"சாவர்க்கர் + ஆர்எஸ்எஸ் பிளான்".. அனலடிக்கும் "அக்னிபாத்".. குறுக்கே வந்து பாராட்டின அமித்ஷா.. பரபர
அமித்ஷாவின் வாழ்த்துக்கு, விசிக வன்னியரசு கண்டனம் தெரிவித்துள்ளார்
சென்னை: அக்னிபாத் என்ற மத்திய அரசின் திட்டத்திற்கு, தமிழகம் உட்பட எதிர்ப்புகளும், கண்டனங்களும் குவிந்து வருகின்றன.. இதற்கு என்ன காரணம்?
Recommended Video
கடந்த சில நாட்களுக்கு முன்பு, இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னி வீர் என்ற புதிய வேலைவாய்ப்பை மத்திய அரசு உருவாக்கியது.
இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் "அக்னி வீர்" எனப்படும் வீரர்கள் பணிக்கு அமர்த்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது

ரிடையர்மென்ட்
ஆனால் இதற்கு இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.. காரணம், இந்த திட்டத்தின் மூலம் சேர்க்கப்பட்டவர்களில், 25 சதவிகித ராணுவ வீரர்கள் மட்டுமே, 15 வருட பதவி காலத்தில் தொடர்வார்கள். மீதமுள்ளவர்கள், 11 லட்சம் ரூபாய் முதல் 12 லட்சம் ரூபாய் வரையிலான தொகையுடன் பணியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது.. அதனால்தர்ன, ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ரயில்பெட்டிகள்
வடமாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.. ரயில்வே தண்டவாளங்கள், நடுரோடுகளில் உட்கார்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.. ரயில் பெட்டிகள் தீ வைக்கப்பட்டு வருகின்றன.. பீிகார் துணை முதல்வர் ரேணு தேவியின் வீட்டின் மீது இளைஞர்கள் கற்களை வீசி தாக்குதலை நடத்தி உள்ளனர்... வடமாநிலங்களை தொடர்ந்து, தெலுங்கானாவிலும் போராட்டம் எட்டிவிட்டது. அங்கும் ரயிலுக்கு இளைஞர்கள் தீ வைத்தனர்... கடைகளை அடித்து நொறுக்கி சூறையாடினர்... இதனால், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஒருவர் சுருண்டு விழுந்து இறந்துவிட்டார்.. 10க்கும் மேற்பட்டோர் உயிருக்கு போராடி வருகிறார்கள்..

சமாதானம்
இதற்கு நடுவில், அக்னிபாத் திட்டத்தில், 2022ம் ஆண்டுக்கான ஆட்சேர்ப்பில் உச்ச வயது வரம்பு 21 முதல் 23 வயதாக உயர்த்தப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது... அதாவது, 4 வருட பதவி காலம் முடிந்தவுடன் அவர்களை எந்த வித பாதுகாப்பும் இல்லாமல் விட்டு விட மாட்டோம் என்று மத்திய அரசு உத்தரவாதம் அளித்தும், இளைஞர்கள் சமாதானமாகவில்லை..!

அக்னிபாத்
இந்த திட்டத்தை இவ்வளவு வலுவாக எதிர்க்க காரணம் என்ன? Tour Of Duty என்ற புதிய வேலைவாய்ப்பு முறைக்குதான், அக்னிபாத் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.. அடுத்த 90 நாட்ள்களில் ஆன்லைன் முறையில் நடக்கவுள்ளது... ஆயுதப்படைக்கு வழக்கமாக ஆட்கள் தேர்வு செய்வதற்கான கல்வி தகுதியே, அக்னிவீரர்களுக்கும் பொருந்தும். இந்த திட்டத்தின்மூலம் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும், ராணுவ வேலை என்பதால் அவர்களிடம் ஒழுக்கம் மேலோங்கும், ராணுவத்தை பற்றின புரிதல், அக்கறை, ஈடுபாடு போன்ற நல்ல விஷயங்கள் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. அதேசமயம், சாதகத்தைவிட பாதகம்தான் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.

சலுகைகள்
முதலாவதாக, 25 சதவீத இளைஞர்கள் மட்டுமே நிரந்தரப் பணிக்கு எடுத்துக் கொள்ளப்படுவார்கள்.. மற்றவர்களுக்கு 4 வருடங்களுக்கு பிறகு வேறு பணி வழங்குவது குறித்து மத்திய அரசு எந்தவித உத்தரவாதத்தையும் விளக்கத்தையும் தரவில்லை.. அப்படியானால், பணி நீட்டிப்பாகும் 25 சதவீத வீரர்களுக்கு மட்டும் கூடுதலாக பணிபுரிய வாய்ப்பு கிடைக்கும்... அவர்களுக்கு மட்டும்தான் சலுகைகள் கிடைக்கும்.. ஓய்வூதியம் கிடைக்கும்.. மிச்சமுள்ள 75 சதவீதம் பேருக்கு எந்தவித பலன்களும் கிடைக்காது.. 4 வருடம் வேலை பார்த்துவிட்டு, அதற்கு பிறகு என்ன செய்வது என்பதே, இளைஞர்களின் அழுத்தமான கேள்வி.

செக்யூரிட்டி
அனைவருக்குமே ராணுவத்தில் தங்களுக்கு நிரந்தரப்பணி வேண்டும் என்று கேட்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, மிலிட்டரியில் வேலை பார்த்திருந்தாலும்கூட, அவர்கள் அதிக அனுபவம் நிறைந்தவர்கள் என்றாலும்கூட, ரிடையடர் ஆன பிறகு, செக்யூரிட்டி போன்ற வேலைகள்தான் வழங்கப்படுகின்றன.. அப்படி இருக்கும்போது, வெறும் 4 வருடங்கள் மட்டுமே ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்துவிட்டு வெளியேறினால், அதற்கு பிறகு எந்த வேலைக்கு செல்வார்கள்?

கியாரண்டி என்ன?
அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உத்தரவாதம் என்ன? இந்த 4 வருட பணி என்றாலும், டிரைவர், மெக்கானிக், போன்ற வேலைகள் கிடைக்க வாய்ப்பிருக்குமே தவிர, உயர் பதவி கிடைக்குமா தெரியாது. இது ஒருவித மன உளைச்சலுக்கும் வழிவகுக்கும்.. இதெல்லாம்தான் இளைஞர்களின் மனதில் கேள்விகளாகவும் சந்தேகங்களாகவும் எழுந்துள்ளது. இதைதான், ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் கேள்வி எழுப்புகிறார். "கொஞ்ச காலம் ராணுவத்தில் வேலை பார்த்துவிட்டு ஆயுதப்பயிற்சி பெற்ற ஒரு பெரும் பகுதியினர் 22 வயதில் வேலையிழப்புக்கு உள்ளாகினால், இது சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தாதா?" என்று கேட்டுள்ளார்..

அமித்ஷா அறிக்கை
அதேபோல, பாகிஸ்தான், சீனா என்று 2 பக்கமிருந்தும் அச்சுறுத்தல்களை இந்தியா எதிர்கொள்ளும்போது, இந்த அக்னிபாத் திட்டம், நம் ஆயுதப் படைகளின் செயல்பாட்டுத் திறனைக் குறைக்கும்... நமது படைகளின் கண்ணியம், மரபு, வீரம், ஒழுக்கம் ஆகியவற்றில் சமரசம் செய்வதை பாஜக அரசு நிறுத்த வேண்டும்" என்று ராகுல் காந்தி கொந்தளிக்கிறார். இப்படி பலவித எதிர்ப்புகள் இருந்தாலும், எதையுமே காதில் வாங்காமல் உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த திட்டத்தை பாராட்டி உள்ளார்.. அதுகுறித்து வாழ்த்து அறிக்கையும் வெளியிட்டுள்ளார்..

அமித்ஷா
அக்னிபாத் திட்டத்தால் இளைஞர்கள் பெரும் பலன் அடைவார்கள்; இளைஞர்கள் நமது நாட்டுக்கு சேவை செய்யும் பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி முன்னேறுவர் என்று கூறியுள்ளார்.. இதற்கும் கண்டனங்கள் எழுந்துள்ளன.. நம் தமிழகத்தில் இருந்தே விமர்சனங்களும் குவிய ஆரம்பித்துள்ளன.. விசிகவின் வன்னியரசு ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.. அமித்ஷாவின் அறிக்கையை பதிவிட்டதுடன், "எச்சரிக்கை அக்னிபாத் எனும் திட்டம் தேசவிரோத RSS கும்பலை ராணுவத்தில் சேர்க்கும் திட்டமே!.. ஷாகாக்கள் மூலம் பயிற்சி எடுத்தோர், ஜெய்ஶ்ரீராம் முழக்கம் போடச்சொல்லி வன்முறை செய்து,கும்பல் படுகொலைகளை நடத்துகின்றனர். இச்சமூகவிரோதிகளே ராணுவ வீரர்கள்.இது மோடி திட்டமல்ல; சாவர்கர் திட்டம்' என்று பதிவிட்டுள்ளார்.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications