கறிக்கடைக்காரர் ஒரே "இடி".. அதைவிடுங்க, சென்னை புளியந்தோப்பு லாரியில் எட்டிப்பார்த்த போலீஸ்.. அடச்சே
சென்னை: சென்னை புளியந்தோப்பு ஆடுதொட்டி பகுதியில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. இதுகுறித்த விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி வருகிறார்கள்.
சென்னை புளியந்தோப்பில் மாநகராட்சியின் இறைச்சி கூடம் செயல்பட்டு வருகிறது... இங்கு ஆடு, மாடுகள் வெட்டப்பட்டு, மொத்தமாக விற்பனை செய்யப்படுகிறது.. சென்னை நகரில் பெரும்பாலான கறிகடைகளுக்கு, இங்கிருந்து தான், இறைச்சிகள் கொண்டு செல்லப்படுகின்றன.

இறைச்சி கூடம்: இந்த ஆடுதொட்டியில் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதலாக விற்பனையாகும்.. அந்தவகையில் 5 ஆயிரம் ஆடுகள் வெட்டப்படுகின்றன.. ஒரு கிலோ ரூ.700 வரை இங்கு விற்கிறார்கள்.. ஆனால், இதுவே, மட்டன் கடைகளில் 1 கிலோ ரூ.900 வரை விற்கப்படுகிறது...
இப்படிப்பட்ட சூழலில், சில நாட்களுக்கு முன்பு, ஒரு அதிர்ச்சி தகவல் வெளியானது. அதாவது, புளியந்தோப்பு இறைச்சி கூடத்துக்கு அருகிலேயே, சிலர் 1 கிலோ மட்டன் 600 ரூபாய்க்கு விற்கிறார்கள்.. இது பலருக்கும் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. பிறகுதான் விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.
சனிக்கிழமைகள்: அதாவது, ராஜஸ்தான், சூரத் போன்ற பகுதிகளிலிருந்து ஆடுகள் சனிக்கிழமைகளில் கொண்டு வரப்படும்.. இப்படி ஒரு லாரிக்கு, கிட்டத்தட்ட 350 ஆடுகளை ஏற்றி கொண்டுவரும்போது, ஆடுகள் ஒன்றோடு ஒன்று நெரிசலில் சிக்கி, லாரியிலேயே நான்கைந்து இறந்துவிடுமாம். ஒரு லாரியிலேயே 5 ஆடுகள் என்றால், 15 லாரிகளில், எப்படியும் 50 ஆடுகளுக்கு மேல் சென்னை வருவதற்குள்ளேயே இறந்துவிடுகின்றன..
நடுவழியில் இறந்துபோன அந்த ஆடுகளை, அந்த பகுதியில் உள்ளவர்கள், மிக மிக குறைந்த விலைக்கு வாங்கி, அவை வெட்டி, சுத்தம் செய்து பிரீசரில் வைத்து, மறுநாள், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மற்ற ஆடுகளை வெட்டும்போது, இந்த ஆட்டையும் கொண்டு வந்து விற்றுவிடுவார்களாம்.. விலை குறைவாக உள்ளதால், பொதுமக்களும் இது தெரியாமல் வாங்கி சென்றுள்ளனர்.
பரபரப்பு: இறந்த ஆடுகளை, ஆடுதொட்டியில் ஒருபோதும் விற்கப்படுவதில்லை என்றாலும், புளியந்தோப்பு பகுதியில் இப்படி விற்கப்படும் இறைச்சிகளை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
இந்த சமயத்தில்தான் தற்போது இன்னொரு அதிர்ச்சி சம்பவம் இதே புளியந்தோப்பு ஆடுதொட்டியில் நடந்துள்ளது.. ஓட்டேரி போலீசார் இங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.. அப்போது, ஓட்டேரி மேம்பாலம் குக்ஸ் ரோடு பகுதியில் உள்ள பழைய இரும்பு கடை ஒன்றில், மினி வேனில் இருந்து இரும்பு பொருட்கள் இறக்குவதை கண்டனர்.
ஆடுதொட்டி: இதனால், சந்தேகமடைந்த போலீசார், அவர்களிடம் சென்று விசாரணையை மேற்கொண்டனர். அப்போதுதான், இரும்பு பொருட்கள் புளியந்தோப்பு ஆடு தொட்டியில் இருந்து திருடி எடுத்து வரப்பட்டது தெரியவந்தது.
புளியந்தோப்பு ஆடுதொட்டியில் நவீன இறைச்சிக்கூடம் திறப்பதற்காக சில வருடங்களுக்கு முன்பு, இரும்பு பொருட்களை வாங்கி வைத்திருந்தனர். ஆனால், அந்த இறைச்சி கூடத்தை திறக்க கூடாது என்று சிலர் கேஸ் போட்டார்கள்.
இரும்பு பொருட்கள்: கோர்ட்டில் வழக்கு போடப்பட்டுவிட்டதால், அந்த இரும்பு பொருட்கள் எல்லாமே துருப்பிடித்துவிட்டன. இவைகளை எல்லாம் இன்னமும் அங்கேதான் போட்டு வைத்திருக்கிறார்கள். இந்த இரும்பு பொருட்களைதான் அடிக்கடி, கொஞ்சம் கொஞ்சமாக திருடி வெளியே கொண்டு போய் விற்று வருகிறார்களாம்..
இப்போதுகூட, "ஆன்லைன் ஆப்" மூலம் மினி வேன் புக் செய்து, ஆடு தொட்டிக்கு வரவழைத்து, இரும்பு பொருட்களை ஏற்றி ஓட்டேரி பகுதிக்கு கொண்டு வந்து விற்க முயற்சி செய்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.
புளியந்தோப்பு: மினி வேனில் இருந்த 300 கிலோ இரும்பு பொருட்களை போலீசார் பறிமுதல் செய்ததுடன், இரும்பு பொருட்களை திருடிக் கொண்டு வந்த புளியந்தோப்பு மணிமாறன் (எ) தொட்டி மணி என்பவரையும் கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே நிறைய கேஸ்கள் இருக்கிறதாம். இப்போதும் இந்த கேஸில் சிக்கி உள்ளார் தொட்டி மணி.. இவரிடம் விசாரணையும் நடக்கிறது.
புளியந்தோப்பு ஆடுதொட்டி பகுதியில் நடக்கும் சம்பவங்கள் அடிக்கடி வெளியாகி சென்னைக்கே பரபரப்பை தந்து கொண்டிருக்கின்றன.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications