நெஞ்சு வலி இல்லை! ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நீர்ச்சத்து குறைப்பட்டால் சோர்வு! மகன் அமீன் விளக்கம்
சென்னை: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு காலை முதலே நீர்ச்சத்து குறைபாட்டால் உடல் சோர்வாக இருப்பதை உணர்ந்த அவர் மருத்துவமனையில் வழக்கமான பரிசோதனைகளை மேற்கொண்டு நலமுடன் இருக்கிறார் என அவருடைய மகன் ஏ.ஆர்.அமீன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமீன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: அன்பு கொண்ட ரசிகர்கள், நலம்விரும்பிகளுக்கு உங்களது அன்புக்கும், பிரார்த்தனைகளுக்கும் ஆதரவுக்கும் நான் நன்றி கடன்பட்டுள்ளேன்.

அப்பாவுக்கு நீர்ச்சத்து குறைப்பாட்டால் அவர் சோர்வாக இருப்பதாக உணர்ந்தார். இதற்காக மருத்துவமனைக்கு சென்று அங்கு அவருக்கு சில மருத்துவ பரிசோதனைகள் எடுக்கப்பட்டன. தற்போது அவர் நலமுடன் உள்ளார்.
உங்களது அன்பான வார்த்தைகளும் ஆசிர்வாதங்களும் அப்பாவின் உடல்நலனை தேற்றின. உங்கள் அனைவருக்குமே நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என அமீன் தெரிவித்திருந்தார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு லண்டனில் இருந்து மும்பை வழியாக நேற்று இரவுதான் சென்னை திரும்பினார். தூங்கி காலை எழுந்த போதிலிருந்தே அவருக்கு உடலில் அசவுகரியம் இருந்து வந்தது.
இதையடுத்து அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு வழக்கமான பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இந்த நிலையில் அவருக்கு நெஞ்சு வலி என சில தகவல்கள் வந்தன. அதையே ஊடகங்களும் தெரிவித்திருந்தன.
ஆனால் அவருக்கு நெஞ்சு வலி இல்லை என்பது அமீனின் பதிவில் இருந்து தெரிகிறது. அது போல் மருத்துவமனையில் இருந்து ஏ.ஆர்.ரஹ்மான் வீடு திரும்பிய நிலையில் அப்பல்லோ மருத்துவ அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அவருக்கு சோர்வு காணப்பட்டது. அவர் தற்போது நலமுடன் இருக்கிறார். அவருக்கு வழக்கமான உடல் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து அவர் வீடு திரும்பினார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் ரமலான் நோன்பு கடைப்பிடித்து வருகிறார். அவருடன் மகன் அமீனும் மகள் இஸ்ரத்தும் சகோதரி ரஹானாவும் மருத்துவமனைக்கு வந்திருந்தனர்.
இந்த நிலையில் ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி பாத்திமா கூறுகையில் தொடர் பயணங்களால் மிகவும் களைப்பாக இருந்தார் ரஹ்மான். அதற்காக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு பயப்படும் படியாக உடம்புக்கு ஒன்றுமில்லை. இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.
-
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications