கருணாநிதி கன்வென்சன் சென்டர்.. என்னென்ன வசதிகள்? முதல்வர் ஸ்டாலினுக்கு இந்த ஐடியா வந்தது எப்படி?
சென்னை : சென்னையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரில் பன்னாட்டு அரங்கம் 'கலைஞர் கன்வென்சன் செண்டர்' அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த பன்னாட்டு அரங்கத்தில் என்னென்ன அமைந்திருக்கும்?
சென்னை கலைவாணர் அரங்கில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நுற்றாண்டு விழாவுக்கான இலச்சினை வெளியீட்டு விழா முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்.

25 ஏக்கர் பரப்பளவில் சென்னையில் உலகத்தரத்தில் கருணாநிதி பெயரில் பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். 5 ஆயிரம் நபர்கள் அமரும் வகையில், உலகளவில் சிறந்த கூட்டரங்கமாக இது அமையும் என தெரிவித்தார்.
உலகில் பல நாடுகளில் இருப்பது போல நட்சத்திர தங்கும் விடுதிகள், உணவகங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய மிக பிரமாண்டமான உலகத்தரம் வாய்ந்த பன்னாட்டு அரங்கமாக இது அமையும், சென்னையில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் கலைஞர் கன்வென்சன் சென்டர் அமையும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
உளகளாவிய வர்த்தக மாநாடுகள், உலக திரைப்பட விழாக்கள், தொழில் மூதலீடு கூட்டங்கள், பன்னாட்டு மாநாடுகள் போன்ற நிகழ்ச்சிகள் அங்கு நடத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார். தொழில் முதலீடுகளை ஈர்க்க சிங்கப்பூர் , ஜப்பான் நாடுகளுக்குப் பயணம் செய்த போது இதை முடிவு செய்ததாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications