3வது மாடியில் நடந்தது என்ன? ஒரு இடம் விடாமல் சல்லடை போட்ட சிபிசிஐடி! கள்ளக்குறிச்சி பள்ளியில் பரபர!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி விழுந்ததாக கூறப்படும் 3வது மாடியில் நேற்றும், இன்றும் சிபிசிஐடி போலீசார் சோதனை செய்தனர்.

கள்ளக்குறிச்சியில் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவி கடந்த ஜூலை 12ம் தேதி பலியானார். இவர் தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் கூறி உள்ளது. ஆனால் மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மாணவியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

இது தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை 6 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலை

கொலை

இந்த நிலையில் 3வது மாடியில் நேற்று சிபிசிஐடி போலீசார் சோதனை செய்தனர். நேற்று மாடியில் இருந்து பொம்மை ஒன்றை தூக்கி வீசி சோதனை செய்தனர். மாணவியின் எடைக்கு இணையாக பொம்மை ஒன்றை உருவாக்கி அதை மாடியில் இருந்து போட்டனர். மாணவியின் எடைக்கு துணியை வாங்கி. அதை சுற்றி சுற்றி பொம்மை போல உருவாக்கி, மாடியில் இருந்து வீசி உள்ளனர்.

சிபிசிஐடி

சிபிசிஐடி

பள்ளி தரப்பில் மாணவி மரத்தின் மீது மோதி கீழே விழுந்ததாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிபிசிஐடி போலீசார் மாணவி எப்படி விழுந்தார் என்பதை கண்டுபிடிக்க மீண்டும் மீண்டும் பொம்மையை வீசி எறிந்து சோதனை செய்தனர். எப்படி விழுந்தால் காயம் ஏற்படும் என்று சோதனை செய்தனர். இதை பிரேத பரிசோதனையில் பதிவான காயங்களுடன் ஒப்பிடும் வகையில் சிபிசிஐடி போலீசார் இந்த பொம்மையை வைத்து சோதனை செய்தனர்.

 மாணவி மரணம்

மாணவி மரணம்

இந்த நிலையில் இன்றும் மூன்றாவது மாடிக்கு சென்று சிபிசிஐடி அதிகாரிகள் சோதனை செய்தனர். 3 மணி நேரம் மூன்றாவது மாடியில் சோதனை செய்தனர். 3வது மாடியில் சிசிடிவி கேமரா இல்லை. அது ஹாஸ்டல் என்பதால் அங்கு கேமரா இல்லை. அதனால் அங்கே என்ன நடந்தது என்று தெரியாத நிலை உள்ளது. இதன் காரணமாக அங்கு சிபிசிஐடி சின்ன தடயம் கிடைக்காதா என்ற நம்பிக்கையில் சோதனை செய்து வருகின்றன. எல்லா அறைகளையும் சல்லடை போட்டு சிபிசிஐடி சோதனை செய்து வருகிறது.

Recommended Video

    கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி எனக்கூறி பகிரப்படும் 2 புதிய CCTV காட்சிகள் உண்மை என்ன?
     மொட்டை மாடி

    மொட்டை மாடி

    அதேபோல் இன்று மொட்டை மாடியிலும் போலீசார் சோதனை செய்தனர். பள்ளி தரப்பு 3வது மாடியில் இருந்து மாணவி குதித்ததாக சொல்கிறது. ஆனால் ஒருவேளை மொட்டை மாடியில் இருந்து விழுந்திருக்கலாமோ என்று சிபிசிஐடி சந்தேகிக்கிறது. இதனால் அங்கும் சிபிசிஐடி போலீசார் இன்று தீவிர சோதனை செய்தனர். இரண்டு மாடிகளில் இருந்து சிறு சிறு தடயங்களை திரட்டி அதை பதிவு செய்தனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+