வெறும் 24 வயசு.. சென்னை மாரத்தானில் 18 கிமீ ஓடிய பின் இப்படியுமா நடந்தது.. யார் இந்த வங்கி ஊழியர்
சென்னை: சென்னை அடையாறு புற்றுநோய் மையத்தின் சார்பில், புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி நேற்று நடந்தது. கோட்டூர்புரம் அண்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் தொடங்கியது. இதில் 21 கிமீ தூரம் மாரத்தான் நடந்தது. இதில் வங்கி ஊழியரானே பரமேஷ் 18 கிமீ தாண்டி ஓடிக்கொண்டிருந்தார். அப்போது தான் யாருமே எதிர்பார்க்காத சம்பவம் நடந்தது. வெறும் 24 வயதில் வங்கி ஊழியருக்கு என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
சென்னை அடையாறு புற்றுநோய் மையத்தின் சார்பில், புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி நேற்று பிரம்மாண்டமாக நடந்தது. கோட்டூர்புரம் அண்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் தொடங்கியது. இந்த பந்தயத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.

18 மீ ஓடிவிட்டார்
மொத்தம் 21 கி.மீ. (அரை மாரத்தான்) இலக்கு கொண்ட இந்த மாரத்தான் போட்டி விறுவிறுப்பாக நடந்தது. இதில் இளைஞர் ஒருவர் 18 கி.மீ. தூரத்தை கடந்து விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருந்தார். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக திடீரென சுருண்டு விழுந்தார். மருத்துவ உதவிக்காக பின்தொடர்ந்த ஆம்புலன்சில் இருந்த மருத்துவ ஊழியர்கள், உடனடியாக அவரை மீட்டு முதலுதவி செய்தார்கள். பின்னர் சிகிச்சைக்காக அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்ற நிலையில் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
வங்கி ஊழியர்
இதுபற்றி கோட்டூர்புரம் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் விரைந்து வந்து உயிரிழந்த வாலிபரின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்தவர், சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம் பகுதியை சேர்ந்த 24 வயதாகும் பரமேஷ் என்பது தெரியவந்தது. தனியார் வங்கி ஊழியரான அவர், ஓட்டப்பந்தயத்தின் மீதான ஈடுபாட்டால் பல்வேறு மாரத்தான் போட்டிகளில் பங்கேற்பதை வழக்கமாக வைத்திருந்தாராம்.
என்ன காரணம்
அதன்படியே கோர்ட்டூர்புரத்தில் நடந்த மாரத்தான் போட்டியில் வங்கி ஊழியர் பரமேஷ் பங்கேற்றுள்ளார். மாரத்தான் பந்தய இலக்கை எப்படியாவது முடித்துவிடவேண்டும் என்ற உத்வேகத்தில் செயல்பட்டு ஓடியுள்ளார். ஆனால் யாரும் எதிர்பாராதவிதமாக பரமேஷ் உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது. பொதுவாக மாரத்தான் ஓட்டத்தின்போதும் அல்லது தீவிரமான உடற்பயிற்சிகளின்போதும் இளம் வயதினர் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழப்பது நடக்கிறது இளம் வயதினரின் திடீர் மரணங்களில் பெரும்பான்மையானவை, உடற்பயிற்சியின் காரணமாக ஏற்படும் அதிகப்படியான அழுத்தம் மற்றும் ஏற்கனவே இருக்கும் அறியப்படாத இதயக் கோளாறுகளால் ஏற்படுவதாக மருத்துவர்களால் கூறப்படுகிறது.
அட்ரினலின் தாக்கம்
சென்னை மாரத்தான் போன்ற நீண்ட தொடர் ஓட்டம் கொண்ட போட்டிகளில் பங்கேற்கும் போது, அதீதமான உடற்பயிற்சி மேற்கொண்டது போன்ற நிலை இளைஞர்களுக்கு ஏற்படுகிறது. அப்போது இளைஞர்களின் உடலில் அட்ரீனலின் போன்ற ஹார்மோன்களின் சுரப்பு மிக அதிகமாக இருக்கும். இது இதயத் துடிப்பை வேகப்படுத்தி, இரத்த அழுத்தத்தை உயர்த்திவிடுகிறது.. அப்படியான சூழலில் ஏற்கனவே சிறிய கோளாறுகள் கொண்ட இதயத்தில், இந்த திடீர் அழுத்த அதிகரிப்பு மாரடைப்பைத் தூண்டுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
இதயத் தசை பெருக்கம்
இளம் வயதினரிடையே திடீர் மரணத்திற்கு இதயத் தசைப் பெருக்கம் மிகப் பொதுவான காரணம் என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். இது ஒரு மரபணுக் கோளாறு என்கிறார்கள். இதயத்தின் தசைச் சுவர்களில் இடது வென்ட்ரிக்கிள் அசாதாரணமாகத் தடித்துவிடும் என்றும், இதன் காரணமாக இதயத்தால் போதுமான அளவு இரத்தத்தை பம்ப் செய்ய முடியாமல் போவதுடன், இதயத்தின் இயல்பான மின் செயல்பாட்டில் குழப்பம் ஏற்பட்டு, திடீர் என Arrhythmia ஏற்படுகிறது. இதனால் இறக்க நேரிடுகிறது
அதேபோல் சிலருக்கு பிறப்பிலேயே இதயத்திற்கு இரத்தம் வழங்கும் கரோனரி தமனிகள் தவறான இடத்தில் அமைந்திருக்கும் என்றும் இதன் காரணமாக தீவிரமான உடற்பயிற்சி அல்லது ஓட்டப்பந்தயத்தில் ஓடும் போது, இந்தத் தமனிகள் சுருக்கப்பட்டு, இதயத் தசைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் திடீரெனத் தடைபடும். இதுவே மாரடைப்புக்கு வழிவகுக்கும் என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
மயோகார்டிடிஸ்
இதயத் தசையில் ஏற்படும் அழற்சிக்கு மயோகார்டிடிஸ் என்று பெயர். இது பொதுவாக வைரஸ் தொற்றுக்குப் பிறகு சாதாரண காய்ச்சல் அல்லது சளிக்குப் பிற ஏற்படலாம். அந்த நேரத்தில் இதயத் தசைகள் பலவீனமடைந்து, அவற்றின் இயல்பான தாளம் (Rhythm) பாதிக்கப்பட்டு இருக்கும். அப்போது அவர்கள் தீவிரமான உடற்பயிற்சி செய்தால் அல்லது ஓடினால், மாரடைப்பு ஏற்படலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
-
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
குதிரையில் யார் பாருங்க.. பெட்ரோல் பங்க் கூட்டத்தால் ஷாக்கான வங்கி ஊழியர்! என்ன கோபால் இது? -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications