ஒரே நாடு ஒரே தேர்தல் ஆதரவு ஏன்? தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய கடிதத்தில் உள்ளது என்ன!ஜெயக்குமார் பரபர
சென்னை: ஒரே நாடு ஒரே தேர்தல் முறை குறித்து இந்தியத் தேர்தல் ஆணையம் அனைத்து கட்சிகளிடம் கருத்துக் கேட்டிருந்தது. இந்த விவகாரத்தில் அதிமுக ஆதரவு அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து அதிமுகவின் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார்.
மத்திய அரசு நாடு முழுக்க பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. ஒரே நாடு ஒரே வரி, ஒரே நாடு ஒரே ரேஷன் உள்ளிட்ட திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த வரிசையில் இப்போது ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதும் இணைந்துள்ளது. நாடாளுமன்ற மற்றும் சட்டசபைத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த மத்திய அரசு தீவிரமாக முனைப்புக் காட்டி வருகிறது

ஒரே நாடு ஒரே தேர்தல்
இருப்பினும், இதற்கு பாஜகவுக்கு எதிராக உள்ள பல்வேறு கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அமெரிக்காவைப் போல அதிபர் ஆட்சியை முறையைக் கொண்டு வரும் முயற்சிதான் இது என்று அவர்கள் சாடி வருகின்றனர். இந்நிலையில், இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து சமீபத்தில் இந்தியத் தேர்தல் ஆணையமும் அனைத்து கட்சிகளிடமும் விளக்கம் கேட்டிருந்தது. அதன்படி அனைத்து கட்சிகளும் இந்த விவகாரத்தில் தங்கள் நிலைப்பாட்டைக் கடிதம் மூலம் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
இந்தச் சூழலில் அதிமுக ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு ஆதரவு அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக தலைவர்கள் அடுத்து வரும் மக்களவை தேர்தலுடன் சட்டசபைத் தேர்தலும் வர வாய்ப்புகள் அதிகம் என்று கூறி வரும் நிலையில், நாடு ஒரே தேர்தல் முறைக்கு அதிமுக ஆதரவு அளித்துள்ளதாக வெளியான தகவல் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இதனிடையே அதிமுக நிலைப்பாடு குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

நிலைப்பாடு என்ன
அதில் அவர் கூறுகையில், "ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது குறித்து அனைத்து கட்சியினரும் கருத்து தெரிவிக்கலாம் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் கேட்டிருந்தது. அந்த அடிப்படையில் அதிமுகவின் நிலைப்பாடு உரிய நேரத்தில் அனுப்பப்பட்டுள்ளது... இது கட்சி எடுக்கும் கொள்கை ரீதியான முடிவு.. இதற்கு ஊடகங்களில் வெளியாகும் தகவலின் அடிப்படையில் பதில் சொல்ல முடியாது.. அதிமுகவின் கொள்கை முடிவு முக்கியமான ஒன்று.. இந்த விவகாரத்தில் வெளியாகும் தகவல்களை அடிப்படையாக வைத்து கருத்து கூற முடியாது..

எடப்பாடி பழனிசாமி
இந்தியத் தேர்தல் ஆணையம் விரைவில் எந்த கட்சிகள் ஆதரவு அளித்தன.. எந்த கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன என்பது குறித்த தகவல்களை வெளியிடும்.. அப்போது அதை பற்றி பேசலாம். இதை இப்போது ஒரு வரியில் சொல்லி விட முடியாது. இந்த விவகாரத்தில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி முடிவு எடுத்து கடிதம் மூலம் சொல்லியிருக்கலாம்.. கட்சியின் பொதுச்செயலாளர் என்ற முறையில் இந்த விவகாரத்தில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி தான் கருத்துச் சொல்ல முடியும்.. இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருந்தால் இது குறித்து கருத்துச் சொல்ல முடியும்.. ஆனால் ஊடகங்களில் வெளியான தகவல்கள் அடிப்படையில் என்னால் எதுவும் பேச முடியாது..

சொல்ல முடியாது
முக்கிய விஷயங்களில் வெளியாகும் தகவல்களை அடிப்படையாக வைத்து கருத்துச் சொல்ல முடியாது. அதிமுக சார்பில் கடிதம் அனுப்பப்பட்டிருக்கலாம்.. ஆனால், அதில் என்ன இருக்கிறது என்பது இன்னும் வெளியாகவில்லை. அப்படி அதிகாரப்பூர்வமாக வெளியாகும் போது இது குறித்து விளக்கமளிக்கிறேன். முக்கிய விஷயங்களுக்குத் தகவல் அடிப்படையில் கேட்பதற்குப் பதில் சொல்ல முடியாது.. கட்சி முடிவெடுத்த பிறகு நான் கருத்துச் சொல்லலாம்.. ஆனால், முடிவெடுத்தாக வெளியான தகவல் அடிப்படையில் எல்லாம் கருத்துச் சொல்ல முடியாது.. வெளிப்படையாக வரும் போது நான் இந்த விவகாரத்தில் விளக்கமாகக் கருத்துச் சொல்கிறேன். ஆனால், இப்படி வெளியான தகவலே திமுகவுக்குக் கலக்கத்தை ஏற்படுத்திவிட்டது" என்றார்.

விரைவில் தெரிய வரும்
அதாவது தேர்தல் ஆணையத்திற்கு அதிமுக என்ன கடிதம் எழுதியுள்ளது என்றும் அதிமுகவின் நிலைப்பாடு என்ன என்றும் அவர் வெளிப்படையாகக் கருத்து கூற மறுத்துவிட்டார். இருப்பினும், கடந்த காலங்களில் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் என்றே அதிமுக தலைவர்கள் பேசி வந்துள்ள நிலையில், தேர்தல் ஆணையத்திற்கு அவர்கள் எழுதிய கடிதமும் அதை ஒட்டியை இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் தேர்தல் ஆணையம் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications