திமுக லீடிங் இருக்கட்டும்! விக்கிரவாண்டி கொடுத்த பெரிய மெசேஜ்.. ஸ்டாலின் உடனே சுதாரிக்கணும்
சென்னை: விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தலில் திமுக கிளியராக முன்னிலை வகித்து வருகிறது. கிட்டத்தட்ட 9100 வாக்குகள் பெற்று திமுக அன்னியூர் சிவா முன்னிலை வகிக்கிறார். பாமக அன்புமணி 4080 வாக்குகள் பெற்றுள்ளார். நாம் தமிழர் அபிராமி 290 வாக்குகளே பெற்றுள்ளார். தபால் வாக்குகளிலும் திமுக கடைசியில் அதிக வாக்குகளை வென்றது.
திமுக இந்த தேர்தலில் முன்னிலை வகித்தாலும் தபால் வாக்குகளில் தொடக்கத்தில் மட்டும் கொஞ்சம் சரிவை சந்தித்தது. இங்கே 798 வாக்குகள் தபாலில் பதிவானது. ஆனால் அதில் திமுக தொடக்கத்தில் முன்னிலை வகிக்க அதன்பின் பாமக கொஞ்சம் முன்னிலை வகித்தது. அதன்பின் மீண்டும் திமுக முன்னிலை பெற்றது. திமுக தொடக்கத்தில் 80 வாக்குகள் பெற, சில நிமிடங்களில் பாமகவும் 90 வாக்குகளை பெற்று முன்னிலை வந்தது.

இப்படி மாறி மாறி முன்னிலை பெற கடைசியில் அதிகமான தபால் வாக்குகளை திமுகவே வென்றது. கிட்டத்தட்ட 415 தபால் வாக்குகளை திமுக பெற்றது. ஆனாலும் திமுக இதில் சுதாரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் 95 சதவீத ஆதரவு எப்போதுமே திமுகவுக்குத்தான் கிடைக்கும். ஆனால், ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் அரசு ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. கடந்த லோக்சபா தேர்தலிலேயே இது திமுகவிற்கு எதிராக இருந்தது.
திமுக அரசு ஊழியர்கள்: கடந்த லோக்சபா தேர்தலிலேயே, அதனால் கடும் அதிருப்தியடைந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து இந்த தேர்தலில் திமுகவுக்கு எதிராக முடிவெடுக்க வேண்டும் என தீர்மானித்திருந்தனர். அந்த வகையில் அவர்களின் ஆதரவு பாஜகவுக்கு கிடைத்திருக்கிறது.
அதற்கு உதாரணமாக, தபால் வாக்குகளைச் சுட்டிக்காட்டுகிறார்கள் அரசு ஊழியர்கள். தமிழகம் முழுவதும் தேர்தல் பணிகளில் ஈடுபட்ட அரசு ஊழியர்களும் வயதில் மூத்தவர்களும் தபால் வாக்குகள் பதிவு செய்ய வழி வகை உண்டு. அந்த வகையில், முதியவர்கள் வாக்களித்தனர். எண்ணிக்கையின் படி இது மிக குறைவு. ஆனால், தேர்தல் பணிகளில் ஈடுப்பட்ட அரசு ஊழியர்களின் எண்ணிக்கை அதிகம். அவர்கள் முழுமையாக தபால் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் பதிவான மொத்த தபால் வாக்குகளின் எண்ணிக்கை 2,48,416. இதில் திமுக கூட்டணிக்கு 1,11,150 வாக்குகளும், பாஜக கூட்டணிக்கு 62,707 வாக்குகளும், அதிமுக கூட்டணிக்கு 50, 241 வாக்குகளும், நாம் தமிழர் கட்சிக்கு 24,318 வாக்குகளும் கிடைத்துள்ளன.
பொதுவாக, திமுக 95 சதவீத வாக்குகளும், மீதமுள்ள 5 சதவீத வாக்குகள் அதிமுக உள்ளிட்ட மற்ற கட்சிகளுக்கும் கிடைக்கும். அதனால் திமுக வாங்கும் தபால் வாக்குகளுக்கும், அடுத்த நிலையில் வருகிற அதிமுக வாங்கும் தபால் வாக்குகளுக்கும் இடைவெளி பெரிதாக இருக்கும். ஆனால், இந்த முறை பதிவான தபால் வாக்குகளில் 50 சதவீதத்துக்கும் குறைவாகத் தான் திமுகவுக்கு கிடைத்துள்ளது. அதேபோல, தபால் வாக்குகளில் எப்போதும் இரண்டாவது இடத்தில் இருக்கும் அதிமுக இந்த முறை மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அதிமுகவை வீழ்த்தி இரண்டாம் இடத்தில் பாஜக வந்துள்ளது.
இப்போது விக்கிரவாண்டியிலும் திமுக தபால் வாக்குகளில் கொஞ்சம் சரிவை சந்தித்தது அந்த கட்சிக்கு பெரிய சவாலாக, எச்சரிக்கையாக வந்துள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications