லட்சக்கணக்கில் கூட்டம் வந்ததே! கடைசியில் இப்படியா நடக்கணும்? புலம்பி தள்ளிய TTF வாசன்.. அட பாவமே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: TTF.. TTF .. TTF எங்க திரும்புனாலும் கேஜிஎப் மாதிரி இந்த ஒரு பெயர்தான் கேட்டுக்கொண்டு இருக்கிறது. ஆயிரக்கணக்கில் கூட்டம்.. ஏகப்பட்ட யூடியூப் வீடியோக்கள்.. பேஸ்புக் வீடியோக்கள்.. இன்ஸ்ட்டா ரீல்ஸ்கள் என்று எல்லா பக்கம் நீக்கமற நிறைந்து இருக்கிறார் TTF வாசன்.

Recommended Video

    Who Is TTF Vasan? | TTF Vasan-க்கு Police கொடுத்த Warning | TTF Fans Meet *TamilNadu

    யாருங்க இந்த TTF வாசன் என்று கேட்கும் 80ஸ், 90ஸ் பூமர்களுக்கு 2கே கிட்ஸ் சொல்லும் பதில்.. அவர் ஒரு ரேஸிங் ஹீரோ என்பதுதான்! லட்சக்கணக்கில் பின்தொடர்பாளர்கள், ரசிகர்கள் என்று பெரிய ரசிகர் பட்டாளத்தோடு வலம் வந்து கொண்டு இருக்கிறார் TTF வாசன்!

    இப்படிப்பட்ட TTF வாசன் சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடியதுதான் இப்போது தமிழ்நாட்டில் டாப் நியூஸ். பிளாஷ் நியுசில் இந்த அதிமுக மோதலை... கொஞ்சம் தள்ளி நில்லுங்க அண்ணன் வரார் பாருங்க என்று சொல்ல வைத்து TTF வாசன்தான் செய்திகளில் இடம் பிடித்துள்ளார்.. அப்படிப்பட்ட TTF வாசனுக்கு பிறந்த நாள் அதுவுமா ஒரு மோசமான சம்பவம் நடந்துள்ளது.. அது என்ன?

     TTF வாசன்

    TTF வாசன்

    TTF வாசன் என்பவர் Twin Throttlers என்று யூ டியூப் பக்கத்தை நடத்தி வருகிறார். இவர் கடந்த 2 வருடமாக இந்த டிராவல் விலாக் பக்கத்தை நடத்தி வருகிறார். இவருக்கு தற்போது 27.6 லட்சம் சப்ஸ்கிரைப்பர்கள் யூ டியூபில் இருக்கிறார்கள். பைக்கில் பயணம் செய்வதை வீடியோவாக போடுவதுதான் இவரின் வழக்கம். சமீபத்தில் லடாக் சென்றதை இவர் வீடியோவாக போட்டு இருந்தார். பைக்கில் வேகமாக செல்வது, ஸ்டண்ட் செய்வது, ரேஸ் செய்வது ஆகியவற்றை இவர் வீடியோவாக போட்டு வருகிறார்.

     எவ்வளவு ரூபாய்?

    எவ்வளவு ரூபாய்?

    சூப்பர் பைக் வைத்து இருக்கும் இவரின் யமஹா பைக்கில் விலை 12 லட்சம். இவரின் ஹெல்மெட், கிட்ஸ் எல்லாம் சேர்த்து இதற்கு இவர் செய்துள்ள முதலீடு மட்டும் 20 லட்சம் ரூபாய் ஆகும். 1999ல் பிறந்த இவருக்கு இப்போது 23 வயதுதான் ஆகிறது. கோவையை பூர்வீகமாக கொண்ட TTF வாசன் கோவை முழுக்க மிக பிரபலம். இவரின் யூ டியூப் சேனல் பிரபலம் ஆனதன் காரணமாக இவருக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

    ரசிகர்கள்

    ரசிகர்கள்

    முக்கியமாக 2கே கிட்ஸ் தொடங்கி பைக் மீது ஆர்வமாக இருக்கும் பலர் இவருக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள். இவர் சாலையில் போனாலே இவரை பார்க்க ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் ரசிகர்கள் கூடி விடுகிறார்கள். சமீபத்தில் இவர் சென்னைக்கு சில பொருட்கள் வாங்க வந்த போது அதை பற்றி முன்கூட்டியே வீடியோ போட்டு இருந்தார். இதையடுத்து அவரை பார்க்க ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் குவிந்தனர்.

    கூட்டம்

    கூட்டம்

    அங்கு இதனால் பெரிய அளவில் கூட்டம் ஏற்படவே கடைசியில் போலீசார்தான் இவரை அழைத்து சென்றனர். இந்த நிலையில்தான் தனது பிறந்தநாளை முன்னிட்டு TTF வாசன் நேற்று ரசிகர்களை சந்தித்தார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இவர் ரசிகர்ளை சந்திக்க அழைப்பு விடுத்து இருந்தார். இதன் காரணமாக லட்சக்கணக்கில் நேற்று ரசிகர்கள் அவரை பார்க்க குவிந்தனர். இதனால் அங்கு பெரிய பரபரப்பு ஏற்பட்டது.

    போலீஸ்

    போலீஸ்

    பல ஆயிரம் ரசிகர்கள் குவிந்த காரணத்தால் அங்கு கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினார்கள். நேற்று முழுக்க இதனால் TTF வாசன்தான் செய்திகளில் இடம் பிடித்தார். இவரை கைது செய்ய வேண்டும். அனுமதி இன்றி ரேஸ் செய்கிறார். இளைஞர்களை தவறாக வழி நடத்துகிறார் என்றெல்லாம் பலர் இவரின் புகழை பார்த்து கொதித்து போய் விமர்சனங்களை வைக்க தொடங்கி உள்ளனர். இந்த நிலையில்தான் இவருக்கு பிறந்தநாள் அதுவுமாக ஒரு மோசமான சம்பவம் நடந்துள்ளதாம்!

    என்ன நடந்தது?

    என்ன நடந்தது?

    அதன்படி இவருக்கு நேற்று ரசிகர்கள் பலர் கிப்ட் கொடுத்துள்ளனர். ரசிகர்களை சந்திக்க சென்ற இவருக்கு பல்லாயிரக்கணக்கில் கிப்ட் வந்துள்ளது. இந்த நிலையில் ரசிகர்களை சந்தித்துவிட்டு திரும்பி செல்லும் போது பார்த்தால் அவருக்கு வந்த கிப்ட்டில் பலவற்றை யாரோ திருடி சென்றுள்ளனர். அதோடு இவரின் விலை உயர்ந்த ஹெல்மெட்டையும் யாரோ திருடி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவரே வீடியோ வெளியிட்டுள்ளார்.

    வீடியோ

    வீடியோ

    அதில், என்னுடைய ஹெல்மெட்டை காணோம். எனக்கு பரிசாக வந்த சில பொருட்களையும் காணோம். யாரும் திருடிவிட்டார்கள் என்று கூற மாட்டேன். யாரவது என் மீது இருக்கும் ஆசையில், பிரியத்தில் எடுத்து இருக்கலாம். அவர்களை அதனால் குறை சொல்ல மாட்டேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார் TTF வாசன். இவரின் ஹெல்மெட்டே பல ஆயிரம் ரூபாய் வரும் நிலையில் அதை யாரோ எடுத்துவிட்டு சென்றதாக இவர் வீடியோ போட்டுள்ளது, அவரின் 2கே பிஞ்சு ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+