மூழ்கடிக்கப்படும் ரூ.63,000 கோடி.. கடலுக்கு அடியில் அமையும் 73,000 டன் பிரம்மாண்டம்! என்ன மேட்டர்

Subscribe to Oneindia Tamil

பெர்லின்: ஐரோப்பாவின் மிக பெரிய உட்கட்டமைப்பு திட்டமாக பெஹ்மார்ன்பெல்ட் சுரங்கப்பாதை உருவாகி வருகிறது. கடலுக்கு அடியில் அமையும் இந்த பிரம்மாண்ட பாதை ஐரோப்பாவின் போக்குவரத்து உட்கட்டமைப்பை மொத்தமாக மாற்றும். இந்த திட்டத்தின் சிறப்புகள் என்ன.. இது செயல்பாட்டிற்கு வரும்போது என்ன மாற்றங்கள் எல்லாம் நடக்கும் என்பது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!

ஐரோப்பாவின் மிக முக்கியமான மற்றும் பிரம்மாண்டமான உள்கட்டமைப்பு திட்டங்களில் ஒன்றாக பெஹ்மார்ன்பெல்ட் சுரங்கப்பாதை (Fehmarnbelt Tunnel) கருதப்படுகிறது. உலகின் மிக நீளமான மூழ்கடிக்கப்பட்ட சுரங்கப்பாதையாக உருவாகி வரும் இது குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இங்கே விரிவாகக் காண்போம்.

Fehmarnbelt Tunnel

வெறும் 7 நிமிடங்கள்

இந்த சுரங்கப்பாதை ஜெர்மனி மற்றும் டென்மார்க் ஆகிய இரு நாடுகளையும் நேரடியாக இணைக்கிறது. பால்டிக் கடலுக்கு அடியில் சுமார் 18 கிமீ நீளத்திற்கு இது கட்டப்பட்டு வருகிறது. இது கட்டி முடிக்கப்பட்டால், ஐரோப்பாவின் போக்குவரத்து அமைப்பில் ஒரு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும்.

தற்போது ஜெர்மனிக்கும் டென்மார்க்கிற்கும் இடையே பால்டிக் கடலைக் கடக்கப் படகு மூலம் சுமார் 60 நிமிடங்கள் ஆகிறது. ஆனால், இந்த புதிய சுரங்கப்பாதை பயன்பாட்டிற்கு வந்த பிறகு, இதே தூரத்தை ரயிலில் வெறும் 7 நிமிடங்களிலும், காரில் சுமார் 10 நிமிடங்களிலும் கடந்துவிட முடியும். இது மிக பெரிய வரப்பிரசாதமாகும்.

தனித்துவமானது

மற்ற சுரங்கங்களை விட இது தனித்துவமானது. ஏனென்றால் பொதுவாகச் சுரங்கப்பாதைகள் நிலத்தைத் தோண்டி உருவாக்கப்படும். ஆனால், பெஹ்மார்ன்பெல்ட் சுரங்கப்பாதை அந்த முறையில் கட்டப்படவில்லை. இதற்கு Immersed Tunnel என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. அதாவது, நிலத்தில் மிகப் பெரிய கான்கிரீட் துண்டுகளை உருவாக்கி, பின்னர் அவற்றைக் கடலுக்கு அடியில் கொண்டு சென்று மூழ்கடித்து, ஒன்றோடு ஒன்று இணைக்கிறார்கள்.

இந்தத் திட்டத்தின் ஒரு முக்கிய மைல்கல்லாக, மே 2026-ல் சுரங்கப்பாதையின் முதல் பிரம்மாண்டமான பகுதி வெற்றிகரமாகக் கடலுக்கு அடியில் நிலைநிறுத்தப்பட்டது. இது ஒட்டுமொத்த கட்டுமானப் பணியிலும் மிக முக்கியமான கட்டமாகக் கருதப்படுகிறது. கடலுக்கு அடியில் பொருத்தப்பட்ட முதல் பகுதி மட்டும் 217 மீட்டர் நீளமும், சுமார் 73,000 டன் எடையும் கொண்டது.

சாதாரண காரியமல்ல

இவ்வளவு பெரிய எடையுள்ள அமைப்பைக் கடலுக்கு அடியில் பொருத்துவது சாதாரண காரியமல்ல. மிகச் சிறிய தவறு செய்தால் கூட அதன் பாதிப்பு மோசமாக இருக்கும். சிறிய இடைவெளி அமைந்தால் கூட பாலமே மூழ்கிவிடும். மிகச் சிறிய இடைவெளி கூட இல்லாமல், மிகத் துல்லியமாக இந்தப் பகுதியைப் பொருத்தியுள்ளனர். இது நவீன பொறியியல் தொழில்நுட்பத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

இந்த சுரங்கப்பாதையில் கார்களுக்காக நான்கு வழிச் சாலைகளும், ரயில்களுக்காக இரண்டு மின்மயமாக்கப்பட்ட பாதைகளும் அமைக்கப்படுகின்றன. பயண நேரம் குறைவதால் எரிபொருள் மிச்சமாகும். மேலும், ரயில்களின் பயன்பாடு அதிகரிப்பதால் கார்பன் வெளியேற்றம் பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிரம்மாண்ட திட்டத்தின் மொத்த மதிப்பு சுமார் 7 பில்லியன் யூரோக்கள் (அதாவது இந்திய மதிப்பில் சுமார் 63,000 கோடி ரூபாய்) ஆகும்.

எதிர்பார்ப்பு

இந்த பெஹ்மார்ன்பெல்ட் சுரங்கப்பாதை திட்டம் 2029-ஆம் ஆண்டு முழுமையாக நிறைவடைந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கட்டி முடிக்கப்பட்டால், ஸ்காண்டிநேவிய நாடுகளுக்கும் (டென்மார்க், ஸ்வீடன், நார்வே) மத்திய ஐரோப்பாவிற்கும் இடையிலான உறவு மேம்படும். ஒட்டுமொத்த ஐரோப்பா உள்கட்டமைப்பையும் மாற்றியமைக்கப் போகும் இந்த 'பெஹ்மார்ன்பெல்ட் சுரங்கப்பாதை', நவீன உலகின் ஒரு புதிய அதிசயமாகப் பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+