ரெண்டு காலும் நொறுங்கிடுச்சு.. வெங்கடேஷ் ஆறுமுகத்திற்கு என்ன ஆனது? தங்கை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
மதுரை: சின்னத்திரை பிரபலமும் நகைச்சுவை நடிகருமான மதுரை வெங்கடேஷ், கடத்தப்பட்டு கால்கள் உடைக்கப்பட்ட நிலையில் பாஜக நிர்வாகிகள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனது அண்ணனுக்கு என்ன நடந்தது என வெங்கடேஷ் ஆறுமுகத்தின் தங்கை உமா மகேஸ்வரி ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
டிவி நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமான வெங்கடேஷ் ஆறுமுகம், சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது மதுரை தபால் தந்தி நகரில் வசித்து வரும் வெங்கடேஷ், இரண்டு நாட்களுக்கு முன்பாக மர்ம நபர்கள் சிலரால், அலுவலகம் விட்டு வீடு திரும்பும் வழியில் காரில் கடத்திச் செல்லப்பட்டார்.

நாராயணாபுரம் கண்மாய் பகுதிக்கு கொண்டு சென்று, அவரை கடுமையாகத் தாக்கியதோடு, அவரது இரு கால்களையும் உடைத்துவிட்டு அந்த கும்பல் தப்பியது. இச்சம்பவம் தொடர்பாக பாஜக நிர்வாகிகள் 3 பேர், வெங்கடேஷ் ஆறுமுகத்தின் மனைவி பானுமதி உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வெங்கடேஷ் ஆறுமுகத்தின் தங்கை உமா மகேஸ்வரி, தனது அண்ணனுக்கு என்ன நடந்தது, அவரது தற்போதைய நிலை பற்றி ஃபேஸ்புக்கில் விளக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "அண்ணன் வெங்கடேஷ் ஆறுமுகம் உடல்நிலை பற்றிய பதிவு. மூன்று நாட்களுக்கு முன்பு என் அண்ணன் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் வழியில், சில ரவுடிகளால் வழிமறிக்கப்பட்டு, கடத்திச் செல்லப்பட்டு கடுமையான தாக்குதலுக்கு உள்ளானார். இரண்டு கால்களும் மூட்டுக்கு கீழ் கடுமையாக சேதமாகியிருக்கின்றன. தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். குணமடைய சில மாதங்கள் ஆகும்.
காவல்துறை விசாரணைகளும், நடவடிக்கைகளும் தொடர்கின்றன. இந்தச் சம்பவம் பற்றிய பின்னணி குறித்து, நாளை கோர்ட்டில் குற்றவாளிகள் ஆஜர்படுத்தப்பட்ட பிறகே முழுமையாகத் தெரியும். இந்த விபரம் புரியாமல், இந்த செய்தி ப்ராங்க்தான? நல்ல கதை என்றெல்லாம் சிலர் பேசி வருவது வேதனை.

அதனால்தான் இவ்விஷயம் பற்றி வெங்கடேஷின் உடன்பிறந்த தங்கை நான் பதிவிடுகிறேன். நான் இப்போது அண்ணனுடன்தான் இருக்கிறேன். உங்களால் இயன்றால் அண்ணன் விரைவில் குணமடைய பிரார்த்தியுங்கள். நேற்று வெளியான வீடியோ இந்த கேஸில் அரெஸ்ட் ஆகிச் சென்றவர்கள்தான். பாஜக என அடையாளப்படுத்திக் கொண்டே இதைச் செய்துள்ளனர்." எனத் தெரிவித்துள்ளார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications