பாசிசம்னா என்ன? அது என்ன எல்லாம் செய்யும் தெரியுமா? விளாசிய மதிவதனி
சென்னை: பண்டிதன் என்றால் சக நண்பன் என்று காலிலையே விழுந்துவிடுவது தான் பாசிசத்திற்கு மிக நெருக்கமாக பயணிப்பது என்று திராவிடர் கழக நிர்வாகி மதிவதனி பேசியுள்ளார். மேலும் பாசிசம் என்றால் என்ன என்றும் அது என்னவெல்லாம் செய்யும் என்றும் அவர் பேசினார்.
திராவிடர் கழகம் நிர்வாகி மதிவதனி இன்று நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- பாசிசவாசிகள் தங்களுடையை சிந்தனைகளை பரப்புவதற்கு, சின்ன சின்ன நாடுகளை எல்லாம் எப்படி கைப்பற்றி அவர்களையும் நமக்கு அடிமையாக்குறது, என்பதற்கு அவர்கள் செய்யும் யுக்தி என்னவென்றால் முன்னரே அடிமையாகுதல். முன்னறே அடிமையாகுதல் அப்படின்னா என்னனா, சிஏஏ குடியுரிமை சட்டத்தை கொண்டுவரப்போகிறோம் என்று எஜமானர்கள் சொல்வதற்கு முன்னாடியே எடப்பாடி பழனிசாமி தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிஏஏவை ஆதரித்தால் அதற்கு பெயர் தான் பாசிசத்திற்கு முன்னறே அடிமையாகுதல் ஆகும்.

இன்னும் புரியும்படி சொல்லவேண்டும் என்றால் பண்டிதன் என்றால் சக நண்பன் என்று காலிலையே விழுந்துவிடுவது தான் பாசிசசத்திற்கு மிக நெருக்கமாக பயணிப்பது. இதில் முன்னறே அடிமையாதல் என்பதை எதிர்த்து நின்றவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் தான். உனக்கு அடிமையாக இருக்க முடியாது. அடிபணிய மாட்டேன் என்று தைரியமாக சொல்கிறார். மத்தியஸ்தம் பண்ணும் மத்திய அரசு என்று சொல்லாமல் ஒன்றிய அரசு என்று தைரியமாக கூறியவர்.
இந்திய அரசியல் அமைப்பு படி எங்களுக்கு கொடுப்பதை கொடுத்து தான் ஆகவேண்டும். ஏனென்றால் நீங்கள் மத்திய அரசு கிடையாது, ஒன்றிய அரசு என்று நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே உறுதிபட கூறியவர் முதல்வர் ஸ்டாலின் தான்.
பாசிசத்தின் அணுகுமுறைகள் எப்படி இருக்கும் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள் என்றால், முதலில் பொய்யான எதிரிகளை கட்டமைப்பது, இரண்டாவது அந்த எதிரிகளை அடிமையாக்குவதற்கு நீங்கள் வரும் முன்பே நான் காலில் விழுந்துவிடுவேன் என்ற கட்டமைப்பை உருவாக்கியாச்சு. மூன்றாவது கட்டமாக இங்கு இருக்கக் கூடிய குழுக்களை சிறுசிறு குழுக்களாக பிரித்து நம்மளை சண்டை போட செய்துவிட்டு, பொது எதிரிகளை இருட்டடிப்பு செய்துவிடுவார்கள்.
உங்களுக்கு அவர்கள் பாசிசவாதிகள் என்றே புரியாத அளவிற்கு உங்கள் முன்னாடி ஒரு திரையை கொண்டுவந்து நிறுத்திவிடுவார்கள். அந்த திரைக்கு அவர்கள் ஒரு ஒரு பெயராக வைப்பார்கள். தமிழகத்தின் சூழலுக்கு அதனை பொறுத்தி பார்த்தால், இந்தி எதிர்ப்பை பற்றி நாம் பேசிக்கொண்டு இருந்தால் அவர்கள் சம்பந்தமே இல்லாமல் ஒரு நடிகரை கூப்பிட்டு வந்து பாசிசமா பாயாசமா என்று பேச வைப்பார்கள். இப்போ நம்ம ஆட்கள் என்ன பண்ணுவார்கள் என்றால், பாஜக செய்வதை தான் திமுகவுன் செய்யுது என்று.
நான் வெளிப்படையாக சொல்கிறேன். ஆரியமும் திராவிடமும் ஒன்று என்று சொல்வது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனமோ.. அதேபோலத் தான் பாஜகவும் திமுகவும் ஒன்று என்று சொல்வதும் அயோக்கியத்தனம் தான். எப்படி இவங்க இரண்டு பேரையும் ஒன்னா நிறுத்துறது என்பதற்காக பாசிசம் என்பதை டைவர்ட் பண்ணுற வேலை இருக்குல்லா இதை விட நீங்கள் சொந்த மக்களுக்கு செய்யுற துரோகம் வேற எதுவும் இல்லை.
எப்படி நீங்க பாசிச வார்த்தைகளை நீர்த்துப்போக செய்வீங்க.. பாசிசவாதிகளை காப்பாற்றுவதற்காக நடக்க கூடிய எல்லா பிரச்சினைகளையும் திசை திருப்பி நீங்க பாஜகவுக்கு சாதகமாக பேசிக்கொண்டிருக்கீங்க.. அதற்கு எங்களை போல் பேசக்கூடியவர்களை என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டால், நீ இந்த பிரச்சினைக்கு பேசுனீங்க.. இந்த பிரச்சினைக்கு பேசுனீர்களா என்று கட்டத்திற்கு வருகிறபொது தான் நாங்கள் திரும்ப கேட்கிறோம். திமுகவையும் பாஜகவையும் ஒரே நேர்க்கோட்டில் வைக்கக்கூடியவர்கள் ஆர் எஸ் எஸ் சித்தாந்தத்தை படிப்பதற்கு முன்பாக ஆர் எஸ் எஸ் இந்திய அரசமைப்பு சட்டத்தைப் பற்றி என்ன சொல்கிறது என்பதை பற்றி படித்துவிட்டு வாங்க. இதன்பிற்கு நீங்க பாசிசவாதிதான் திமுக என்று சொல்லுங்க. இவ்வாறு அவர் பேசினார்.
-
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
தவெக சார்பாக களமிறங்கும் அன்புச்செழியன் மகன்.. மதுரை மத்திய தொகுதியில் விவேக் அன்புச்செழியன்? -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
விஜயகாந்த்காக வானத்தை போல படத்தில் விஜய் செய்த சம்பவம்! பக்கத்திலேயே சரத்குமார்.. இப்படி ஒரு விஷயம் இருக்கா! -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications