ஓசூரில் கணவனை பிரிந்து வாழ்ந்த மஞ்சுளா.. லட்சங்களில் வாழ்ந்த காதலன்.. கனவிலும் நினைக்காத சம்பவம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மாரசந்திரத்தை சேர்ந்த ஹரீஷ் என்பவர் அதிமுக பிரமுகர் ஆவார். இவரது உடல் கடந்த நவம்பர் 3ம் தேதி கண்டெடுக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் போலீசார் விசாரித்த போது கள்ளக்காதலி மஞ்சுளா என்பவருக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து மஞ்சுளாவை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரித்த போது பல்வேறு தகவல்கள் தெரியவந்தது. இதுபற்றி பார்ப்போம்.
கள்ளக்காதல் என்பது சமூகத்தில் இன்று பெரிய சாபக்கேடாக இருக்கிறது. திருமணத்தை மீறிய உறவு காரணமாக பல்வேறு குடும்பங்களில் பெரிய சிக்கல்கள் ஏற்படுகின்றன. பல குற்றச்சம்பவங்களுக்கு கள்ளக்காதல் இன்றைக்கு காரணமாக இருக்கிறது. ஓசூரில் அதிமுக பிரமுகருக்கு கள்ளக்காதலியால் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மாரசந்திரத்தை சேர்ந்த 32 வயது நபர் ஹரீஷ். இவர் அ.தி.மு.க. பிரமுகர் ஆவார். கடந்த 3-ந் தேதி காலை இவர், வானவில் நகர் - அண்ணாமலை நகர் இடையே கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதுதொடர்பாக அட்கோ போலீசார் விசாரித்து வருகிறார்கள். போலீசாரின் விசாரணையில் கடைசியாக கடந்த 2-ந் தேதி இரவு மஞ்சுளா என்பவர் வீட்டுக்குதான் ஹரீஷ் வந்துள்ளார் என்பது தெரியவந்தது. இதனால் மஞ்சுளாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த மஞ்சுளா யார் என்றால் ஹரீசின் கள்ளக்காதலி என்பது தெரிவந்தது. விசாரணையில் போலீசாருக்கு பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளதாம்.
ஓசூரைச் சேர்ந்த 35 வயதாகும் மஞ்சுளா கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் ஹரீசுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளதாம்.ஹரீஷ்க்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.. மஞ்சுளா வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தார். மஞ்சுளாவிடம் பணம் இருப்பதை அறிந்த ஹரீஷ் தனக்கு கடன் இருப்பதாக கூறி அவரிடம் அடிக்கடி பணம் கேட்டு வந்திருக்கிறார். இப்படி ரூ.80 லட்சம் வரையில் மஞ்சுளா ஹரீசுக்கு பணம் கொடுத்திருக்கிறார். ஒரு கட்டத்தில் ஹரீஷ் மீது வெறுப்படைந்த மஞ்சுளா அவரிடம் தகராறு செய்தாராம். இதனால் ஏற்பட்ட பிரச்சினையில் கடந்த பிப்ரவரி மாதம் மஞ்சுளா ஹரீஷ் மீது போலீசில் புகார் அளித்தார்.
பின்னர் இருவரும் சமாதானம் ஆனார்கள். ஆனாலும் மீண்டும் ஹரீஷ் மஞ்சுளாவிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்ய ஆரம்பித்தாராம். இதனால் ஹரீஷ் மீது வெறுப்படைந்த மஞ்சுளா அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தாராம். இதற்காக தனக்கு தெரிந்த ஓசூர் அருகே மாலிகிரியை சேர்ந்த 24 வயதாகும் நண்பர் மோனிஷ் என்பவரை அணுகினார். அப்போது ரூ.10 லட்சம் கேட்ட மோனிசுக்கு முன்பணமாக ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் மஞ்சுளா கொடுத்தாராம். பணத்தை வாங்கி கொண்ட மோனிஷ் கூலிப்படையை தயார் செய்தாராம்.
அதன்படி சம்பவத்தன்று மஞ்சுளா வீட்டில் சாப்பிட்டு விட்டு ஸ்கூட்டரில் திரும்பிய ஹரீசை கூலிப்படையினர் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொன்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஹரீசை கொலை செய்ய திட்டமிட்டு கொடுத்த மஞ்சுளா, கூலிப்படையை தயார் செய்த மோனிஷ், கூலிப்படையை சேர்ந்த 5 பேரை நேற்று போலீசார் கைது செய்துள்ளனர்.
-
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications