Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

15 லட்சம் கிமீ தூரம்! லாக்ரேஞ்ச் புள்ளியில் ஆதித்யா எல்-1 நிலைநிறுத்துவது ஏன்? இவ்ளோ விஷயம் இருக்கா

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியா சார்பில் சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல் 1 விண்கலம் இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இந்த விண்கலம் பூமியில் இருந்து 15 லட்சம் கிமீ தொலைவில் பூமிக்கும், சூரியனுக்கும் இடையே லாக்ரேஞ்ச் பாயிண்ட் (எல்1) பகுதியில் நிலைநிறுத்தப்பட உள்ள நிலையில் அதன் பின்னணியில் மறைந்திருக்கும் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்யும் சந்திரயான் - 3 திட்டத்தை தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்யும் வகையில் ஆதித்யா எல்-1 விண்கலம் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 11.50 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் பாய்ந்தது.

What is a Lagrange point? What is L1? Why ISRO Choosed this for Adithy L1?

அடுத்த ஒரு மணிநேரத்துக்குள் பிஎஸ்எல்வி - 57 ராக்கெட்டில் இருந்து ஆதித்யா எல்-1 விண்கலம் தனியாக பிரிக்கப்பட்டு பூமியின் சுற்றுவட்டபாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இதையடுத்து ஆதித்யா எல் -1 விண்கலத்தில் பூமி சுற்றுவட்டபாதை என்பது படிப்படியாக உயர்த்தப்பட உள்ளது. இதையடுத்து 4 மாத பயணத்துக்கு பிறகு பூமிக்கும் சூரியனுக்கும் இடையே இருக்கும் லாக்ரேஞ்ச் பாயிண்ட் 1 எனும் இடத்தில் ஆதித்யா எல்-1 நிலைநிறுத்தப்பட உள்ளது.

இந்த லாக்ரேஞ்ச் பாயிண்ட் 1 என்பது பூமியில் இருந்து 15 லட்சம் கிலோமீட்டர் அமைந்துள்ளது. அதாவது பூமிக்கும்-சூரியனுக்கும் இடையேயான தொலைவின் அடிப்படையில் பார்த்தால் இது வெறும் ஒரு சதவீத தொலைவாகும். இந்த லாக்ரேஞ்ச் பாயிண்ட் 1-ல் தான் ஆதித்யா எல் -1 விண்கலம் சூரியனை நோக்கி நிலைநிறுத்தப்பட்டு ஆய்வு மேற்கொள்ள உள்ளது. அதாவது விண்கலத்தில் உள்ள 7 கருவிகள் உள்ளன. இதில் 3 கருவிகள் சூரியனின் மேல்வளிமண்டம், வெளிப்புற அடுக்குகளை ஆய்வு செய்ய உள்ளது. 4 கருவிகள் பிற ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கிறது.

இந்நிலையில் தான் பலருக்கும் விண்வெளியில் ஏராளமான இடங்கள் இருக்கும் நிலையில் ஆதித்யா எல் 1 விண்கலத்தை நிலைநிறுத்த இஸ்ரோ ஏன் லாக்ரேஞ்ச் பாயிண்ட் -1 புள்ளியை தேர்வு செய்தது என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இதற்கு பதில் வருமாறு: அதாவது பூமியை போல் சூரியனுக்கும் ஈர்ப்பு விசை உள்ளது. இன்னும் சொல்லப்போனால் பூமியை விட சூரியனுக்கு அதிக ஈர்ப்பு விசை உள்ளது. இத்தகைய சூழலில் நிலையாக ஆதித்யா எல்-1 விண்கலத்தை வான்வெளியில் நிலைநிறுத்துவது சிரமமாகும்.

ஆனால் லாக்ரேஞ்ச் பாயிண்ட் - 1 என்பது சூரியன் மற்றும் பூமியின் ஈர்ப்பு விசையால் பாதிப்பு ஏற்படாத பகுதியாகும். இன்னும் புரியும்படி கூற வேண்டும் என்றால் இங்கு சூரியன் மற்றும் பூமியின் ஈர்ப்புவிசை என்பது சமமானதாக இருக்கும். இதனால் விண்கலத்தை எளிமையாக ஒரு இடத்தில் நிலைநிறுத்த முடியும். அதன்படி லாக்ரேஞ்ச் பாயிண்ட் 1ல் ஆதித்யா எல்-1 விண்கலம் சூரியனை நோக்கி நிலைநிறுத்தப்பட்டு ஆய்வு மேற்கொள்ள உள்ளது.

மேலும் இது பூமி மற்றும் சூரியன் ஆகியவற்றின் ஈர்ப்பு விசையின் பாதிப்பு இன்றி கிரகண வேளைகளில் ஆதித்யா எல்-1 விண்கலத்துக்கு சூரியன் நன்றாக தெரியும். அதாவது எப்படிப்பட்ட வானியல் நிகழ்வு நடந்தாலும் கூட ஆதித்யா எல்-1 பார்வையிலிருந்து சூரியனை விலக்க முடியாது. இதன் மூலம் இடையூறு இன்றி சூரியன் குறித்த ஆய்வை ஆதித்யா எல்-1 விண்கலம் மேற்கொள்ள முடியும். இதனால் தான் லாக்ரேஞ்ச் பாயிண்ட் 1 தேர்வு செய்யப்பட்டுள்ளது.

What is a Lagrange point? What is L1? Why ISRO Choosed this for Adithy L1?

இந்த லாக்ரேஞ்ச் பாயிண்ட் 1 என்பதை பிரான்சை சேர்ந்த ஆராய்ச்சியாளர் லெக்ராஞ்சி என்பவர் கண்டறிந்தார். இதையடுத்து அவரது நினைவாக தான் அதற்கு லாக்ரேஞ்ச் பாயிண்ட் என பெயரிடப்பட்டுள்ளது. இப்படி மொத்தம் 5 புள்ளிகள் அங்கு உள்ளன. இதில் எல் 1 என்பது பூமிக்கும், சூரியனுக்கும் இடையே அமைந்துள்ளது. இங்கு தான் ஆதித்யா எல் 1 நிலைநிறுத்தப்பட உள்ளது.

இதுதவிர எல் 2 பாயிண்ட் பகுதியில் தான் நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி இருக்கிறது. இந்த பாயிண்ட் பூமியின் மறுபுறத்தில் உள்ளது. எல் 3 என்பது சூரியனின் மறுபுறத்திலும், எல்4 மற்றும் எல் 5 என்பது பூமியையும் சூரியனையும் இணைக்கும் நேர்க்கோட்டிலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது விண்ணில் செலுத்தப்பட்டுள்ள ஆதித்யா எல்-1 விண்கலத்தில் சோலார் அல்ட்ரா வைலட் இமேஜிங் டெலஸ்கோப், பிளாஸ்மா அனலைசர், எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோ மீட்டர் உள்பட 7 வகையான ஆய்வு கருவிகள் உள்ளன. இந்த கருவிகள் தான் சூரியனின் வெளிப்புறம், மேல்வளிமண்டலத்தை 5 ஆண்டுகள் வரை ஆய்வு மேற்கொள்ள உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
********

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+