சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"விபச்சாரம்.. இதான் போன் நம்பர்".. ரவுடி பேபி சூர்யாவால் கதறி அழும் பெண்கள்.. போலீஸ் வரை புகார்

ரவுடிபேபி சூர்யா ஆதரவாளர்கள் மீது புகார் எழுந்துள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: ரவுடி பேபி சூர்யா, சிக்கந்தர் மீது புகார் தந்த நபர்களுக்கு கொலை மிரட்டல்கள் வர ஆரம்பித்துள்ளன.. எனவே, சூர்யாவின் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை கோரி, போலீசில் புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன.

மதுரையை சேர்ந்த சூர்யா (எ) சுப்புலட்சுமி, 'ரவுடி பேபி' என்ற பெயரில் சோஷியல் மீடியாவில் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இதேபோல, மதுரை சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த சிக்கந்தர்ஷா என்பவரும் வீடியோ பதிவிட்டு வந்தார்.

இவ்வளவு பெரிய போஸ்ட்டா! 5 மாநிலத்தில் 4ஐ தூக்கிய பாஜக! தமிழ்நாடு பெண் இவ்வளவு பெரிய போஸ்ட்டா! 5 மாநிலத்தில் 4ஐ தூக்கிய பாஜக! தமிழ்நாடு பெண்

ஆபாசமாக பேசி அவர்கள் வெளியிட்ட வீடியோக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த மாதிரி ஆபாச பேச்சுக்கள் வீடியோக்களினால், குழந்தைகள், மாணவர்கள் கெட்டுப்போக வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் சொல்லி வந்த நிலையில், ரவுடி பேபி சூர்யா கைதானார்.

 சைபர் கிரைம்

சைபர் கிரைம்

இந்நிலையில் இருவர் மீதும் கோவையை சேர்ந்த பெண் ஒருவர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.. அதில் தன்னையும், தனது குடும்பத்தினரையும் ஆபாசமாக பேசி வீடியோ பதிவிட்டு இருப்பதாக கொடுத்த புகாரை விசாரித்த கோவை சைபர் கிரைம் போலீசார் கடந்த ஜனவரி மாதம் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்... பிறகு, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் சிக்கந்தர்ஷா மீது மட்டும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

 ரவுடிபேபி சூர்யா

ரவுடிபேபி சூர்யா

இறுதியில், "ரவுடி பேபி" சூர்யா மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கோவை மாவட்ட எஸ்.பி, பரிந்துரை செய்திருந்ததை ஏற்று கலெக்டர் சமீரன், ரவுடிபேபி சூர்யா மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இந்நிலையில், மீண்டும் ஒரு புகார் சூர்யா தரப்பில் எழுந்துள்ளது.. ரவுடி பேபி சூர்யாவின் ஆதரவாளர்கள் தங்களை மிரட்டுவதாக கூறி ரவுடி பேபி சூர்யா மீது புகார் அளித்தவர்களும் அவர்களது ஆதரவாளர்களும் புகார் தெரிவித்துள்ளனர்.

யூடியூபர்கள்

யூடியூபர்கள்

கோவை மாவட்டத்தை சேர்ந்த முத்துரவி, திலகா தம்பதியினர் முதலில் புகார் அளித்த நிலையில் அவர்களுக்கு ஆதரவாக லாரன்ஸ் (மாற்று திறனாளி- யூடியூபர்), உட்பட சிலர் ஆதரவு தெரிவித்திருந்துள்ளனர். திலகா அளித்த புகாரில், "சூர்யாவின் ஆதரவாளர்கள் எங்களை தொலைபேசி மூலமாகவும் யூடியூப் மூலமாகவும் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள், எங்களை பற்றி அவர்களது சேனல்களில் தரக்குறைவாக பதிவிடுகிறார்கள். அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்கொலை

தற்கொலை

தமிழ்நாடு மட்டுமல்லாமல் மலேசியா ஆகிய இடங்களில் இருப்பவர்கள் சிலரும் அவர்களது யூடிப் சேனல்களில் எங்களை பற்றி இழிவாகவும் தவறுதலாகவும் பதிவிடுகிறார்கள். எங்களை மிரட்டி மன உளைச்சலுக்கு உள்ளாக்குகிறார்கள்.. இதனால் குடும்பத்துடன் சேர்ந்து தற்கொலை முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளோம். நான் இறந்துவிட்டதுபோல் சித்தரித்து அவதூறு பேசி வீடியோ வெளியிட்டுள்ளனர்..

 ஆபாசம்

ஆபாசம்

நான் இறந்ததாக கேக் வெட்டி கொண்டாடி வீடியோவையும் பதிவிட்டுள்ளனர். எனக்கு ஆதரவாக பேசும் பெண்களின் செல்போன் எண்களை, ஆபாச தொழில் செய்பவர்களாக சித்தரித்து இணையத்தில் பரப்பி ரவுடி பேபி சூர்யா ஆதரவாளர்கள் மன உளைச்சல்களை ஏற்படுத்தி வருகிறார்கள்" என்று அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து உரிய பாதுகாப்பு தருவதாக போலீசாரும் திலகாவுக்கு உறுதி அளித்துள்ளனர்.

English summary
what happened in rowdy baby suryas issue, and youtubers complained against surya supporters in coimbatore
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X