பத்திர ஆபிஸில் 3000 கோடியா? வருமான வரித்துறை குற்றச்சாட்டும்.. பதிவாளர் தந்த விளக்கமும்!
சென்னை: உறையூர், செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவுகளுக்கு 3 ஆயிரம் கோடி மதிப்பில் கணக்கு காட்டவில்லை என்று வருமான வரித்துறை தெரிவித்திருந்தது. இந்நிலையில் வருமான வரி சோதனை குறித்து பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விளக்கம் அளித்திருக்கிறார்.
செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில் நடந்த ஆய்வில் சுமார் ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் கணக்கு காட்டப்படவில்லை. உறையூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் சுமார் ரூ.1,000 கோடி பத்திர பதிவுகளுக்கு கணக்கு காட்டப்படவில்லை என்று வருமான வரித்துறை தெரியவந்துள்ளது.

இந்த 2 அலுவலகங்களிலும் பதிவுகளை ஆராய்ந்து கணக்கிடும் பணி நடைபெறுவதால் கணக்கில் காட்டப்படாத தொகை மேலும் அதிகரிக்கும் எனவும் வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் இந்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் வருமான வரி சோதனை குறித்து, பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: "வருமான வரி சட்டம் பிரிவு 285 பி.ஏ. மற்றும் விதி 114 இ-ன்படி ஒவ்வொரு நிதி ஆண்டு முடிவடைந்ததும் ரூ.30 லட்சத்துக்கு மேற்பட்ட மதிப்பு கொண்ட விற்பனை ஆவணங்களை பொறுத்து விற்பவர், வாங்குபவர் ஆதார் எண், பான் எண், சொத்தின் தன்மை, சொத்தின் மதிப்பு போன்ற விவரங்கள் பதிவு அலுவலர்களால் வருமான வரித்துறை இணையதளத்தில் அப்லோடு செய்யப்படுகிறது. இது படிவம் 61ஏ என அழைக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் இந்த விவரங்கள் தவறாமல் அப்லோடு செய்யப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி பதிவுத்துறை தலைவர் சுற்றறிக்கை மூலம் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நிதியாண்டு முடிவடைந்த 2 மாதத்துக்குள் எந்தெந்த சார்பதிவாளர்கள் இந்த அறிக்கையை அப்லோடு செய்தார்கள் என்ற விவரத்தை பதிவுத்துறை தலைவருக்கு தெரிவிக்கும் நடைமுறை வருமான வரித்துறையால் பின்பற்றப்படாதநிலையில் அப்லோடு செய்யப்படாத விவரங்கள் குறித்து அவ்வப்போது வருமான வரித்துறையால் நினைவூட்டுகள் பதிவுத்துறை தலைவருக்கு அனுப்பப்படுவதும் அதன்மீது பதிவுத்துறை தலைவர் உரிய மேல் நடவடிக்கை எடுப்பதும் வழக்கத்தில் உள்ளது.
வருடாந்திர அறிக்கை மட்டுமல்லாது ரூ.30 லட்சத்துக்கு மேல் மதிப்பு கொண்ட விற்பனை ஆவணங்கள், ரூ.10 லட்சத்துக்கு மேல் மதிப்பு கொண்ட விற்பனை ஆவணங்கள் போன்றவற்றின் விவரங்களும் வருமான வரித்துறையினரால் பதிவுத்துறை தலைவரிடம் அவ்வப்போது கோரப்படும்.
இந்த விவரங்கள் மையக்கணினியில் இருந்து எடுக்கப்பட்டு வழங்கப்படும். இதன்மூலம் சார்பதிவாளர் அப்லோடு செய்த படிவம் 61 ஏ-வில் ஏதேனும் விடுதல்கள் உள்ளதா? என்ற விவரம் வருமான வரித்துறையால் சரிபார்க்கப்படும். இவ்வாறு அப்லோடு செய்ய தேவையான தகவல்களை ஆவணம் பதிவு செய்ய முன்பதிவு செய்யும் முன்பே ஆவணதாரர்களிடம் இருந்து பெறும் வகையில் பதிவுத்துறையின் ஸ்டார் 2.0 மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரூ.10 லட்சத்துக்கும் மேற்பட்ட விற்பனை ஆவணங்கள் பதிவுக்கு வரும் நிலையில் விற்பவர் மற்றும் வாங்குபவரிடம் இருந்து பான் எண் பெறப்படுகிறது.
பான் எண் இல்லாதவர்கள் வருமான வரி சட்டத்தின்படி படிவம் 60 அளிக்க வேண்டும். இந்த விவரமும் மென்பொருள் வழியே சேகரிக்கப்படுகிறது. மேலும் ரூ.30 லட்சதுக்கு மேற்பட்ட விற்பனை ஆவணங்களை பொறுத்து விற்பவர், வாங்குபவர் ஆதார் எண், பான் எண், சொத்தின் தன்மை, சொத்தின் மதிப்பு போன்ற கூடுதல் விவரங்கள் ஸ்டார் 2.0 மென்பொருள் வழி சேகரிக்கப்படுகிறது. இவ்வாறு சேகரிக்கப்பட்ட விவரங்கள் அந்த நிதியாண்டு முடிவடைந்ததும் வருமான வரித்துறை இணையதளத்தில் சார்பதிவாளரால் அப்லோடு செய்யப்படுகிறது.
மேலும் பதிவு பணிகள் மேற்கொள்ளும்போது விற்பனை செய்பவர் மற்றும் சொத்தினை வாங்குபவர்களின் ஆதார் எண் பெறப்பட்டு, அதனை நிகழ்நேரத்தில் ஆதார் தரவுடன் 2.0 மென்பொருள் மூலமாக சரிபார்க்கப்படுகிறது. ஆதார் எண்ணுடன் பான் எண் இணைக்கப்பட்டுள்ளதால் பதிவு தொடர்பான தகவல்கள் அனைத்தும் வருமான வரித்துறைக்கு வழங்கும் வகையில் பதிவுத்துறை மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உறையூர் சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகம் ஆகியவற்றுக்கு 4-ந்தேதி வருமான வரித்துறையினர் நேரில் வந்தனர். 2017-18-ம் நிதி ஆண்டில் இருந்து பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் விவரங்கள், அவர்களால் கோரப்பட்டதற்கு இணங்க வழங்கப்பட்டன. தேவையான தகவல்களை நேரில் சரிபார்க்கவும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்கப்பட்டது. இந்த இரு அலுவலகங்கள் குறித்தும் கூடுதல் விவரங்கள் வருமான வரித்துறையினரால் அந்தந்த சார்பதிவாளர்களிடம் கோரப்பட்டுள்ளது.
இந்த விவரங்கள் விரைவில் வருமான வரித்துறைக்கு அனுப்பப்படும். மேலும் உரிய காலத்துக்குள் இந்த விவரங்களை அப்லோடு செய்யாத இந்த 2 அலுவலகங்களின் சார்பதிவாளர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து சார்பதிவாளர்களும் 61 ஏ விவரங்களை வருமான வரித்துறையின் இணையளத்தில் உரிய காலத்துக்குள் அப்லோடு செய்யவேண்டும் என கண்டிப்பான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன." இவ்வாறு பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியுள்ளார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை












Click it and Unblock the Notifications