கோடீஸ்வரரையும் அழித்துவிடும் தீரா "கடன்" சுழல்! நீங்க சிக்கியிருக்கிறீர்களா! தப்பிக்க இரண்டே வழிதான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீங்கள் தீராத கடன் சுழலில் சிக்கியுள்ளீர்களா என்பதை எப்படிக் கண்டுபிடிக்க வேண்டும்.. அதில் இருந்து வெளியே வர என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நாம் இதில் பார்க்கலாம்.

கடன் யாரையும் அழிக்கக் கூடியது. பெரு நிறுவனங்கள் கூட ஆழம் தெரியாமல் அதிகமாகக் கடன் வாங்கியதால் முழுமையாக அழிந்து போன, திவால் ஆகும் சம்பவங்கள் எல்லாம் நடந்துள்ளது.

 What is debt trap and How to find out where as one Trapped in debt

நமது நாட்டிலேயே இதற்குப் பல உதாரணங்களைச் சொல்ல முடியும். பெரிய நிறுவனங்கள், தொழிலதிபர்கள், பெரும் கோடீஸ்வரர்கள் எனப் பலரையும் இந்த கடன் காலி செய்துள்ளது.

கடன் ஆபத்து: ஆனால், இப்போது செயலிகளில் வெறும் இரண்டே நிமிடத்தில் எளிதாகக் கடன் கிடைப்பதால் இளைஞர்கள் பலரும் கடன் வாங்கி செலவு செய்கிறார்கள். தங்கள் நிலைமையை உணர்வதற்குள் அவர்கள் தீராத கடன் சுழலில் சிக்கிக் கொள்கிறார்கள். அதில் இருந்து மீண்டு வருவதே பெரும் சிரமமாக அவர்களுக்கு அமைந்துவிடுகிறது.

கடன் சுழல்: இந்த கடன் சுழல் என்றால் என்ன, அதில் நாம் சிக்கியுள்ளோமா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது. அதில் இருந்து வெளியே வர நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பொருளாதார நிபுணர் ராஜேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் விரிவாக விளக்கியுள்ளார். இது குறித்து பொருளாதார நிபுணர் ராஜேஷ் கூறுகையில், "கடன் சுழல் (Debt Trap) - நீங்கள் சிக்கியிருக்கிறீர்களா? கண்டுகொள்வது எப்படி? கீழ்க்கண்டவற்றுள் ஏதேனும் ஒன்றையோ அல்லது பலவற்றையோ நீங்கள் செய்தால் கடன் சூழலில் சிக்கி இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

1.உங்களது மொத்த மாதாந்திர EMI, உங்கள் வருமானத்தில் 50% க்கு மேல் இருந்தால்...
2.மாதாந்திர செலவுகள் (EMI மற்றும் வீட்டு செலவுகள்) உங்களது வருமானத்தில் 70% க்கு மேல் இருந்தால்...
3.உங்களது அன்றாட செலவுகளுக்கு (பள்ளிக் கட்டணம், சுற்றுலா போன்றவை) கடன் வாங்கினால்...
4.ஒரு கடனை அடைக்க இன்னொரு கடன் வாங்குகிறீர்கள் என்றால்...
5.Credit கார்டில் பணம் withdraw செய்தீர்களென்றால்...
6.Credit card outstanding ஐ மாதா மாதம் முழுமையாக செலுத்தாமல் மினிமம் பேலன்ஸ் மட்டுமே செலுத்தி வருவதை வழக்கமாக கொண்டிருப்பது.
7.உங்களுக்கு வங்கிகள் கடன் தர மறுப்பது. உங்களது மாதாந்திர EMI, வருமானத்தில் 50% க்கு மேல் இருந்தால் வங்கிகள் கடன் தர மறுத்துவிடுவார்கள். வங்கிகள் தரவில்லையென்று NBFC க்கு சென்று கடன் கேட்டால் வட்டி 13% க்கு மேல் இருக்கும். அதிலும் கிடைக்கவில்லையென்றால் app களில் கடன் வாங்க முற்படுவீர்கள்.
8.மாதாந்திர billகளை கட்ட தாமதித்தாலோ அல்லது கட்டவில்லையென்றாலோ...
9.நாளை வரப்போகும் வருமானத்தை வைத்து, இன்றே கடன் வாங்குவது. உதாரணமாக, நான்கு மாதங்கள் கழித்து உங்களுக்கு போனஸ் தொகை ௹2,50,000 வருகிறதென்று வைத்துக் கொள்வோம். அதற்கு காத்திராமல், இந்த மாதமே "அதான் நாலு மாசம் கழித்து வருதே, அத வச்சி அடைச்சிடலாம்" என்று நினைத்து கடன் வாங்கி செலவு செய்வது.
10.ஏறும் வட்டி விகிதங்களை சமாளிக்க முடியாமல் திணறுவது. அதற்கு பணமில்லாமல் தவிப்பது.
11.மேற்கண்ட எந்தவொரு சூழலிலும் சிக்காமல் கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தப்பிக்க என்ன வழி: கடன் சூழலில் சிக்கித் தவிக்கும் அன்பர்கள் அதிலிருந்து விடுபட வேண்டுமென்று நினைத்தால், அதற்கு இரண்டே வழிகள் தான். 1) வருமானத்தை உயர்த்துங்கள். 2. செலவுகளை குறையுங்கள்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

கடன் சூழலில் சிக்கினால் உங்களிடம் எவ்வளவு கோடி இருந்தாலும் அது கரைந்து போகும். எனவே, இதில் சிக்காதீர்கள். ஒருவேளை நீங்கள் இதில் ஏற்கனவே சிக்கி இருந்தால் வருமானத்தை அதிகரித்து, செலவுகளைக் குறைந்து இதில் இருந்து எவ்வளவு சீக்கிரம் முடியுமோ.. அவ்வளவு சீக்கிரம் வெளியே வரப் பாருங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+