காங்கிரசில் "கருப்பு ஆடு".. திமுக கூட்டணியை உடைக்க "அவருக்கு" அசைன்மெண்ட்.. சிரிக்கும் எடப்பாடி?
சென்னை: காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையின் சமீபத்திய பேச்சுக்கள் திமுகவினர் சிலரை அப்செட் ஆக்கி உள்ளதாம்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று காங்கிரஸ் பொதுக்குழு கூட்டத்தில் பேசுகையில் , நாம் சார்ந்து இருக்கப் போகிறோமா? சுயமாக இருக்கப் போகிறோமா? இன்னும் எத்தனை காலம் சார்ந்தே இருக்கப் போகிறோம்? நமது இயக்கத்திற்கு வரலாறு உண்டு; எவ்வளவு காலம் சார்ந்திருப்போம் என்பதற்கு விடை உங்களிடம் உள்ளது

'நாம் எந்த திசையில் செல்லப் போகிறோம்? எவ்வளவு காலம் பிறரை சார்ந்திருக்க முடியும்?' தனியாக போட்டியிடுவது பெரிய குற்றம் இல்லை; தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு 20 சதவீதம் வாக்குகளை பெற்றது; கட்சி கட்டமைப்பை வலிமைப்படுத்த வேண்டும், என்று கூறி இருந்தார்.
பதிலடி: இதற்கு பதிலடி கொடுத்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், தமிழகத்தில் இன்று 40-க்கு 40 வென்றிருக்கிறோம் என்றால் அதற்கு காரணம் திமுக.. ஆசை இருக்கலாம் ஆனால் பேராசை இருக்கக் கூடாது.. எதிரியை ஒழிக்காமல், எப்படி அந்த இடத்தை பிடிப்பீர்கள் என்று யோசியுங்கள்; ஆசை இருக்கலாம், பேராசைக் கூடாது ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பதிலடி கொடுத்தார்.
கருப்பு ஆடு: காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையின் சமீபத்திய பேச்சுக்கள் திமுகவினர் சிலரை அப்செட் ஆக்கி உள்ளதாம். அதன்படி காங்கிரசில் கருப்பு ஆடு இருப்பதாக திமுகவினர் சிலர் நம்புகின்றனர்.
திமுக - காங்கிரஸ் கூட்டணியை முறித்து அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது தான் காங்கிரசில் சில கருப்பு ஆடுகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள அசைன்மெண்ட். கூட்டணியை உரசல் இல்லாமல் 5 ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டு செல்லும் முதலமைச்சரை இழிவுபடுத்தும் விதமாக இப்படி செய்ய கூடாது.
காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை மறைமுகமாக சிலர் வழி நடத்துகிறார்கள். அவர் திமுக கூட்டணியை உடைக்க பார்க்க கூடாது என்று திமுகவினர் குமுறி உள்ளனர்.
எடப்பாடி குஷி: இதனால் இன்னொரு பக்கம் எடப்பாடி குஷி அடைந்துள்ளார். அதாவது திமுக - காங்கிரஸ் கூட்டணி உடையும். காங்கிரஸ் தங்கள் பக்கம் வரும். அதிமுக - காங்கிரஸ் கூட்டணி உருவாகும் என்று எடப்பாடி நினைக்கிறாராம். காங்கிரஸ் - திமுக கூட்டத்தை உடைக்க இந்த பிளான் எடுக்கப்பட்டு உள்ளதாம். 3 மாதங்களில்.. அதாவது பிப்ரவரிக்கு முன் கூட்டணியை முறிப்பதே இந்த ஆபரேஷன் திரிசூலம் என்கிறார்கள். திமுக- காங்கிரஸ் இடையே கூட்டணியில் பெரிய விரிசல் இல்லை.
ஆனால் இந்த சமீபத்திய பேச்சுக்களை பயன்படுத்து காங்கிரஸ் - திமுக கூட்டணியை உடைக்க எடப்பாடி வேலைகளை பார்த்து வருகிறாராம்.
காங்கிரஸ் கருத்து என்ன?: ஆனால் காங்கிரஸ் கட்சி உட்கட்சி வட்டாரங்கள் கூறுகையில், செல்வப்பெருந்தகை திமுக கூட்டணியை உடைக்க பார்க்கவில்லை. தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திரா, கேரளா போல தமிழ்நாட்டில் காங்கிரசை வளர்க்க பார்க்கிறார். தமிழ்நாட்டில் காங்கிரசை தனி பெரும் கட்சியாக மாற்ற பார்க்கிறார். மற்றபடி திமுக உடன் மோதும் எண்ணம் எல்லாம் செல்வப்பெருந்தகைக்கு இல்லை என்கின்றனர் காங்கிரஸ் கட்சியினர்.
ஸ்டாலின் கவலை இல்லை: ஆனால் இதை எல்லாம் திமுக தலைவர் ஸ்டாலின் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. என்ன நடந்தாலும் கூட்டணி முறியாது. ஸ்டாலின் - ராகுல் உறவு அப்படி. ஏதாவது பிரச்சனை வந்தால் டெல்லியில் பேசி சரி செய்துவிடலாம் என்று ஸ்டாலின் நம்புகிறாராம் .
-
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி!











Click it and Unblock the Notifications