"3 ஆண்ட்டி"களின் அட்ராசிட்டி.. பேராசிரியரை நிர்வாணமாக்கி, பக்கத்தில் படுத்து.. மொத்தமா அள்ளிய போலீஸ்

பேராசிரியரை மிரட்டி பணம் பறித்த 3 பெண்களை போலீசார் கைது செய்தனர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: படிக்காத நபர் என்றால் பரவாயில்லை.. ஒரு பேராசிரியரே இப்படி எச்சரிக்கை உணர்வு இல்லாமல், 3 பெண்களிடம் ஏமாந்துள்ள சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்.. 60 வயதாகிறது.. தரமணியில் உள்ள ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கு அயனாவரத்தில் சொந்தமாக சில வீடுகள் உள்ளன... அவைகளை வாடகைக்கு விட்டிருக்கிறார்.. அதில் ஒருவர்தான் ஆர்த்தி... இந்த ஆர்த்தி மூலம் ராஜேந்திரனுக்கு அறிமுகமானவர் ராதா.

 பேராசிரியர் ராதா

பேராசிரியர் ராதா

40 வயதாகிறது ராதாவுக்கு.. ராஜேந்திரனும், ராதாவும் நட்பாக பேசி வந்துள்ளனர்.. எனினும் பேராசிரியர் நல்ல வசதியாக இருப்பதை அறிந்த ராதா, அவரிடம் பணத்தை கறக்க முடிவு செய்தார்.. அதன்படி, புதிதாக ஆரம்பித்துள்ள பிசினஸுக்கு பணம் தேவை என்று சொல்லி, கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை வாங்கி உள்ளார்.. கிட்டத்தட்ட நான்கரை லட்சம் ரூபாய் வரைக்கும் ராஜேந்திரனிடம் பணம் வாங்கியிருக்கிறார்.

 இழுத்தடிப்பு

இழுத்தடிப்பு

சிறிது நாள் கழித்து, கொடுத்த பணத்தை ராஜேந்திரன் திரும்ப கேட்டுள்ளார்.. ஆனால், ராதா பணத்தை தரவில்லை.. இதோ, அதோ என்று இழுத்தடித்து கொண்டே வந்துள்ளார்.. ஒருகட்டத்தில் தான் ஏமாந்து போயுள்ளோம் என்பதை உணர்ந்த பேராசிரியர், அதிர்ச்சி அடைந்து போலீஸ் ஸ்டேஷனில் புகார் தந்தார்.. இது தொடர்பான வழக்கு விசாரணையும் சைதாப்பேட்டை கோர்ட்டில் நடந்து வருகிறது.

 தோழி வீடு

தோழி வீடு

இதையடுத்து, ராதாவுக்கு நீதிமன்றம் அரெஸ்ட் வாரண்ட்டை பிறப்பிக்கவும், பயந்துபோன ராதா, பேராசிரியருக்கு போனில் சமாதானம் பேசியுள்ளார்.. "என்னை மன்னித்துவிடுங்கள், பணம் தராமல் உங்களை கோபப்படுத்திவிட்டேன், உங்களுக்கு தர வேண்டிய பணம் உள்ளது.. நேரில் வந்து வாங்கிக்கொள்ளுங்கள்" என்று சொல்லி, கொடுங்கையூரில் உள்ள ராதாவின் தோழி வீட்டுக்கு ராஜேந்திரனை வர சொன்னார்.. பேராசிரியரும் ராதாவின் பேச்சை நம்பி தோழி வீட்டுக்கு தனியாக போனார்..

ஜூஸ்

ஜூஸ்

அங்கே ராதாவும் அவரது தோழிகளும், வீட்டுக்கு வந்தவருக்கு ஜூஸ் தந்தனர்.. பேராசிரியரும் அதை வாங்கி குடித்து, அடுத்த சில நிமிடங்களில் மயங்கி விழுந்துவிட்டார்.. உடனே, பேராசிரியரை அரை நிர்வாணமாக்கிவிட்டு அவரது பக்கத்தில் தோழியை படுக்க சொல்லியுள்ளார் ராதா.. அதை வீடியோவும் எடுத்து வைத்துக்கொண்டார்... சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்த பிறகு, இந்த விடியோவை பேராசிரியரிடம் காட்டி, 10 லட்சம் ரூபாயை உடனே தருமாறு ராதா மிரட்ட ஆரம்பித்தார்.

 புஷ்பா

புஷ்பா

இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன், கொடுங்கையூர் போலீசில் புகார் தந்தார்.. அந்த புகாரின்பேரில் ராதாவை பிடித்து போலீசார் விசாரித்தபோது, அனைத்து உண்மைகளையும் சொல்லி விட்டார்.. ஜூஸில் மயக்க மருந்து தந்து, பேராசிரியர் அருகில் படுத்தது வரை உதவியாக இருந்த லட்சுமி என்ற 30 வயது பெண், கணவர் முருகன் மற்றும் 49 வயதான புஷ்பா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.. கூட்டு சதி, பண மோசடி, மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்... முக்கியமாக ராதாவும் கைதாகி உள்ளார்..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+