அறிவாலயத்தில் கறார் காட்டிய போலீஸ்! கடுகடுத்த கட்சிக்காரர்கள்! எஸ்கேப் ஆன முக்கியப் புள்ளிகள்!
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூற வந்த கட்சியினரிடம் காவல்துறையினர் கறார் காட்டியதால் வாக்குவாதம், தள்ளுமுள்ளு என அல்லோகலப்பட்டது அண்ணா அறிவாலயம்.
மேலும், தொண்டர்களை வரிசைப்படுத்தி அனுப்புவதற்காக அண்ணா அறிவாலயம் பின்புறம் அமைக்கப்பட்டிருந்த திரைமறைப்புத் தட்டிகளால் வழக்கமான கொண்டாட்டங்கள் களையிழந்து காணப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் கூட்டத்தையும், காவல்துறையினர் காட்டிய கெடுபிடிகளையும் பார்த்து திமுக முக்கியப் பிரமுகர்கள் பலர் ஸ்டாலினுக்கு வாழ்த்துச்சொல்லாமலேயே திரும்பிய நிகழ்வும் நடந்துள்ளது.

ஸ்டாலின் பிறந்தநாள்
முதலமைச்சர் ஸ்டாலினின் 69-வது பிறந்தநாள் விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி அண்ணா அறிவாலயத்தில் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை தொண்டர்களை சந்தித்து அவர்களின் வாழ்த்தை பெற்றுக்கொண்டார் முதல்வர் ஸ்டாலின். முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் ஸ்டாலின் கொண்டாடும் முதல் பிறந்தநாள் என்பதால், பாதுகாப்பு விவகாரத்தை முழுக்க முழுக்க காவல்துறை கவனித்துக்கொண்டது.. 500-க்கும் மேற்பட்ட போலீஸார் அண்ணா அறிவாலயத்தில் குவிக்கப்பட்டிருந்தனர்.

விவரம் தெரியவில்லை
இதில் விஷேசம் என்னவென்றால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பல காவலர்களுக்கு திமுக முக்கியப் பிரமுகர்கள் யார், எம்.பி. யார், சட்டமன்ற உறுப்பினர் யார், மாவட்டச் செயலாளர் யார் என்ற எந்த விவரம் தெரியாதது தான். திமுக அமைப்புச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.கே.எஸ்.இளங்கோவனையே காவலர்கள் தடுத்திய நிறுத்திய விவகாரம் தான் தலைமை நிலையச் செயலாளரான பூச்சி முருகனை டென்ஷன் ஆக்கியது.

காவலர்கள்
நுழைவு வாயிலில் நிற்கும் காவலர்கள் விவரம் தெரிந்தவர்களை பக்கத்தில் நிறுத்தி வைத்துக்கொள்ளுங்கள் என ஓபன் மைக்கிலேயே பூச்சி முருகன் அலறவிட்டார். இதேபோல் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கூற அண்ணா அறிவாலயம் வந்த போது, அவருக்கு கேட்டை ஓபன் செய்யாமல் காவலர்கள் இழுத்தடித்தனர். இதையடுத்து அவருடன் வந்த மாவட்டச் செயலாளர் ஜீவன், கேட்டை திறக்க முடியுமா முடியாதா என எகிறியவுடன் அங்கிருந்த டிசி ஒருவர் வந்து துரை வைகோவுக்கு வழி ஏற்படுத்திக்கொடுத்தார்.

தட்டி வைத்து அடைப்பு
இது போன்ற களேபரங்களை எல்லாம் பார்த்த திமுக முக்கியப் பிரமுகர்கள் பலர் ஸ்டாலினுக்கு கொடுப்பதற்காக கொண்டு வந்திருந்த புத்தகங்களையும், சால்வைகளையும், தங்கள் கையுடன் எடுத்துக்கொண்டு அறிவாலயத்தை விட்டு ஓட்டம் பிடித்தனர். அதேபோல் யார் யார் வந்திருக்கிறார்கள் என்பதை பத்திரிகையாளர்கள் கூட பார்வையிட முடியாதபடி திரைமறைப்பு தட்டிகளை வைத்து அடைத்திருந்தனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications