நடுவானில்.. சென்னைக்காரருக்கு மாரடைப்பு.. சென்னையில் அவசரமாக தரையிறங்கிய விமானத்தில் ஷாக்.. பரிதாபம்
சென்னை: சென்னை நோக்கி விமானத்தில் பயணித்த முதியவர் மாரடைப்பால் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விமானம் நடுவானில் பறந்துக்கொண்டிருந்தபோதே ஜெகநாதனுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. விமான பணிப்பெண்கள் அவருக்கு உடனடியாக முதலுதவி அளித்தும் அது பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். அவருக்கு முதலில் நெஞ்சு வலி ஏற்பட்டு உள்ளது.
ஜெர்மனியின் ஃப்ராங்க ஃபார்ட் நகரில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. பொதுவாக விமானங்களில் அவசர உதவிகள் செய்ய பணிப்பெண்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும். ஆனால் முழுமையான சிகிச்சைகளை விமானத்தில் வழங்க முடியாது.

விமானத்தில் மருத்துவர்கள் இருந்தால்.. பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சைகள் வழங்கப்படும். அதுவே விமானத்தில் மருத்துவர் இல்லாத பட்சத்தில் விமானிகள் இரண்டு விதமான நடவாடிக்கை எடுப்பார்கள். ஒன்று வந்த விமான நிலையத்திற்கே திரும்பி செல்வார்கள். இல்லையென்றால் இறங்க வேண்டிய விமான நிலையம் அருகிலேயே இருந்தால் அங்கேயே தரையிறங்குவார்கள்.
எந்த விமான நிலையத்தின் தூரம் குறைவாக உள்ளதோ அங்கே தரையிறங்குவார்கள். இது எவதுமே இல்லை என்றாலும் எந்த விமான நிலையம் அருகில் உள்ளதோ அங்கே தரையிறங்குவார்கள். விமான பயணம், நேரத்திற்கு செல்வது என்பதை எல்லாம் தாண்டி ஒருவரின் உயிர்தான் முக்கியம் என்பதே விமான பயணத்தின் விதி ஆகும்.
என்ன நடந்தது? இப்படிப்பட்ட நிலையில்தான் சென்னை நோக்கி விமானத்தில் பயணித்த முதியவர் மாரடைப்பால் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பான அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜெர்மனியின் ஃப்ராங்க ஃபார்ட் நகரில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. சென்னை நோக்கி பயணித்த ஆழ்வார்ப்பேட்டையை சேர்ந்த ஜெகநாதன் (92) என்ற முதியவர் மாரடைப்பு ஏற்பட்டு பலியாகி உள்ளார்.
விமானம் நடுவானில் பறந்துக்கொண்டிருந்தபோதே ஜெகநாதனுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. விமான பணிப்பெண்கள் அவருக்கு உடனடியாக முதலுதவி அளித்தும் அது பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். அவருக்கு முதலில் நெஞ்சு வலி ஏற்பட்டு உள்ளது.
என்ன நடந்தது? அவர் அசௌகரியத்தை உணர்ந்தபோது விமானப் பணிப்பெண்கள் முதலுதவி அளித்து மருத்துவ அவசரநிலை குறித்து விமானியிடம் தெரிவித்தனர். சென்னை விமான நிலையத்தில் மருத்துவ வசதிகளை செய்யுமாறு விமானி உடனடியாக விமான நிலைய போக்குவரத்துக் கட்டுப்பாட்டிற்கு (ஏடிசி) தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
நள்ளிரவில் விமானம் தரையிறங்கியதும் விமான நிலைய மருத்துவக் குழுவினர் விமானத்திற்குள் விரைந்தனர். ஜெகநாதன் நடுவானில் மாரடைப்பு காரணமாக இறந்ததாக அவரை சோதனை மருத்துவக் குழு தெரிவித்துள்ளது. பின்னர் விமான நிலைய போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நடுவானில் பயணி ஒருவர் இறந்ததால், விமானம் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு, ஏற்பாடுகள் செய்யப்பட்ட பிறகு, பயணிகளை அடுத்த பயணத்திற்கு ஏற்றிச் செல்லுமாறு விமானிகள் அறிவித்தனர். சென்னையில் இருந்து மீண்டும் அந்த விமானம் பிராங்ப்ரூட் சென்றது. அந்த விமானத்தில் சுமார் 196 பயணிகள் ஏறியிருந்தனர், சென்னையில் இருந்து அதிகாலை 1.50 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் சுத்தம் செய்யும் பணிகள் காரணமாக அதிகாலை 4.20 மணிக்கு புறப்பட்டது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications