வெளிநாட்டில் இருந்து புத்தாண்டை கொண்டாட சென்னைக்கு வந்த குமரன்.. இப்படியா ஆகணும்
சென்னை: புத்தாண்டு கொண்டாட சொந்த ஊருக்கு வந்த இடத்தில் இப்படியா ஆக வேண்டும் என்பது போல் சென்னையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.சென்னை காசிமேட்டைச் சேர்ந்த இளைஞருக்கு பெற்றோர் திருமணத்திற்காக பெண் பார்த்துள்ளனர். அடுத்த மாதம் அவருக்கு 2 வது திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புத்தாண்டையொட்டி நடந்த கொண்டாட்டத்தில்,கனவிலும் நினைக்காத சம்பவம் நடந்துள்ளது.
சென்னை காசிமேடு சிங்காரவேலன் நகர் 1-வது தெருவை சேர்ந்த 32 வயதாகும் குமரன் என்பவர் வெளிநாட்டில் கப்பலில் வெல்டராக வேலை செய்து வந்தார். இவருக்கு சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் ஆகியது. இதனிடையே குமரனுக்கும் அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் குமரனும் அவரது மனைவியும் பிரிந்துவிட்டார்கள். குமரனுக்கு 2-வது திருமணம் செய்ய பெற்றோர் ஏற்பாடு செய்தார்கள். அதற்காக பெண்ணும் பார்க்கப்பட்டது. அடுத்த மாதம் திருமணம் செய்யவும் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் புத்தாண்டு விடுமுறையையொட்டி சொந்த ஊரான சென்னை காசிமேட்டிற்கு குமரன் வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அவரது நண்பர் ராகேசுடன் சேர்ந்து புத்தாண்டை கொண்டாடினார்கள். பின்னர் உணவு பண்டங்களை வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் அவர்கள் இருவரும் ஓட்டலுக்கு புறப்பட்டனர். அப்போது பக்கத்து தெருவின் வழியாக மின்னல் வேகத்தில் பாய்ந்து சென்றிருக்கிறார்களாம். அந்த தெருவில் ஏராளமானோர் புத்தாண்டை கொண்டாடுவதற்காக தெருவில் நின்று கொண்டிருந்தார்கள்.
அப்போது குடிபோதையில் இருந்த அதே தெருவை சேர்ந்த 24 வயதாகும் சரவணன் மற்றும் அவரது நண்பர்களான எர்ணாவூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த 23 வயதாகும் ஆகாஷ் , 26 வயதாகும் ராகேஷ் என்கிற ஜஸ்டின் பேபி , 17 வயதாகும் புதுவண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த சிறுவன் ஆகியோர் அப்பகுதியில் நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது சரவணனின் மனைவி உள்பட பெண்கள் சிலர் புத்தாண்டையொட்டி தெருவில் கோலம் போட்டுக்கொண்டிருந்தார்களாம். அந்த நேரத்தில் தான் குமரன் அவரது நண்பர் ராகேஷ் ஆகியோர் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றுள்ளார்களாம்.
இதனால் சரவணன் 'என் மனைவி கோலம் போட்டுக்கொண்டிருக்கிறாள். நீ ஏன் இடையூறு செய்யும் விதமாக மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தாய்' என்று கேட்டு குமரனிடம் வீண் தகராறில் ஈடுபட்டார்களாம். இந்த தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த சரவணன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குமரனை சரமாரியாக குத்தினாராம். இதில் குமரனுக்கு நெஞ்சு மற்றும் வயிற்றில் பலத்த காயங்கள் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே குமரன் உயிரிழந்தார்.
இதைத்தடுக்க முயன்ற ராககேசையும், குமரனின் தந்தை விஸ்வநாதனையும் கத்தியால் தாக்கினாராம். இதில் ராகேசுக்கு வயிற்றில் கத்திக்குத்து காயங்களும், விஸ்வநாதனுக்கு தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த காசிமேடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குமரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த சரவணன் உள்பட 4 பேரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதில் ஆகாஷ் மீது 3 கொலை முயற்சி உள்பட 18 வழக்குகளும், சரவணன் மீது 1 கொலை முயற்சி உள்பட 5 வழக்குகளும், 17 வயது சிறுவன் மீது கொலை உள்பட 4 வழக்குகளும், ராகேஷ் மீது 4 வழக்குகளும் நிலுவையில் உள்ளதாக போலீசார் விசாரணைக்கு பின்னர் தெரிவித்தனர். புத்தாண்டை கொண்டாட வந்த இளைஞர், சாலை வேகமாக சென்றதால் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ராட்சத பலூன்கள்.. ஃபிளாஷ் மாப்கள்.. தேர்தலுக்கு சென்னை எப்படி ரெடியாகிறது தெரியுமா? -
சிக்னலில் நின்ற விஜய் வாகனம்.. யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென தவெக தொண்டர் செய்த செயல்! -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
அமைச்சர் சேகர்பாபு மகன்கள் நடத்தும் நிறுவனத்தில் ரெய்டு.. தேர்தல் நேரத்தில் இறங்கிய ஐ.டி அதிகாரிகள் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
சிறுக சிறுக 25 சவரன் சேர்த்த விசுவாசி… சென்னை தி.நகரில் பிரபல தங்க நகைக்கடை அலறியது ஏன்?” -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது?












Click it and Unblock the Notifications