பெங்களூரில் 34 வயது பெண் என்ஜினியர் இருந்த கோலம்.. 18 வயது மாணவரை சிக்க வைத்த சின்ன விஷயம்
பெங்களூர்: பெங்களூர் சுப்பிரமணியநகர் லே-அவுட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவர் சர்மிளா. இவருக்கு 34 வயது ஆகிறது. இவரது பக்கத்து வீட்டில் 18 வயதாகும் கர்னல் குரேய் என்பவர் பெற்றோருடன் வசித்து வருகிறார். சிறு வயது இளைஞர் என்பதால் சர்மிளா சகஜமாக பழகி உள்ளார். ஆனால் இதனை தவறாக புரிந்து கொண்ட கர்னல் குரேய், ஒரு தலையாக சர்மிளாவை காதலித்து அத்துமீறி உள்ளார். கடைசியில் கல்லூரி மாணவர் செய்த சின்ன தவறால் சிக்கியிருக்கிறார்.
பெங்களூரு சுப்பிரமணியநகர் லே-அவுட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த 34 வயதாகும் சர்மிளா கம்ப்யூட்டர் என்ஜினியராக தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். கடந்த ஜனவரி 3-ந்தேதி நள்ளிரவு அவர் தங்கியிருந்த வீட்டில் தீப்பிடித்தது. மேலும் சர்மிளா பிணமாக கிடந்தார். அவரது வீட்டில் தீப்பிடித்திருந்ததால் புகையால் மூச்சுத்திணறி சர்மிளா இறந்துவிட்டதாக கருதப்பட்டது.

இதுகுறித்து ராமமூர்த்திநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில், சர்மிளா மூச்சுத்திணறி சாகவில்லை என்றும், அவர் கொலை செய்யப்பட்டதாகவும் தெரியவந்தது. பக்கத்து வீட்டில் வசித்து வந்த கேரள மாநிலத்தை சேர்ந்த கல்லூரி மாணவரான கர்னல் குரேய் (18) என்பவர் தான் சர்மிளாவை கொன்றதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். கர்னல் குரேய், 2-ம் ஆண்டு கல்லூரி மாணவர். அவர் தனது தாயுடன் வசித்து வந்திருக்கிறார்.
இது தொடர்பாக கர்னல் குரேய் அளித்துள்ள வாக்குமூலம் பற்றி போலீசார் கூறுகையில், "ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் பக்கத்து வீடுகளில் வசித்து வந்ததால் சர்மிளா, கர்னலுடன் சாதாரணமாக பேசி பழகி வந்திருக்கிறார். இதனை தவறாக புரிந்து கொண்டு சர்மிளாவை ஒருதலையாக கர்னல் காதலிக்க தொடங்கியிருக்கிறார்.
கடந்த 3-ந்தேதி சர்மிளா வீட்டில் தனியாக இருந்தார். அப்போது பால்கனி வழியாக வீட்டுக்குள் கர்னல் சென்றுவிட்டார். அவரை பின்பக்கமாக கர்னல் கட்டி பிடித்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த சர்மிளா கர்னலை பிடித்து தள்ளியதுடன், கூச்சலிட்டிருக்கிறார். அப்போது தனது ஆசைக்கு இணங்கும்படி கர்னல் வற்புறுத்தியுள்ளார். இதற்கு சர்மிளா மறுத்திருக்கிறார்.
மாறாக வீட்டை விட்டு வெளியே செல்லும்படி எச்சரித்து உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கர்னல் சர்மிளாவின் கழுத்தில் கையால் குத்தியதுடன், கழுத்தை நெரித்து கொலை செய்தாராம். அப்போது சர்மிளாவின் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்திருக்கிறார். அவரது ஆடையிலும் விழுந்திருக்கிறது. இதையடுத்து, சர்மிளாவின் ஆடையை கழற்றி கட்டிலில் போட்டு தீவைத்திருக்கிறார். இதனால் மெத்தையும் எரிந்ததுடன் வீட்டில் தீயும் பிடித்து எரிந்தது தெரியவந்திருக்கிறது.
அதே நேரத்தில் சர்மிளாவை கொன்ற பின்பு அவரது செல்போனையும் கர்னல் எடுத்து சென்றுவிட்டார். 4 நாட்கள் கழித்து சர்மிளாவின் சிம்கார்டை கழற்றி வீசிவிட்டு தனது சிம்கார்டை போட்டு பயன்படுத்தியதால் போலீசாரிடம் அவர் சிக்கியது விசாரணையில் தெரியவந்தது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications