Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எங்க முன்னாடியே டிரெஸ்ஸை மாத்துங்க.. அமர் பிரசாத் ரெட்டியிடம் போலீஸ் சொன்னது.. புரந்தேஸ்வரி ஆவேசம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமர் பிரசாத் ரெட்டி துணியை மாற்றிக்கொள்ளக் கூட அனுமதிக்கவில்லை. தங்கள் முன்பே துணியை மாற்றிக்கொள்ளுமாறு போலீசார் கூறியுள்ளனர் என அமர் பிரசாத் வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தினரிடம் விசாரித்த பாஜக மேலிடம் அனுப்பிய குழுவில் இடம்பெற்றுள்ள புரந்தேஸ்வரி தெரிவித்துள்ளார்.

சென்னை பனையூரில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் வீடு முன்பாக அனுமதி இல்லாமல் 50 அடி உயர கொடிக்கம்பம் நிறுவப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட அந்தக் கொடிக் கம்பத்தினை அதிகாரிகள் அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் நூற்றுக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர். அப்போது பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

What happened during amar prasad reddy arrest? BJP leader purandeswari explains

அமர் பிரசாத் கைது: கொடிக் கம்பத்தை அகற்ற வந்த ஜேசிபி இயந்திரத்தின் கண்ணாடியை கல் வீசி உடைத்த பாஜகவினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் பாஜக மாநில இளைஞர் மேம்பாட்டு பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். அமர் பிரசாத் ரெட்டி அடுத்தடுத்து பழைய வழக்குகள் தூசு தட்டப்பட்டு கைது செய்யப்பட்டு வருகிறார்.

அமர்பிரசாத் ரெட்டிக்கு வரும் நவம்பர் 10ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் புழல் சிறையில் இருந்து வருகிறார். இதனிடையே திமுக அரசால் பாஜகவினர் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்படுவது, நள்ளிரவு மற்றும் அதிகாலையில் கைது செய்வது, ஜாமீன் பெறுவதை தடுக்கும் நோக்கில் வார இறுதி நாட்கள் அல்லது தொடர் விடுமுறை நாட்களில் கைது செய்வது போன்ற செயல்களில் திமுக அரசு ஈடுபடுவது குறித்து ஆய்வு செய்ய டெல்லி பாஜக மேலிடம் 4 பேர் கொண்ட குழுவை அமைத்தது.

மேலிடம் அனுப்பிய குழுவினர் ஆய்வு: இந்தக் குழுவில் கர்நாடகா முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா, ஆந்திரா பாஜக தலைவர் புரந்தேஸ்வரி, எம்.பிக்கள் சத்யபால் சிங், பி.சி.மோகன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இந்த நிலையில், 4 பேர் குழுவினர் நேற்று சென்னை வந்தனர். சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்குச் சென்று, தமிழக காவல்துறையால் வழக்குப் பதிவு செய்யப்பட்ட பாஜகவினரிடம் விசாரித்து, விவரங்களைக் கேட்டனர்.

What happened during amar prasad reddy arrest? BJP leader purandeswari explains

இன்று சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அமர் பிரசாத் ரெட்டியின் வீட்டுக்கும், அடுத்ததாக திருவான்மியூரில் உள்ள எஸ்.ஜி.சூர்யா வீட்டுக்கும் சென்றனர். பின்னர் பனையூரில் உள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டின் அருகே பாஜகவின் கொடிக் கம்பம் அகற்றப்பட்ட இடத்தை பார்வையிட்டு, அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், பாஜக கொடிக்கம்பம் அகற்றப்பட்ட சம்பவத்தின் போது காயமடைந்த பாஜக ஐடி பிரிவு மாநிலச் செயலாளர் விவின் பாஸ்கரனையும் சந்தித்தனர்.

பாஜகவுக்கு அச்சுறுத்தல்: தொடர்ந்து, ஆளுநர் மாளிகைக்குச் சென்ற சதானந்த கவுடா, புரந்தேஸ்வரி, சத்யபால் சிங், பி.சி.மோகன், சுதாகர் ரெட்டி, எஸ்.ஜி.சூர்யா, டால்பின் ஸ்ரீதர் ஆகியோர், திமுக அரசு, பாஜகவினர் மீது பொய் வழக்குகளைப் பதிவு செய்து அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும், அச்சுறுத்துவதாகவும் ஆளுநரிடம் புகார் மனுவை அளித்தனர்.

அதைத்தொடர்ந்து, சதானந்த கவுடா தலைமையிலான நால்வர் குழுவினர், சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, சதானந்த கவுடா, திமுக அரசு, காவல்துறை மூலம் பாஜகவினருக்கு அச்சுறுத்தல் விடுத்து வருவதாகவும், இதுபற்றிய புகாரை ஆளுநரிடம் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அமர் பிரசாத் டிரெஸ்ஸை கூட மாத்த விடல: தொடர்ந்து பேசிய புரந்தேஸ்வரி, "ஏதாவது பதிவை பகிர்ந்தாலே பாஜகவினர் மீது வழக்கு பதியப்படுகிறது. எந்த அடிப்படையும் இன்றி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு போடப்படுகிறது. பாஜக தமிழ்நாட்டில் வளர்வதால் அரசு பயந்து பாஜகவினரை குறி வைக்கிறது. பொய் வழக்கு பதிவு செய்வதால் பாஜகவை சேர்ந்த செயற்பாட்டாளர்கள் ஒரு மாதம் வெளியே வர முடியவில்லை.

What happened during amar prasad reddy arrest? BJP leader purandeswari explains

சனிக்கிழமை மாலை அமர் பிரசாத் வீட்டுக்கு போலீசார் சென்றனர். அமர் பிரசாத் ரெட்டி துணியை மாற்றிக்கொள்ளக் கூட அனுமதிக்கவில்லை. தங்கள் முன்பே துணியை மாற்றிக்கொள்ளுமாறு போலீசார் கூறியுள்ளனர். அவரை உடனடியாக கூட்டிச் சென்றுள்ளனர். மாலை நேரத்தில் கைது செய்ததால் அவரால் ஜாமீன் கோரக்கூட முடியவில்லை.

பாதயாத்திரையை கெடுக்க: அண்ணாமலையின் பாதயாத்திரைக்கு இணை ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு வருகிறார் அமர் பிரசாத் ரெட்டி. பாஜகவின் பாதயாத்திரை சிறப்பாக நடந்து, மக்கள் கூட்டம் திரண்டு வருவதால் பாதயாத்திரையை எப்படியாவது சீர்குலைக்க வேண்டும் என்பதற்காக அமர் பிரசாத்தை கைது செய்துள்ளனர்.

பாஜகவினர் மீது எஸ்.சி. எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை பதிவு செய்து உடனே சிறையில் போட்டு விடுகின்றனர். ஆனால், பாஜக தொண்டர்கள் தங்களுக்கு ஏதேனும் கொடுமை நடந்து, போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கச் சென்றால், புகாரை ஏற்கவோ, எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவோ போலீசார் முன்வரவில்லை. பாஜகவினர் கட்சிப் பணியாற்றக் கூடாது என்பதற்காகவே பாஜகவினரை குறிவைக்கின்றனர்." எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+