அண்ணன் மகளுடன் விளையாட வந்த பெண் குழந்தை.. மனசாட்சியே இல்லையா? தவெக பிரமுகர் கைது.. அதிரும் சென்னை

Subscribe to Oneindia Tamil

சென்னை: எண்ணூர் தாழங்குப்பம் பகுதியை சேர்ந்த தம்பதியின் இரண்டரை வயது பெண் குழந்தைக்கு கடந்த 15ம் தேதி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மேலும், குழந்தையின் கால்களிலும் வீக்கம் இருந்துள்ளது. குழந்தையின் நிலையை கண்டு பதறிய பெற்றோர், உடனடியாக எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

TVK Chennai Child Abuse Case POCSO Arrest

சென்னை எண்ணூர்

அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, உயிருக்கு போராடும் நிலையில் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே குழந்தையைப் பரிசோதித்த டாக்டர்கள், அந்த சிறுமி மிகக் கொடூரமான முறையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருப்பதாக பெற்றோரிடம் தெரிவித்தனர்.. இதைக் கேட்டு உறைந்துபோன பெற்றோர், உடனடியாக எண்ணூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கண்ணீருடன் புகார் அளித்தனர்.

இதையடுத்து போலீசார் விசாரணையை தொடங்கினர். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் தேசிங்கு என்பவரின் மகன் ரஞ்சித் (36) என்பவர் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரியவந்தது. ரஞ்சித் தவெக நிர்வாகி என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து, ரஞ்சித்தைப் பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

2 மனைவிகள்

ரஞ்சித்துக்கு ஏற்கனவே 2 முறை கல்யாணமாகி விட்டதாம்.. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து, தன்னுடைய அம்மா வீட்டுக்கு போய்விட்டாராம். அதனால் தன் அப்பாவுடன் வசித்து வந்துள்ளார் ரஞ்சித்..

சம்பவத்தன்று, அண்ணன் விஜயகுமாரின் மகள்களுடன் விளையாடுவதற்காக, பக்கத்து வீட்டிலிருந்து இரண்டரை வயது குழந்தை வந்திருக்கிறாள்.. அப்போது யாரும் இல்லாத நேரத்தில், அந்த குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் ரஞ்சித்.. இதையடுத்து, ரஞ்சித் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.

அண்ணன் மகள் - பக்கத்து வீட்டு குழந்தை

போலீஸ் ஸ்டேஷனில் விசாரணையின் போது, கழிவறைக்கு சென்ற ரஞ்சித் எதிர்பாராதவிதமாக வழுக்கி விழுந்ததில், அவரது இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்குக் காலில் மாவுக்கட்டு போடப்பட்டது. பிறகு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மீது அடுத்தடுத்து இத்தகைய குற்றச்சாட்டுகள் எழுந்து வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது..

தவெக நிர்வாகிகள்

ஏற்கனவே ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் தவெக நிர்வாகி ஒருவர் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்து, அதற்குரிய வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களை அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது.

அதைத் தொடர்ந்து, நேற்றைய தினம் நாகர்கோவிலில் தாலி கட்டிய கணவரையே போட்டு தாக்கி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தார் தவெக பெண் நிர்வாகி... இந்த சம்பவத்தின் சூடு தணிவதற்குள், இன்று சென்னையில் இரண்டரை வயது குழந்தையைப் பலாத்காரம் செய்த வழக்கில் தவெக பிரமுகர் போக்சோவில் கைதாகியிருப்பது பொதுமக்கள் மத்தியிலும், அரசியல் தளத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது...!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+