Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருச்சி டூ சென்னை.. ஆண் நண்பருடன் தங்கி மது அருந்திய அழகுக்கலை நிபுணர் ஷாமிலி.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருச்சி மாவட்டம் செம்பட்டு பகுதியை சேர்ந்த ஷாமிலி என்பவர் அழகுகலை நிபுணராக இருந்தார். இவர் சென்னையில் வேலை செய்வதற்காக வந்துள்ளார். இந்நிலையில் தனது ஆண் நண்பருடன் சேர்ந்து சென்னை சூளைமேட்டில் இரண்டு நாட்கள் தங்கியிருக்கிறார். அப்போது ஆண் நண்பருடன சேர்ந்து மது அருந்தியுள்ளார். அவருக்கு என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

பொதுவாக குடிப்பழக்கம் உடல் நலத்தை பாதிக்கும். சில நேரங்களில்அதிகப்படியான மது அருந்துவது உடனடியாக உடலில் நீர் சத்து முழுமையாக குறைத்து, நரம்பு மண்டலமும் பாதித்து உயிரிழக்கும் அளவுக்கு அபாயமும் ஏற்படுகிறது. பெண்களை பொறுத்தவரை ஆண்களைவிட பெண்களுக்கு மது அருந்தும் பழக்கத்தால் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. அப்படித்தான் சென்னையில் ஒரு பெண்ணுக்கு ஏற்பட்டதா அல்லது வேறு ஏதும் நடந்ததா என்பது தெரியவில்லை. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

chennai trichy beautician

திருச்சி மாவட்டம் செம்பட்டு பகுதியை சேர்ந்த 26 வயதாகும் ஷாமிலி என்பவர் அழகுகலை நிபுணர் ஆவார். இவர் திருச்சியில் இருந்து சென்னையில் வேலை செய்வதற்காக கடந்த டிசம்பர் 5-ந் தேதி சூளைமேடு, சண்முகம் சாலை கில்நகர் 2-வது தெருவில் உள்ள தனது ஆண் நண்பர் முகமது நபிக் (31) என்பவர் வீட்டிற்கு வந்திருக்கிறார். சென்னை சூளைமேட்டிலேயே கடந்த 2 நாட்களாக அவர் தங்கியிருந்துள்ளார். கடந்த டிசம்பர் 7-ந் தேதி திடீரென ஷாமிலிக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார்..

உடனே அவரை மீட்டு சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஷாமிலிக்கு இதயத்துடிப்பு குறைவாக இருப்பதால் அவரை மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து, ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே ஷாமிலி இறந்து விட்டதாக அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கூறினர்.

இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனை தரப்பில் இருந்து பாண்டிபஜார் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ஷாமிலியின் உடலை, பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், ஷாமிலி, தனது நண்பர் முகமது நபிக்குடன் சேர்ந்து அறையில் சிகரெட் பிடித்து கொண்டு, மது அருந்தியதாக தெரிகிறது. அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் இளம்பெண் உயிரிழந்தாரா? அல்லது அவருடைய இறப்புக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே அவர் எப்படி இறந்தார் என்பது முழுமையாக தெரியவரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+