மாமியார் வீட்டில் இருந்து சென்னை கிளம்பிய புதுமாப்பிள்ளை.. கல்யாணம் ஆகி 4 நாளில் இப்படி ஆகிடுச்சே
சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காசிரெட்டிபட்டி பகுதியில் வசித்து வந்தவர் 26 வயதாகும் உதயகுமார். தாம்பரத்தில் பியூட்டிஸனாக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த பவித்ரா என்ற பெண்மணிக்கும், கடந்த பிப்ரவரி 02 அன்று தான் திருமணம் நடந்தது. திருமணம் ஆகி நான்கு நாள்கூட கணவனுடன் வாழமுடியாத நிலையில் பவித்ரா என்ற பெண் பரிதவித்து வருகிறார்.
பொதுவாக திருமணம் ஆகப்போகிறது என்றால், மணப்பெண், மணமகன் உள்ளிட்ட இருவருமே மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வெளியில் செல்லாதீர்கள். நண்பர்களுடன் சாகசமாக பைக்கில் போக வேண்டாம் என்று பெற்றோர் வலியுறுத்துவார்கள். இதற்கு காரணம், ஏதாவது நடக்கக்கூடாதது நடந்துவிடுமோ என்ற அச்சம் தான். ஆனால் இன்றைக்கு இளைஞர்கள் பலர் கல்யாண பத்திரிக்கை வைக்கவே பல கிலோ மீட்டர் பைக்கில் பயணிக்கிறார்கள்..

கல்யாணம் முடிந்தால் சாகச பயணங்களை நண்பர்களுடனோ, புதுமனைவியுடனோ மேற்கொள்கிறார்கள்.. செல்போனில் பேசியபடி வண்டி ஓட்டுவது, சாலையில் சிக்னல்களை கவனிக்காமல் செல்வது, திடீரென குறுக்கே வரும் வாகனங்களை கவனிக்காமல் செல்வது என எப்படி வேண்டுமானாலும் விபத்துக்கள் ஏற்படலாம் என்கிற நிலையே இன்றைக்கு இருக்கிறது. இதனால் தான் புதுமணம் செய்தவர்களை சில நாட்கள் வெளியில் செல்ல வேண்டாம் என்று கூறுவார்கள்.. இந்நிலையில் கல்யாணம் ஆகி நான்கு நாள் கூட முடியாத நிலையில், கணவனை இழந்துள்ளார் பெண் ஒருவர்.. என்ன நடந்தது என்று பார்ப்போம்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காசிரெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்த 26 வயதாகும் உதயகுமார் என்பவர் தாம்பரத்தில் அழகுகலை நிபுணராக வேலை செய்து வந்துள்ளார். உதயகுமாருக்கும், ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த பவித்ரா என்ற பெண்மணிக்கும், கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி அன்று கல்யாணம் இனிதே நடந்து முடிந்தது. மறுவீட்டிற்காக சென்றுள்ளார்கள் புதுமண தம்பதி. கடந்த பிப்ரவரி 5ம் தேதி அன்று தனது மாமியாரின் வீட்டில் இருந்த உதயகுமார், பிப்ரவரி 6ம் தேதி அன்று நண்பர்களை பார்க்க ஆசைப்பட்டுள்ளார். இருசக்கர வாகனத்தில் சென்றிருக்கிறார். ஆனால் நண்பர்களை பார்த்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு வரவே இல்லை..
உதயகுமார் நீண்ட நேரம் ஆகியும் தனது அம்மாவின் வீட்டிற்கு வராத நிலையில், பவித்ரா போன் செய்து பார்த்துள்ளார். ஆனால் போன் சுவிட்ச் ஆப் என்று வந்துள்ளது. பின் பவித்ராவுக்கு தொடர்பு கொண்ட ஒருவர், உதயகுமார் சாலையில் அடிப்பட்டு மயங்கிய நிலையில் விழுந்து கிடப்பதாக கூறியுள்ளார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார் என தகவல் கூறியுள்ளார். என்னான்சு,ஏதாச்சு என்று பதறியபடி பவித்ரா மற்றும் அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு ஓடிச்சென்றார்கள். அங்கு புதுமாப்பிள்ளை உதயகுமார் உயிருடன் இல்லை என்று தெரிவித்துள்னர்.
இதனால் மருத்துவமனைக்கு வந்த உறவினர்கள் கல்யாணம் முடிந்து இன்னும் தாலியின் ஈரம் கூட காயவில்லை.. கல்யாண வீட்டில் இப்படி நடந்துவிட்டதே என்று கண்ணீர் விட்டனர். முன்னதாக ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்ட உதயகுமார். மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் கொண்டு செல்லப்பட்ட போது வழியிலேயே உயிரிழந்தது தெரியவந்தது.
பவித்ராவின் அண்ணன் மருத்துவமனை வாசலில் நின்று கண்ணீர் விட்டு கதறி அழுதார். "என் தங்கச்சியை பொத்தி பொத்தி வளர்த்தேன், சின்ன வயசுல இருந்து படத்துக்கு கூட போகாம; கணவரோடதான் போவேன் என இருந்தாள், எங்க வீட்டை விட்டு வெளியே கூட போகமாட்டாள், அவளுக்கு நான் இப்போது என்ன சொல்லுவேன்" என்று கண்ணீர் விட்டார் . இதேபோல் பவித்ராவும், அவரது உறவினர்களும் அழுதது காண்போரை கலங்க வைத்தது.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
60 வயதிலும் ஆசை வரும்.. நடிகர் அமீர்கான் 61 வயதில் 3வது திருமணம்.. யார் இந்த 47 வயது காதலி கவுரி? -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications