சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நேற்று செய்தித்தாளை திறந்து பார்த்தால்.. பெரிய அதிர்ச்சி! செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை பரபரப்பு

Google Oneindia Tamil News

சென்னை: நேற்று செய்தித்தாளை திறந்து பார்த்தால் அதிர்ச்சியாக இருந்தது என்று பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி நேற்று பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க சென்னை வந்தார். இந்த விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் நீட் தேர்வு தொடங்கி தமிழ் மொழியை அலுவல் மொழியாக அறிவிப்பது வரை பல விஷயங்களை பேசினார்.

இந்த நிலையில் ஸ்டாலினின் பேச்சை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். நேற்று நடந்த விழா குறித்தும், ஸ்டாலினின் பேச்சு குறித்தும் அண்ணாமலை பேசினார்.

சொன்ன நேரத்துக்கு வெளியாகாத அண்ணாமலை பட டீசர்... ஏமாற்றமடைந்த பாஜகவினர் - என்ன காரணம் தெரியுமா? சொன்ன நேரத்துக்கு வெளியாகாத அண்ணாமலை பட டீசர்... ஏமாற்றமடைந்த பாஜகவினர் - என்ன காரணம் தெரியுமா?

அண்ணாமலை

அண்ணாமலை

அண்ணாமலை தனது பேட்டியில், நேற்று மேடையில் முதல்வர் ஸ்டாலின் நடந்து கொண்ட விதம் சரியில்லை. அவர் கட்சி பேரணி போல பேசினார். கட்சி கூட்டத்தைப் போன்று பேசினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஆனால் நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரதமர் மோடி தமிழை உயர்த்தி பிடித்தார். தமிழ்நாட்டில் தனக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து பிரதமர் மோடியே தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ போட்டு இருக்கிறார்.

தமிழ் மோடி

தமிழ் மோடி

முதல்வர் ஸ்டாலின் தனது நாற்காலிக்கு தகுந்த மாதிரி பேச வேண்டும். ஆனால் எதோ கணக்கு பிள்ளை போல முதல்வர் ஸ்டாலின் பேசி இருக்கிறார். இது ஏன் கொடுக்கவில்லை, அது ஏன் கொடுக்கவில்லை என்று முதல்வர் அதிகார தொனியில் கேட்டு இருக்கிறார்.தமிழ்நாட்டிற்கு 5 லட்சம் கோடி தாங்க.. உதவுங்கள் என்று முதல்வர் தன்மையாக கேட்டு இருந்தால்.. அதை நாங்களே பிரதமரிடம் பேசி வாங்கி கொடுத்து இருப்போம்.

ஸ்டாலின் பேச்சு

ஸ்டாலின் பேச்சு

ஆனால் முதல்வர் ஸ்டாலின் பேசவில்லை. தமிழ் மொழியை பாதுகாப்பது போல திமுக செயல்படுகிறது. ஆனால் ரயில் வராத தண்டவாளத்தில் தலைவைத்து விட்டு தமிழ் மொழியை காப்பது போல் பேசுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தாய்மொழியான தமிழில் படிப்பதை திமுக அரசு கட்டாயமாக்கியதா? இல்லை.

தமிழ் மீடியம்

தமிழ் மீடியம்

தமிழ் மீடியத்தை அவர்கள் கட்டாயம் ஆக்கி உள்ளனரா? ஆனால் மோடி செய்து இருக்கிறார். புதிய தேசிய கல்விக்கொள்கை மூலம் தமிழை கட்டாயமாக்கியவர் பிரதமர் மோடி. இந்த கல்வி திட்டம் மூலம் எல்லோரும்.. பணக்காரர் முதல் ஏழை வரை எல்லோரும் தமிழை படிக்க வேண்டும். ஆனால் அதை நீங்கள் அனுமதிக்க முடியாது.

அதிர்ச்சி பேச்சு

அதிர்ச்சி பேச்சு

நேற்று செய்தித்தாளை திறந்து பார்த்தால் அதிர்ச்சியாக இருந்தது. தமிழ்நாடு குழந்தைகளின் படிக்கும் திறன்தான் இந்தியாவிலேயே குறைவாக உள்ளது. 10ம் கிளாஸ் படிக்கும் குழந்தைகள் தவிர 6-8 கிளாஸ் குழந்தைகளின் கிரகிப்புத்திறன் குறைவாக உள்ளது. கல்வியை தமிழ்நாட்டில் அழித்துவிட்டார்கள். தமிழ்நாட்டில் கல்வியின் தரம் மோசமாகிவிட்டது, என்று அண்ணாமலை தனது பேட்டியில் குறிப்பிட்டு உள்ளார்.

English summary
What i saw in news paper shocked me to the core says BJP Annamalai. நேற்று செய்தித்தாளை திறந்து பார்த்தால் அதிர்ச்சியாக இருந்தது என்று பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X