சென்னையில் உல்லாசம் அனுபவிக்க சென்ற இளைஞர்கள்.. இளம் பெண்ணுக்கு பதில் வயதான பெண்.. நடந்த ட்விஸ்ட்
சென்னை: சென்னை ஆலந்தூரில் உல்லாசம் அனுபவிக்க சென்ற வீட்டில் வாட்ஸ் அப்பில் காட்டிய இளம்பெண்ணுக்கு பதிலாக, நேரில் வயதான பெண் இருந்ததால் கோபம் அடைந்த இளைஞர்கள் செய்த செயலால், இப்போது அவர்களை போலீஸ் தீவிரமாக தேடி வருகிறது.
சென்னையில் விபச்சாரம் செய்பவர்கள் அடிக்கடி சிக்கினாலும் அதை தொடரத்தான் செய்கிறார்கள். ஓட்டல்களில் செய்தால் சிக்குவதால், நூதன முறையில் வீடுகளில் விபச்சாரம் செய்வதும் அடிக்கடி நடக்கிறது. அமைதியான ஆள் நடமாட்டம் குறைவாக உள்ள பகுதிகளில் வீடுகளை வாடகைக்கு பிடித்து குடும்பம் போல் தங்கி விபச்சாரம் செய்வதும் அவ்வப்போது நடக்கிறது.

பொதுவாக வெளிமாநிலங்களில் இருந்து வரும் பெண்கள் தான் இந்த தொழில்களில் ஈடுபடுவதாகவும், யாருக்கும் சந்தேகம் வராத வகையில் இவர்கள் தொழிலை மேற்கொள்வதால் இவர்களை பிடிப்பது கடினமான ஒன்றாக உள்ளது. பொதுவாக விபச்சாரத்தின் போது சிக்கும் பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்படுவார்கள். ஆனால் அவர்கள் சிறிது காலம் அங்கு தங்கி இருந்துவிட்டு பின்னர் ஊருக்கும் செல்லும் பெண்கள் பின்னர் வேறு பகுதியில் விபச்சாரம் செய்ய வருகிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய புரோக்கர்களும் செயல்படுகிறார்கள்.
மிக ரகசியமாக நடப்பதால் யாராவது சொன்னால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும் என்கிற நிலை பல நேரங்களில் ஏற்படுகிறது. விபச்சார தொழிலில் ஈடுபடும் பெண்கள் வசிக்கும் வீடுகளில் சில நேரங்களில் இளைஞர்கள் கோபத்தில் தகராறு செய்யும் சம்பவங்களும் நடக்கிறது.. அப்படியான ஒரு சம்பவம் சென்னை ஆலந்தூரை அடுத்த ஆதம்பாக்கம் பகுதியில் நடந்துள்ளது.
சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் பெண் செவிலியர் ஒருவர் விபச்சாரம் குறித்தும் அதனால் தனது வீட்டில் நடந்த சம்பவம் பற்றியும் புகார் ஒன்றை அளித்தார். அதில், அந்த பெண் கூறுகையில், நான் ஒரு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறேன். நான் ஆதம்பாக்கம் யாதவர் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தோழி ஒருவரின் வீட்டை ஓய்வு நேரத்தில் பயன்படுத்தி வருகிறேன். இதற்கிடையே கடந்த 20-ந் தேதி நான்கு இளைஞர்கள் வீட்டிற்கு வந்து, நாங்கள் கேட்ட பெண் நீ இல்லையே எனக்கூறி, ஆத்திரத்துடன் கத்தியை காட்டி மிரட்டி செல்போன், ரூ.5 ஆயிரத்தை பறித்து சென்றனர் என தெரிவித்து இருந்தார்.
இது குறித்து சென்னை ஆதம்பாக்கம் போலீசார், பெண் செவிலியர் மற்றும் பெண்ணின் தோழியிடம் விசாரணை நடத்தி உள்ளனர். அவர்கள் நடத்திய விசாரணையில், பெண்ணின் தோழி வீட்டை பாலியல் தொழிலுக்கு பயன்படுத்தி வந்ததும், தனது வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்-அப்பில் அனுப்பிய புகைப்படத்தை பார்த்த நான்கு இளைஞர்கள், ஒவ்வொருவரும் தலா ரூ.5 ஆயிரத்தை செலுத்தி விட்டு அவரது வீட்டிற்கு வந்திருக்கிறார்கள்.
ஆனால் செவிலியரின் தோழி அனுப்பிய புகைப்படத்தில் உள்ள பெண்ணுக்கு பதில் 42 வயதான பெண் இருந்ததை கண்டு ஏமாற்றமடைந்து உள்ளனர். தங்களது பணத்திற்கு ஈடாக புகார் அளித்த பெண்ணிடம் ரூ.5 ஆயிரம், டி.வி, செல்போனை பறித்து சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுதுத வழக்கு பதிவு செய்த ஆதம்பாக்கம் போலீசார் தலைமறைவாக உள்ள 4 இளைஞர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications