Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை விடுதியில் போதையில் மயங்கி கிடந்த வேலூர் இளம் பெண்.. நண்பனுக்கு விருந்தாக்கிய தோழி

Subscribe to Oneindia Tamil

சென்னை: வேலூரை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர், சமீபத்தில் சென்னை ஆயிரம்விளக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போதை மயக்கத்தில் இருந்தபோது, தனக்கு நேர்ந்த அத்துமீறல் குறித்து போலீசில் புகார் அளித்தார். நண்பனுக்கு விருந்தாக்கிய பெண்ணின் தோழியும், விவசாயத்துறை ஊழியரும் இப்போது கைது செய்யப்பட்டுள்ளனர். என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

போதைப்பழக்கம் உண்மையிலேயே நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதை உணர வைக்காது. அளவுக்கு மீறி மதுபோதையில் ஆண் இருந்தாலும் சரி, பெண்இருந்தாலும் சரி, அவர்களின் ஒழுக்கமே கேள்விக்குறியாகிவிடும். தன்னிலை மறந்து, நடத்தை மாறி தவறான பாதைக்கு போக வாய்ப்பு உள்ளது. அல்லது தவறான பாதையில் தள்ளிவிடப்படவும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக பெண்கள் மதுபோதைக்கு அடிமையானால், அவர்களிடம், அவர்களுக்கே தெரியாத நபர்கள் கூட அத்துமீறலில் ஈடுபடும் சம்பவங்களும் நடக்கிறது. அப்படித்தான் சென்னை விடுதியில் நடந்துள்ளது.

What happened to a Vellore woman who drank alcohol with her friend in Chennai

வேலூர் இளம் பெண்

வேலூரை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர், சமீபத்தில் சென்னை ஆயிரம்விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்றார். அவர் போதை மயக்கத்தில் இருந்தபோது, தனக்கு நேர்ந்த அத்துமீறல் குறித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறுகையில், "எனது சொந்த ஊர் வேலூர், எனக்கு 23 வயது ஆகிறது. நான் அங்கு பெற்றோருடன் வசித்து வருகிறேன். பட்டப்படிப்பு படித்து முடித்துவிட்டேன். சென்னையில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பணிக்கு சேர்ந்தேன்.

கூடா நட்பு

வேலைக்கு சேர்ந்த இடத்தின் அருகிலேயே, பெண்கள் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியிருந்தேன். 6 மாதங்கள் அங்கு வேலை பார்த்தேன். அதன்பிறகு அந்த வேலை பிடிக்கவில்லை.. வேலையை ராஜினாமா செய்துவிட்டேன். விடுதியில் தங்கியிருந்த காலத்தில் அங்கிருந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த கூடா நட்பின் காரணமாக எனக்கு மது அருந்தும் பழக்கமும், புகைப்பிடிக்கும் பழக்கமும் ஏற்பட்டது. என்னுடன் வேலை பார்த்த புளோரிடா என்பவர் எனக்கு நல்ல தோழி ஆவார். அவருக்கும் மது அருந்தும் பழக்கம் இருந்தது. நாங்கள் இருவரும் தனியாக சென்று விடுதியில் அறை எடுத்து தங்க உள்ளோம். அங்கு மது அருந்துவோம்.

இரண்டு இளைஞர்கள்

கடந்த ஜூன் 27-ந் தேதி புளோரிடா என்னை மது விருந்துக்கு அழைத்தார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள விடுதி ஒன்றில் அறை எடுத்தோம். மதிய உணவுக்கு பிறகு நான் அந்த அறைக்கு சென்றுவிட்டேன். புளோரிடா தனியாக வராமல் தன்னுடன் இரண்டு இளைஞர்களையும் அழைத்து வந்திருந்தார்.

மது விருந்து

அவர்களில் ஒருவர் மனாசே (வயது 29). இன்னொருவர் பெயர் ஆக்னசே (30). அவர்கள் இருவரும் தன்னுடைய நண்பர்கள் என்றும், அவர்களை நம்பலாம் என்றும் புளோரிடா என்னிடம் தெரிவித்தார். மனாசே சென்னையில் உள்ள விவசாயத்துறை அலுவலகம் ஒன்றில் ஊழியராக வேலை பார்க்கிறார். ஆக்னசே சொந்தமாக சென்னையில் தொழில் செய்வதாக தெரிவித்தார். மதுவிருந்தில் பங்கேற்றோம். ஆண்கள் இருவரும் எங்களுடன் உட்கார்ந்து மது அருந்தினார்கள். வயிறு முட்ட குடித்தோம். அதன்பிறகு என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லை.

அதிகாலையில் ஆடையில்லை

அதிகாலை 4.30 மணியளவில் நான், போதை மயக்கத்தில் இருந்து எழுந்தேன். எனது ஆடைகள் கழற்றப்பட்டிருந்தது. ஆடை இல்லாத கோலத்தில் படுத்திருந்தேன். என்னுடன், மனாசேவும் ஆடை இல்லாத கோலத்தில் ஒன்றாக படுத்திருந்தார். இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன். அவரை தட்டி எழுப்பி சண்டை போட்டேன். அவரும், போதை மயக்கத்தில் ஒரே கட்டிலில் தூங்கி விட்டதாக என்னிடம் மன்னிப்பு கேட்டு காலில் விழுந்தார். பக்கத்து அறையில் புளோரிடாவும் ஆக்னசேவுடன் தங்கி இருந்தார். நான் புளோரிடாவிடம் சண்டை போட்டேன். அவரும் என்ன நடந்தது என்று தனக்கு தெரியாது என்று தப்பித்தார்.

அத்துமீறல்

என்னிடம் மனாசே அத்துமீறிவிட்டார் என்பதை உணர்ந்தேன். வேலூருக்கு சென்றேன். அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். டாக்டர்கள் என்னை பரிசோதனை செய்துவிட்டு, என்னை மிகமோசமான முறையில் அத்துமீறியிருக்கிறார்கள் என்று தெரிவித்தனர்.
எனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து தெரிந்து கொண்ட எனது தாயார் மிகவும் கவலை அடைந்தார். நான் சிகிச்சை பெற்ற மருத்துவமனை மூலமாக வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் என்னை விசாரித்தார்கள். அதன்பிறகு, என்னை சென்னைக்கு அனுப்பி வைத்தனர். எனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து உரிய விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்". இவ்வாறு கூறியிருந்தார்.


விவசாய ஊழியர் கைது

இதையடுத்து ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன் சித்ரா, பல்வேறு சட்டப்பிரிவு ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்தார். போதை மயக்கத்தில் இருந்த இளம்பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக விவசாயத்துறை ஊழியர் மனாசே கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் தோழியான புளோரிடாவையும் கைது செய்துள்ளார்கள். இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+