ஒரு சின்ன கெமிக்கல் ரியாக்சன்.. கலாபவன் மணியின் வாழ்க்கையையே முடித்துவிட்டதே.. இதை நோட் பண்ணுங்க!
சென்னை: நடிகர் கலாபவன் மணி மரணம் தொடர்பான விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்துள்ளன.
நடிகர் கலாபவன் மணி இறந்த போது அவரின் மரணம் குறித்து பல யூகங்கள் எழுந்தன. அவர் கொலை செய்யப்பட்டதாக.. முக்கியமாக ஸ்லோ பாய்சன் கொடுத்து கொலை செய்யப்பட்டதாக புகார் வைக்கப்பட்டது. அவரின் சொத்துக்களை திருட வேலை ஆட்களே ஸ்லோ பாய்சன் வைத்து கொலை செய்ததாக புகார் வைக்கப்பட்டது.

இந்த நிலையில்தான் இந்த வழக்கை விசாரிக்கும் குழுவில் இடம்பெற்றிருந்த பிஎன் உன்னிராஜன் ஐபிஎஸ், நடிகர் கலாபவன் மணியின் மரணத்திற்கான உண்மையான காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
கெஸ்ட் ஹவுசில் மது: கேரள ஊடகங்களுக்கு அவர் அளித்த பேட்டியில், 'அவரின் வீட்டில், கெஸ்ட் ஹவுசில் கண்டெடுக்கப்பட்ட அனைத்து பொருட்களும் மீட்கப்பட்டு, அங்கு இருந்த நண்பர்கள் ஜாபர் இடுக்கி, தரிகிடா சாபு மற்றும் மணியைப் பார்க்க வந்தவர்கள் உட்பட அனைவரிடமும் விரிவான வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
அவரின் உடல் உறுப்புகள் பல முறை மருத்துவர்கள் மூலம் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டது. மணியின் ரத்தத்தில் மெத்தில் ஆல்கஹால் கலந்துள்ளது. அதுதான் மரணத்திற்கு காரணம். பொதுவாக மது அருந்தினால் ரத்தத்தில் எத்தில் ஆல்கஹால் கலந்திருக்கும். மெத்தில் ஆல்கஹால் பொதுவாக டர்பெண்டைன் அல்லது பெயிண்ட் ரிமூவரில் காணப்படும். இது அறுவை சிகிச்சை ரிமூவர் என்று அழைக்கப்படும்.
உன்னிராஜன், மெத்தில் ஆல்கஹால் உட்கொள்வதற்கு ஏற்றது அல்ல. 100 மில்லி இரத்தத்தில் 30 மில்லிகிராம் அளவுக்கு அதிகமாக இருந்தால் ஆபத்தான வரம்பைக் மீறிவிட்டதாக அர்த்தம். அவரின் உடலில் அப்படித்தான் ஆபத்தை மீறிய அளவிற்கு மெத்தில் ஆல்கஹால் இருந்துள்ளது.
அரக்கு வகை மதுபானம் அல்லது காய்ச்சிய சாராயம் உட்கொள்வது உட்பட பல்வேறு சாத்தியக்கூறுகளை பற்றி விசாரணை செய்தோம். இதில்தான் மணி மூன்று மாதங்களுக்கு முன்பு அரக்கு வகை மது சாப்பிட்டது தெரியவந்தது. விசாரணையில் மணியின் இரத்தத்தில் பூச்சிக்கொல்லிகளின் தடயங்கள் கண்டறியப்பட்டது. இது பச்சை காய்கறிகளை அவர் உட்கொண்டதால் இந்த பூச்சிக்கொல்லிகள் இருந்ததா என்றும் விசாரணை செய்யப்பட்டது.
இந்த விசாரணையில் மணி நாள்பட்ட சர்க்கரை நோயாளி என்பது தெரியவந்தது. நீரிழிவு நோய்க்கு அவர் பயன்படுத்தும் மாத்திரை உடலில் இருந்துள்ளது. இது மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டது. இந்த மாத்திரையுடன் ஆல்கஹால் எடுக்கக்கூடாது. அவ்வாறு செய்தால்.. அதன் மூலம், மருந்திற்கும் மதுவிற்கும் இடையே ஒரு இரசாயன எதிர்வினை ஏற்படும். இது மெத்தில் ஆல்கஹாலை உருவாக்கும் வாய்ப்புகள் உள்ளன.
அது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். இந்த மாத்திரை காலையிலும் மாலையிலும் எடுக்கப்படுகிறது. அன்றைய தினம் காலை, மாத்திரையை எடுத்துக்கொண்டார். அதே நாள் அவர் அரக்கு வகை மது சாப்பிட்டு இருக்கிறார். இதுவே எதிர்வினையை ஏற்படுத்தி அவரின் உடலில் ஆபத்தை ஏற்படுத்தி உள்ளது என்று கேரள ஐபிஎஸ் அதிகாரி உன்னிராஜன் தகவல் தெரிவித்துள்ளார்.
பீர் காரணம்: தினசரி 12 முதல் 13 பாட்டில் பீர் குடித்ததே அவர் மரணத்துக்கு காரணம் என கேரள ஐபிஎஸ் அதிகாரி உன்னிராஜன் தகவல் வெளியிட்டுள்ளார். கல்லீரல் செயலிழந்த நிலையிலும் அளவுக்கு அதிகமாக பீர் குடிக்கும் பழக்கத்தை கலாபவன் மணி கைவிடவில்லை.
கல்லீரல் செயலிழந்து ரத்த வாந்தி எடுத்தபோதும், பீர் குடிப்பதை அவர் நிறுத்தவில்லை என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மரணம் நடந்த 2016 மார்ச் 6ம் தேதியும் கலாபவன் மணி 12 பாட்டில் பீர் குடித்துள்ளார். அதில் மெத்தில் ஆல்கஹால் இருந்தது. இதற்கு சர்க்கரை வியாதி மருந்து + மதுவின் கெமிக்கல் எதிர்வினையே காரணம். மரணத்தை கலாபவன் மணியே தேடி கொண்டதாக விசாரணை நடத்திய ஐபிஎஸ் அதிகாரி உன்னிராஜன் வேதனை தெரிவித்துள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications