Flashback-1:கருணாநிதி உச்சரித்த 'அந்த பெயர்'..ஆக்ரோஷமான ஜெயலலிதா- முகத்தில் குத்து-சேலை கிழிந்த கதை!
சென்னை: 1989-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபையில் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரான மறைந்த ஜெயலலிதாவின் சேலை கிழிக்கப்பட்டதாக சொல்லப்படும் விவகாரம் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பேசு பொருளாக இருந்து வருகிறது.
லோக்சபாவில் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது பேசிய திமுக எம்பி கனிமொழி, திரெளபதி துகிலிரியப்பட்டதை முன்வைத்து மணிப்பூர் சம்பவத்தை விவரித்திருந்தார். இதற்கு பதிலளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 1989-ல் தமிழ்நாடு சட்டசபையில் ஜெயலலிதாவின் சேலையை பிடித்து இழுத்த திமுக கட்சி, திரெளபதி குறித்து பேசுகிறது என கூறியிருந்தார்.

சோபன் பாபு பெயர்: இதனையடுத்து 1989-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபையில் நடந்த சம்பவங்கள் தொடர்ந்து பல்வேறு கருத்துகள் பேசப்பட்டு வருகின்றன. 1989-ம் ஆண்டு சம்பவம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ஜி.சி. சேகர், டெலிகிராப் பத்திரிகையில் எழுதி இருந்ததாவது: 1989- மார்ச் 25-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்ய முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோர் சட்டசபையில் இருந்தனர். எதிர்க்கட்சித் தலைவரான ஜெயலலிதா, கருணாநிதியின் ராஜினாமாவை வலியுறுத்தி பேசினார். அப்போது கருணாநிதி ஜெயலலிதாவைப் பார்த்து "போய் சோபன்பாபுவிடம் கேள்" என கூறினார். இதையடுத்து அதிமுக எம்.எல்.ஏக்கள் கருணாநிதியின் கையில் இருந்த பட்ஜெட் பேப்பரை கிழித்து முகத்தில் குத்துவிட்டனர். அப்போதுதான் ஜெயலலிதாவின் சேலை கிழிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இவ்வாறு ஜிசி சேகர் எழுதியிருக்கிறார்.

யார் சோபன் பாபு?: தமிழ் திரை உலகில் ஜெயலலிதாவின் காலம் முடிவுக்கு வந்த தருணம்.. 1973-ல் தெலுங்கு படங்களில் நடித்தார் ஜெயலலிதா. அப்போது தெலுங்கு நடிகர் சோபன் பாபுவுடன் ஜெயலலிதா இணைத்து பேசப்பட்டார். சில ஆண்டுகள் கழித்து, குமுதம் வார இதழில் ஜெயலலிதா எழுதிய தொடரும் அவர் கொடுத்த விளம்பரமும் பெரும் பரபரப்பை கிளப்பின. அதில்தான் தானும் நடிகர் சோபன் பாபுவும் ஒரே வீட்டில் குடித்தனம் நடத்துவதாகவும் சோபன் பாபுவுக்கு திருமணமாகி இருப்பதால் தனி வீட்டில் ஒன்றாக இருப்பதாகவும் 'கோயிங் ஸ்டெடி' எனவும் பகிரங்க பேட்டி கொடுத்தார் ஜெயலலிதா. சோபன் பாபுவுடன் தாம் இருக்கும் படங்களையும் கூட ஜெயலலிதா அப்போது வெளியிட்டிருந்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications