"இது நியாயமா?".. பல்லை கடித்த பன்னீர்.. சீறிய எடப்பாடி.. அதென்ன இபிஎஸ், ஓபிஎஸ்? விசாரித்த நீதிபதிகள்
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கு தீவிரமாக நடந்து வருகிறது. இந்த வாரமே.. அதாவது நாளைக்குள் வழக்கு விசாரணை முடிவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வழக்கு விசாரணையில் நீதிபதிகள் முக்கியமான சில கேள்விகளை கேட்டனர்.
உச்ச நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு வழக்கு நடந்து வருகிறது. அதிமுக பொதுக்குழு ஜூலை 11ம் தேதி கூடியது. ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழுவில் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். இந்த பொதுக்குழு செல்லாது என்று ஓ பன்னீர்செல்வம், வைரமுத்து ஆகியோர் மனுதாக்கல் செய்துள்ளனர்.
இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு எதிர் மனு தொடுத்து உள்ளது. இந்த வழக்குதான் தற்போது தீவிரமாக விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

பொதுக்குழு வழக்கு
இந்த வழக்கில் நேற்று எடப்பாடி வைத்த வாதத்தில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ஒப்புக்கொள்ளாத காரணத்தால், கட்சி பணிகள் முடங்கி உள்ளன. கட்சியில் உட்கட்சி ரீதியான பணிகளை செய்ய முடியவில்லை. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்காலம் முடிந்துவிட்டது. அவர்களை பொதுக்குழு அங்கீகரிக்கவில்லை. பொதுக்குழுவில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் எடப்பாடிக்கு ஆதரவாக வாக்களித்து உள்ளனர். பெரும்பான்மை அடைப்படையில்தான் முடிவுகளை எடுக்க முடியும் என்று வாதம் வைத்தனர்.

எடப்பாடி வாதம்
தலைமை கழக நிர்வாகிகள் பொதுக்குழுவை அவசர நேரத்தில் கூட்ட முடியும். அந்த அடிப்படையில்தான் பொதுக்குழுவை கூட்டி உள்ளனர். கட்சியில் பொதுக்குழு உறுப்பினர்கள் 1ல் மூன்று பங்கு உறுப்பினர்கள் எடப்பாடி பக்கம் இருக்கிறார்கள். அதனால் பொதுக்குழு செல்லும் என்று வாதம் வைத்தனர்., என்று எடப்பாடி பழனிசாமி வாதம் வைத்தார். இதை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் வைத்த வாதத்தில், பொதுக்குழு கூடியதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும். பொதுக்குழு தவறான வழியில் கூட்டப்பட்டு உள்ளது. அதிமுகவில் தலைமை கழகம் முடிவுகளை எடுக்க முடியாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தான் மேற்கொள்ள முடியும்.

விதிமுறை
விதிமுறைகளை பின்பற்றாமல் பொதுக்குழுவை கூட்டி உள்ளனர். ஆனால் இதை பற்றி உயர் நீதிமன்றம் கவனம் கொள்ளாமல் தீர்ப்பு வழங்கி உள்ளது. அப்படி இருக்கும் போது என்னுடைய அனுமதி இன்றி முடிவுகளை எடுத்துள்ளனர். இது எப்படி நியாயம் ஆகும். பொதுக்குழுவே தவறாக கூடி உள்ளது. அதனால் அதில் எடுக்கப்பட்ட முடிவுகளும் தவறு என்று கூற வேண்டும். அதேபோல் கட்சி ரீதியான விதிகளை உயர் நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. நான் கட்சிக்கு உண்மையாக உழைத்தேன். தேவையான அனைத்தையும் செய்தேன். செய்வேன். ஆனால் என்னை சட்டத்தை மீறி நீக்கி உள்ளனர். இது தொண்டர்களுக்கு எதிரானது, என்று கூறினார்.

ஓபிஎஸ் வாதம்
இதையடுத்து எடப்பாடியை பார்த்து கேள்வி கேட்ட நீதிபதிகள்.. ஏன் ஓ பன்னீர்செல்வத்தை நீக்கினீர்கள் என்றனர். இதற்கு பதில் அளித்த எடப்பாடி தரப்பு ஓ பன்னீர்செல்வம் திமுகவிற்கு ஆதரவாக இருந்தார் என்று கூறினார். இதற்கு பதில் அளித்த நீதிபதிகள் யார் எந்த கட்சிக்கு ஆதரவாக இருந்தார். யார் எந்த கட்சிக்கு எதிராக இருந்தார் என்பதை எல்லாம் நாங்கள் பார்க்க மாட்டோம். கட்சி பொதுக்குழு சட்டப்படி கூட்டப்பட்டதா என்றுதான் பார்ப்போம், என்று விளக்கம் அளித்தனர். அதோடு வழக்கு விசாரணையை இந்த வாதத்திற்குள் முடிக்க விரும்புவதாகவும் கூறினர்.

வாதம்
இந்த வழக்கில் நேற்று நடந்த விசாரணையில் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் இருவரின் பெயரையும் அவர்களின் வழக்கறிஞர்கள் இபிஎஸ், ஓபிஎஸ் என்று கூறி வந்தனர். இதை கேட்டு குழம்பிய நீதிபதிகள், அது என்ன இபிஎஸ், ஓபிஎஸ் என்று கேட்டனர். இதற்கு வழக்கறிஞர்கள் எடப்பாடி என்பது பழனிசாமியின் ஊர் அதை இணைத்து அவரின் பெயர் உள்ளது. அதை சுருக்கமாக இபிஎஸ் என்கிறார்கள். ஓ. பன்னீர்செல்வம் என்ற பெயரை சுருக்கி ஓபிஎஸ் என்கிறார்கள், என்று விளக்கம் அளித்தனர். இதை கேட்ட நீதிபதிகளும் சிரித்தனர்.












Click it and Unblock the Notifications