மாங்காடு Exclusive.. ஏ4 ஷீட் வாங்க சொன்ன மாணவி.. அம்மா கடைக்கு சென்ற நேரத்தில் தற்கொலை.. பின்னணி!
சென்னை: ஏ4 பேப்பர் வாங்க அம்மா கடைக்கு போன நேரத்தில் சென்னை மாங்காட்டை சேர்ந்த பிளஸ் 1 மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
Recommended Video
சென்னை மாங்காட்டில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி பாலியல் துன்புறுத்தலால் வாழ பிடிக்கவில்லை என கூறி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவிகளின் தொடர் தற்கொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து இறந்த மாணவியின் வீட்டின் பக்கத்தில் வசிக்கும் பெண் ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், அவரது தாய் வெளியே போன போது ஏ4 ஷீட் வாங்கி வருமாறு கூறினார். இதையடுத்து அந்த பெண்ணின் அம்மாவும் பேப்பரை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

பெண்ணை இறக்கினர்
அப்போது கதவை நீண்ட நேரம் தட்டியும் அந்த பெண் திறக்கவில்லை. இதையடுத்து அங்கு கட்டட வேலை பார்த்தவர்களை அழைத்து கண்ணாடிகளை உடைத்தனர். அப்போது அந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்திருந்தது தெரியவந்தது. உடனே அனைவரின் உதவியுடன் அந்த பெண்ணை இறக்கி கீழே படுக்க வைத்தனர்.

புத்தகபையில் கடிதம்
அப்போது அந்த பெண்ணின் புத்தகப் பையை ஆராய்ந்தேன். அதில்தான் இந்த கடிதம் சிக்கியது. அதை அந்த பெண்ணின் தாயிடம் படித்து காட்டிய போது கதறி அழுதார். "என் மகளை விட்டுவிட்டேனே" என அழுதார். எங்களுக்கு பார்க்கவே மிகவும் கஷ்டமாக இருந்தது. பெண் குழந்தைகள் சிறிய விஷயமாக இருந்தாலும் அதை பெற்றோரிடம் ஷேர் செய்து கொள்ள வேண்டும்.

மாணவி தற்கொலை
அந்த மாணவி தற்கொலைக்கு முன்னர் கடந்த இரு தினங்களாகவே இயல்பாகவே இருந்தார். எப்போதும் போல் இருந்தார். மதியத்திற்கு வெஜிட்டபிள் ரைஸ் கேட்டுள்ளார். அதை அவரது அம்மா செய்து கொடுத்தவுடன் சாப்பிட்டுள்ளார். அது போல் உப்புமா செய்துள்ளார். அதை அந்த மாணவி சாப்பிடவே இல்லை.

ஆண் பிள்ளைகள்
எப்போதும் அந்த மாணவியின் தாய் அவரிடம் யாராவது ஆண் பிள்ளைகள் தொந்தரவு செய்கிறார்களா, ஏதேனும் பிரச்சினை இருக்கிறதா என கேட்பாராம். ஆனால் அந்த மாணவி "அம்மா அதெல்லாம் இல்லை" என சொல்வாராம். அவங்க அம்மா கேட்டும் இந்த மாணவி எதையும் சொல்லாமல் இருந்துள்ளார்.

தண்டிக்க வேண்டும்
இந்த மாணவியின் சாவிற்கு காரணமானவர்களை கண்டறிந்து தண்டிக்க வேண்டும் என்றார். இதுகுறித்து பேசிய சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் டாக்டர் டி சண்முகராஜா கூறுகையில், பெண்களுக்கு நிறைய சட்ட பாதுகாப்புகள் இருந்தும் அதுகுறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததே இது போன்ற உச்சபட்ச முடிவுகளுக்கு காரணமாகிறது. முன்பெல்லாம் பள்ளியிலேயே கல்வித் துறை, காவல் துறை, பெற்றோர், ஆசிரியர்கள் கொண்ட ஒரு கூட்டம் நடக்கும். இந்த கூட்டத்தில் பெண்களுக்கு என்ன பிரச்சினைகள் உள்ளன என்பது குறித்து பேசுவார்கள். இந்த ஒரு செட்அப்பை மீண்டும் கொண்டு வர வேண்டும். கோவையில் ஆரம்பித்து இது தொடர்கதையாக இருக்கிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏதாவது நடவடிக்கை எடுத்து இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். துணை ஆணையர் மகேஷ் சம்பவ இடத்திற்கு வந்து ஒரு மணி நேரமாக அனைவரிடமும் விசாரணை நடத்தியுள்ளார். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்வோம் என்ற உறுதிமொழியையும் அவர் அளித்துள்ளார். அதன் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications