தவெக வேட்பாளர்கள் பட்டியல் எப்போது ரிலீஸ்.. நெருங்கும் தேர்தல்.. விஜய் புதிய திட்டம்
சென்னை: அண்மை காலத்தில் விஜய் பாஜக கூட்டணிக்கு போக போகிறார் என்று வதந்தி அதிகஅளவில் பரவ தொடங்கியது. கட்சியின் முன்னணி நிர்வாகிகள் விளக்கம் அளித்தாலும், விஜய் ஒரு வார்த்தை கூட பேசி விளக்கம் அளிக்காததால் வதந்திகள் தொடர்ந்தன. விஜய்யின் அரசியல் வியூகம் குறித்து பல்வேறு தகவல்கள் தற்போது வெளியாகி வருகிறது. அந்த வகையில் சட்டசபை தேர்தலுக்கான நாட்கள் குறைவாக இருப்பதால் விரைவில் வேட்பாளர் பட்டியலுடன், இறுதி செய்யப்பட்ட தேர்தல் அறிக்கையும் வெளியிட விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் முதல்முறையாக சட்டசபை தேர்தலை இந்த முறை சந்திக்கிறது. இந்த தேர்தலில் விஜய் கூட்டணி வைப்பாரா என்று முதலில் எதிர்பார்ப்பு அதிகமானது. ஆனால் அவர் யாருடனும் கூட்டணி வைக்கவில்லை.. எனினும் விஜய், அதிமுக பாஜக கூட்டணியில் இணைந்து செயல்படுவாரா என்று ஊகங்கள் கிளம்பின. விஜய்க்கு துணை முதல்வர் பதவியை பாஜக தர தயாராக இருப்பதாகவும் வதந்திகள் பரவின. ஆனால் இவற்றை பாஜக தரப்பும், தவெக தரப்பும் திட்டவட்டமாக மறுத்தன. நேற்று விஜய் கரூர் சம்பவம் தொடர்பாக டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்.

தொடர்ந்து விஜய் நேற்று தேனாம்பேட்டையில் உள்ள தவெக வார் ரூம் சென்று ஆலோசனை நடத்தினார். இதில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனையில் கூட்டணி தொடர்பாகவும், கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.
இதனிடையே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து. சட்டசபை தேர்தலை சந்திக்க விஜய் தீவிரமாக இறங்கி உள்ளார் இதற்காக கடந்த மாதம் தொண்டர்களிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்ற விஜய், அதன் அடிப்படையில் நேர்காணலை விஜய் நடத்தினார். ஆன்லைன் மூலமாகவும் வேட்பாளர் நேர்காணல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் தற்போது தேர்வு செய்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த பட்டியல் வெளியிடாமல் விஜய் தரப்பு ரகசியமாகவே வைத்துள்ளது. இதனிடையே கூட்டணி அமைப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் கைகூடவில்லை.. இதனால் அடுத்தகட்டத்தை நோக்கி த.வெ.க. பயணிக்க தொடங்கியுள்ளது. முக்கியமான தொகுதிகளில் த.வெ.க.வினர் தேர்தல் பணிகளை இப்போதே தொடங்கி விட்டார்கள்.
விஜய் போட்டியிடுவதாக கருதப்படும் சென்னை பெரம்பூர் தொகுதியில் தேர்தல் அலுவலகம் அமைக்கும் பணியை பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அம்பத்தூர், தியாகராயநகர், வில்லிவாக்கம் பகுதிகளில் தேர்தல் பணிகள் முழு வீச்சில் தொடங்கப்பட்டுள்ளது.
வேட்புமனு தாக்கல் 30-ந்தேதி தொடங்க உள்ளதால், விரைவில் வேட்பாளர் பட்டியலை வெளியிட விஜய் திட்டமிட்டிருக்கிறாராம். இந்த வேட்பாளர் பட்டியலுடன், கட்சியின் தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
அதனை தொடர்ந்து விஜய் பிரசார பயண திட்ட விவரம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. நாட்கள் குறைவாக இருப்பதால் தமிழகம் முழுவதும் எத்தனை இடங்களில் பிரசாரம் மேற்கொள்வது குறித்து ஆலோசித்து வருகிறாராம். அதன் அடிப்படையில் பிரசார திட்ட பயணத்தை த.வெ.க. அறிவிக்க வாய்ப்பு உள்ளதாம். இதற்கான ஆலோசனை கூட்டம் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் விரைவில் நடக்க உள்ளதாம்.
பனையூர் நடைபெற உள்ள கூட்டத்தில், தேர்தல் பிரசாரத்தை பொதுக்கூட்டங்கள் வாயிலாக முன்னெடுப்பதா? வீதி, வீதியாக பிரசாரம் மேற்கொள்வதா? என்று விஜய் முடிவெடுப்பாராம.
-
விஜயபாஸ்கரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை.. தவெகவில் கிளம்பிய புகைச்சல்.. ஆட்டத்தை மாற்றிய டெல்லி -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
கமல் கோரிக்கையை நிராகரித்த விஜய்.. மேஜைக்கு வந்த 6 எச்சரிக்கை ரிப்போர்ட்.. உள்ளே இருந்தது என்ன? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங் -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தவெகவில் கவுன்சிலர் சீட்டுக்கு ரூ.15 லட்சம்.. கட்சித் தலைமை தெரிந்துதான் வசூல் நடக்கிறதா? -
பெங்களூரை பாருங்க பாஸ்! பரந்தூர் திட்டம் நிறுத்தப்பட்டால் தமிழ்நாடு இழக்கப்போவது என்ன? பெரிய லிஸ்ட்! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்!












Click it and Unblock the Notifications