பச்சை வாழைப்பழம் தினமும் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? உடலுக்கு தரும் ஆச்சரிய நன்மைகள்
சென்னை: இயற்கையிலேயே 60 சதவீதம் நீர்ச்சத்தை கொண்டுள்ள வாழைப்பழம், எளிதில் ஜீரணமாகக்கூடிய ஒரு முழுமையான உணவாகும். கார்போஹைட்ரேட், புரதச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம், சோடியம் மற்றும் பாஸ்பரஸ் என எல்லாவிதமான ஊட்டச்சத்துக்களும் இதில் பொதிந்துள்ளன. குறிப்பாக, ஒரு கிராம் பச்சை வாழைப்பழத்தில் 422 மில்லிகிராம் பொட்டாசியம் உள்ளது. இதில் உள்ள சுக்ரோஸ், ஃபிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் போன்ற சர்க்கரை சத்துக்கள் உடலுக்கு உடனடி சுறுசுறுப்பை வழங்குகின்றன.
வாழைப்பழத்தின் தாயகம் குறித்து 2 வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. பப்புவா நியூ கினியாவில்தான் இது முதன்முதலில் தோன்றியதாக ஒரு தரப்பு சொன்னாலும், நம்ம இந்தியாவில்தான் இது முதலில் உருவானதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

கி.பி. 327-ல் அலெக்ஸாண்டரின் படைகள் இந்தியா வந்தபோது, வாழைப்பழத்தின் சுவையில் மயங்கியதாகவும், அதன் பிறகே இது ஐரோப்பா மற்றும் உலக நாடுகளுக்குப் பரவியதாகவும் வரலாறு கூறுகிறது. இன்று வாழைப்பழ ஏற்றுமதியில் இந்தியாதான் உலகில் முதலிடத்தில் உள்ளது.
பச்சை வாழைப்பழத்தின் மருத்துவ குணங்கள்
ரஸ்தாளி போன்ற பழங்கள் குழந்தைகளுக்கு பசியை தூண்டினாலும், சாப்பிட்டவுடன் சாப்பிட்டால் மந்தத்தன்மையை ஏற்படுத்தும். ஆனால், ரஸ்தாளியை விட பச்சை வாழைப்பழம் கூடுதல் மருத்துவ குணம் கொண்டது.
இது குடல் புண்களை ஆற்றி, அல்சர் தொந்தரவுகளைத் தடுக்கிறது. உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகும். இதிலுள்ள பொட்டாசியம் ரத்த நாளங்களின் சுவர்களை ஆரோக்கியமாக வைத்து ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் மற்றும் டயட்டில் இருப்பவர்கள் பச்சை வாழைப்பழத்தைத் தாராளமாகச் சாப்பிடலாம். மேலும், பற்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைச் சரிசெய்யவும், குழந்தைகளின் வளர்ச்சிக்கும் வாரத்திற்கு ஒருமுறை பச்சை வாழைப்பழம் கொடுப்பது நல்லது.
இதில் ஸ்டார்ச் சத்து அதிகமாக உள்ளதால், ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. எனவே, மருத்துவர்களின் ஆலோசனைப்படி சர்க்கரை நோயாளிகள் பச்சை வாழைப்பழம், செவ்வாழை மற்றும் நேந்திரம் பழங்களைக் குறைந்த அளவில் உட்கொள்ளலாம்.
கொலஸ்ட்ரால் மற்றும் இதய ஆரோக்கியம்
இதய ஆரோக்கியத்திற்குப் பச்சை வாழைப்பழத்தை விட சிறந்த உணவு வேறில்லை எனலாம். இது ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் மற்றும் டிரைகிளிசரைடுகளின் அளவைக் குறைக்கிறது. ரத்த நாளங்களில் படிந்துள்ள கொழுப்பு மூலக்கூறுகளை உருக்கி வெளியேற்றும் திறன் இதற்கு உண்டு. குறிப்பாக, கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள் பச்சை வாழைப்பழத்தைத் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அதனுடன் உப்பு, மிளகாய், கொத்தமல்லி மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கிச் சாப்பிடுவது பெரும் பலனைத் தரும்.
பிற நன்மைகள்
வைட்டமின் B6 நிறைந்துள்ளதால் இது ஆக்ஸிஜனேற்றத்திற்கு உதவுகிறது. கர்ப்பிணிப் பெண்கள் தினமும் ஒரு வாழைப்பழம் உண்பது இரும்புச்சத்து குறைபாட்டை நீக்கும். உடல் மெலிந்தவர்கள் உடல் பருமன் அடைய தினமும் நேந்திரம் பழம் சாப்பிடலாம் என பிரபல சித்த மருத்துவர் கு. சிவராமன் பலமுறை அறிவுறுத்தியிருக்கிறார்
வேர் முதல் இலை வரை பயன் தரக்கூடியது. நவீன அங்காடிகளில் விற்கப்படும் பழங்களுக்குத் தரும் முக்கியத்துவத்தை தள்ளுவண்டிகளில் விற்கப்படும் சத்துமிக்க இந்த வாழைப்பழங்களுக்கு மக்கள் ஏனோ தருவதில்லை என்பது வருத்தத்திற்குரியது. இருந்தாலும் எந்தவொரு உணவையும் மருத்துவ ஆலோசனையுடன் சரியான அளவில் எடுத்துக் கொள்வதே ஆரோக்கியத்திற்குச் சிறந்தது...!!
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications