"இருந்தா இரு இல்லாட்டி போ".. புலம்பி தள்ளிய காயத்ரி.. பாஜகவில் வெடித்த உட்கட்சி மோதல்! அண்ணாமலையா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜகவில் உட்கட்சி மோதல் வெடித்துள்ளதாக அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர். காயத்ரி ரகுராம் ட்விட்டரில் கடந்த 24 மணி நேரமாக பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி வரும் நிலையில்தான் இந்த உட்கட்சி மோதல் குறித்த செய்தி வெளியாகி உள்ளது.

கடந்த மே மாதம் பாஜகவில் புதிய நிர்வாகிகள் பலர் நியமனம் செய்யப்பட்டனர். பாஜக மாநில புதிய நிர்வாகிகள் பட்டியலை மாநில தலைவர் அண்ணாமலைதான் தேர்வு செய்து வெளியிட்டார். மாநில துணைத் தலைவர்களாக வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம், சசிகலா புஷ்பா, நாராயணன் திருப்பதி, பால் கனகராஜ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்.

கலை, கலாச்சார பிரிவு மாநில தலைவர் பொறுப்பில் இருந்து காயத்ரி ரகுராம் நீக்கப்பட்டார். இதையடுத்து அப்பதவிக்கு பெப்சி சிவக்குமார் நியமனம் செய்யப்பட்டார். தனது பதவி பறிக்கப்பட்டது பற்றி காயத்ரி ரகுராம் தொடர்ந்து பல்வேறு ட்வீட்களை போட்டு வந்தார். பதவி பறிக்கப்பட்ட சில நிமிடங்களில், எனது ஒரே தலைவர் பிதாமகன் மதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடி ஜி என்று காயத்ரி ரகுராம் போஸ்ட் செய்து இருந்தார்.

காயத்ரி ரகுராம்

காயத்ரி ரகுராம்

அவரின் போஸ்டுகள் பெரிய அளவில் சர்ச்சையானது. இந்த நிலையில் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக காயத்ரி ரகுராம் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அண்ணாமலைக்கு காயத்ரி நன்றி தெரிவித்தார். அதோடு இந்த பொறுப்பில் சிறப்பாக தொடர்ந்து செயல்படுவேன் என்றும் அறிவித்தார். இந்த நிலையில்தான் நேற்று திடீரென கோபமாக சில போஸ்டுகளை காயத்ரி ரகுராம் செய்து இருந்தார். அதில், சில சமயங்களில் சுரங்கப்பாதையின் முடிவில் வெளிச்சம் இருக்கிறதா என்று எனக்கு சந்தேகம் வரும். என்னைப் பற்றியும் எனது வேலையைப் பற்றியும் நான் வருத்தப்பட்டேன் சொன்னதற்காக ட்ரோல் செய்யப்பட்டேன் அதுவும் ஒரு விசுவாசி குழு பெரும்பாலும் கட்சி ஆதரவாளர்கள் மட்டுமே.

பாஜக பதவி

பாஜக பதவி

திமுக விசிக ட்ரோல்களைப் பற்றி எனக்கு கவலை இல்லை. நான் கட்சியையோ அல்லது எந்த தலைவரையோ எதிர்த்து பேசியதில்லை. ஆனால் சில உண்மையான காரியகர்த்தாக்கள் நான் உணர்ந்ததை புரிந்து கொண்டனர், சிலர் அழைத்தார்கள் மற்றும் பலர் எனக்கு ஆறுதல் கூறினர். நன்றி. எனது வருத்தம் ஒரு கட்சியின் உள் பிரச்சினை அல்ல. யாரிடமும் குறை புகார் கொடுக்க முடியாது. என் கடின உழைப்பின் நம்பிக்கையும் தோல்வியும் மட்டுமே எனக்கு பதிலளிக்க முடியும். கடவுள் மட்டுமே பதில் சொல்ல முடியும். கட்சியை விட்டு வெளியேறும்படி என்னைக் கேட்டவர்கள், குறிப்பாக விசுவாசமான குழு - என்னிடம் ஒரு பதில் உள்ளது - நான் 8 ஆண்டுகள் எனது தொழில்& தனிப்பட்ட வாழ்க்கையை விட்டு தேசத்திற்காக சேவை செய்துள்ளேன், தொடர்ந்து செய்வேன். என்னை கட்சியை விட்டு வெளியேறுமாறு கேட்க யாருக்கும் உரிமை இல்லை.

என்ன மோதல்?

என்ன மோதல்?

சமூக வலைதளங்களில் என் மீதும், எனது குழுவினர் மீதும் எனது கருத்துக்களை வெளிப்படையாக வைக்க வேண்டாம் என்று எனக்கு அறிவுரை கூறியவர்கள் சமூக வலைதளங்களில் என்னை வெளிப்படையாக விமர்சித்து வருகின்றனர். ஏன்? நீங்கள் அனைவரும் சென்று என் மீது அலுவலகத்தில் புகார் கொடுத்திருக்கலாம், என்று குறிப்பிட்டு இருந்தார். காயத்ரியை காசியில் நடந்த காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு அழைத்து செல்லவில்லை. இதற்கான அழைப்பு விடுக்கப்படவில்லை என்ற கோபத்தில் காயத்ரி இப்படி போஸ்ட் செய்ததாக கூறப்பட்டது.

பாஜக வட்டாரம் விசாரணை

பாஜக வட்டாரம் விசாரணை

இது தொடர்பாக பாஜக வட்டாரத்தில் விசாரித்ததில், காயத்ரி கட்சியில் புறக்கணிக்கப்படுகிறார். அதோடு சில பாஜக நிர்வாகிகளே அவருக்கு எதிராக போஸ்ட் செய்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் அவருக்கு எதிராக போஸ்ட் செய்து வருகின்றனர். மாநில தலைவர் இதை தட்டி கேட்கவில்லை. இதன் காரணமாக கோபத்தில் காயத்ரி போஸ்ட் செய்து வருகிறார் என்று விளக்கம் அளித்தது உள்ளனர். இந்த நிலையில்தான் பாஜக ஆதரவு ஐடி ஒன்று காயத்ரி பெயரை குறிப்பிடாமல் விமர்சனம் செய்துள்ளது. அதில், ட்விட்டர்ல 4 followers வெச்சுக்கிட்டு PM ரேஞ்சுக்கு எனக்கு மரியாதை தரனும்னு ஒரு கோமாளி எதிர்பார்த்து சுத்திகிட்டு இருக்கு...தலைவர் அண்ணாமலை வழிகாட்டுதலின்படி இருந்தா இரு இல்லானா மானாட மயிலாட போய் choreographer வேலைய பாரு, என்று காயத்ரி தொழிலை சுட்டிக்காட்டி அவரை விமர்சனம் செய்துள்ளார்.

கடும் விமர்சனம்

கடும் விமர்சனம்

இதை தமிழ்நாடு பாஜக தொழிற்பிரிவு துணை தலைவர் செல்வகுமார் லைக் செய்துள்ளார். இதற்குத்தான் தற்போது காயத்ரி பதில் விமர்சனம் வைத்துள்ளார். அதில், செல்வகுமார் காவி சோசியல் மீடியா கம்பனி ஒன்றை நடத்தி வருகிறார். அந்த கம்பனியில் 2000 பேர் இருக்கிறார்கள். என்னை மற்றும் சீனியர் பாஜக தலைவர்களை கிண்டல் செய்வதுதான் வேலை இவர்களுக்கு. பெண்ணான எனக்கு எதிராக குழுவாக அவர்கள் போஸ்ட் செய்கிறார்கள். நான் ஒரு பிரதமரோ, முதல்வரோ அல்லது கட்சியின் தலைவரோ அல்ல, மற்றவர்கள் போல் அந்த லட்சியம் எனக்கு அல்ல. சிலரை போல ஒவ்வொரு போஸ்டுக்கும் போலியான லைக்கோ, போலியான பாலோயர்களோ வைத்து நான் என்னை காட்டிக்கொள்ளவில்லை. ஆனால் உங்களுடைய சோஷியல் மீடியா டீம் என்னை திமுக கைக்கூலி, க்ரிப்டோ, பாஜகவில் இருந்து வெளியேறு என்றெல்லாம் விமர்சனம் செய்கிறது.

 உங்கள் பின்னணி என்ன?

உங்கள் பின்னணி என்ன?

நான் நடிகை, நடன பயிற்சியாளர் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் உங்கள் பின்னணி அவர்களுக்குத் தெரியுமா? நீங்கள் ஏன் பெங்களூரில் தலைமறைவாக இருந்தீர்கள்?
எல்லாவற்றிற்கும் மேலாக உங்கள் விளம்பரங்களுக்காக நீங்கள் எங்களின் பிரபலமான பாடல்களை மட்டுமே பயன்படுத்துகிறீர்கள். நீங்கள் உங்களை பிரஷாந்த் கிஷோர் என்று நினைத்துக்கொள்கிறீர்கள். என்னை இன்னும் சில ட்ரோல் செய்யும் வாய்ப்புகள் இருக்கின்றன. அதை பற்றி நான் கவலைப்படவில்லை, என்று காயத்ரி ரகுராம் தெரிவித்து உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+