்லாம் வேண்டாம் என்று தேமுதிக மூத்த உறுப்பினர்கள் கூறி உள்ளனர். அதேபோல் பிரேமலதாவிற்கும் குறைந்த தொகுதிகளை பெறுவதில் விருப்பம் இல்லை.

கதவு க்ளோஸ்
இதனால் மீண்டும் பேசி பார்க்கலாம் என்றுதான் தேமுதிக நினைத்து இருக்கிறது. ஆனால் அதிமுகவோ.. தேர்தலுக்கு கம்மி நேரம்தான் இருக்கு. இனியும் பேச முடியாது.. அன்று முடிவு செய்த இடங்களைத்தான் கொடுப்போம், இதற்கும் மேல் அதிகம் கொடுக்க முடியாது என்று பேச்சுவார்த்தை கதவை ஒரேயடியாக மூடிவிட்டது.

சென்னையில் ஆலோசனை
இதனால் தேமுதிக வேறு வழியே இல்லாமல் இன்று தங்கள் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தது.இதில் தேமுதிக நிர்வாகிகள் பலரும் அதிக இடம் வேண்டும் இல்லையென்றால் வெளியேறிவிடலாம் என்று கூறியுள்ளனர். முக்கியமாக பாமகவிற்கு கொடுத்த அளவிற்கு நமக்கு சீட் வேண்டும் என்று கேளுங்கள் என்று தேமுதிக நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

வாய்ப்பு இல்லை
ஆனால் 20+ இடங்கள் எல்லாம் கொடுக்க வாய்ப்பே இல்லை என்று தேமுதிகவுக்கு தெரிந்துள்ளது. இதன் பின்தான் மனசை கல்லாக்கிக்கொண்டு தேமுதிக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டதாம். இனி தனியாக போட்டி என்று தேமுதிக சொல்லி இருக்கிறது. ஆனால் மக்கள் நீதி மய்யத்தின் மூன்றாவது அணியில் தேமுதிக இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று அக்கட்சிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications