Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை டூ பெங்களூர் ஜஸ்ட் 25 நிமிடங்களில்.. புல்லட் ரயில் எல்லாம் ஓரம் போ.. பாயும் ஹைப்பர்லூப்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தென் இந்தியாவின் முக்கிய நகரங்களான சென்னை டூ பெங்களூர் இடையே வெறும் 25 நிமிடங்களில் செல்லலாம் என்றால் நம்ப முடிகிறதா.. ஆனால், அது உண்மைதான். அது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

எந்தவொரு நாட்டின் வளர்ச்சிக்கும் போக்குவரத்து உள்கட்டமைப்பு ரொம்பவே முக்கியம்.. முக்கிய நகரங்களுக்கு இடையே போக்குவரத்து உள்கட்டமைப்பு சிறப்பாக இருந்தால் மட்டுமே மக்கள் எளிதாகப் பயணிக்க முடியும்.

இதன் காரணமாகவே அரசு பல்வேறு போக்குவரத்து உள்கட்டமைப்புகளில் முதலீடு செய்து வருகிறது. எக்ஸ்பிரஸ் சாலைகள், வந்தே பாரத் ரயில்கள் என்று பல போக்குவரத்து முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 சென்னை பெங்களூர்

சென்னை பெங்களூர்

சாலைகளைக் காட்டிலும் ரயில்களில் மத்திய அரசு அதிக முதலீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை இருந்து கொண்டே தான் இருக்கிறது. பாதுகாப்பானது, பயணிகளுக்கு ஆகும் செலவும் குறைவு உள்ளிட்ட காரணங்களால் ரயில்களையே மக்கள் விரும்புகின்றனர். அதன்படி தென் இந்தியாவின் முக்கிய நகரங்களான சென்னை பெங்களூர் இடையே ஏற்கனவே பல ரயில்கள் இருக்கும் நிலையில், சமீபத்தில் தான் புதிதாக வந்தே பாரத் ரயிலும் சென்னை பெங்களூர் மைசூர் இடையே இயக்கப்படுகிறது.

 வெறும் 25 நிமிடங்கள்

வெறும் 25 நிமிடங்கள்

இதன் மூலம் சென்னையில் இருந்து பெங்களூருக்கு வெறும் 4.30 மணி நேரத்தில் செல்ல முடிகிறது. இப்போது இரு நகரங்களுக்கு இடையேயான கனெக்டிவிட்டையே மேலும் விரைவுபடுத்தும் முயற்சியிலும் அரசு இறங்கியுள்ளது. இதன் மூலம் சென்னையில் இருந்து பெங்களூருக்கு வெறும் 25 நிமிடங்களில் செல்ல முடியுமாம். ஆமாம், வெறும் 25 நிமிடங்களில் சென்றுவிடலாம். அப்படி என்ன தொழில்நுட்பம் என்று கேட்கிறீர்களா.. அதுதான் ஹைப்பர் லூப் தொழில்நுட்பம். அது என்ன தொழில்நுட்பம். இதில் இருக்கும் சிறப்புகள், சவால்கள் என்ன என்பதை என்பதைப் பார்க்கலாம்.

டெண்டர்

டெண்டர்

ஏற்கனவே, மும்பை - அகமதாபாத் இடையே புல்லட் ரயில் திட்ட கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. தற்போது இருக்கும் போக்குவரத்து சேவைகளில் புல்லட் ரயில் திட்டம் ஒரு மைல்கல்லாக இருக்கும். இதன் அடுத்தகட்டமாக ஹைப்பர் லூப் தொழில்நுட்பம் இருக்கும். சென்னை பெங்களூர் இடையே இந்த ஹைப்பர் லூப் தொழில்நுட்பத்தை அமல்படுத்துவது தொடர்பான சாத்தியக் கூறு ஆய்வை இந்தியன் ரயில்வே மேற்கொள்ளப் போகிறது. இத்திட்டத்திற்கு ஆலோசகர்களைத் தேர்வு செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது.

 ஹைப்பர்லூப் தொழில்நுட்பம்

ஹைப்பர்லூப் தொழில்நுட்பம்

அதிவேக போக்குவரத்தின் மகத்துவம் என்று ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தைச் சொல்லலாம். ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தின் கீழ் வெற்றிட குழாய்க்குள் அமைக்கப்படும். பின்னர் அந்த வெற்றிட குழாய்க்குள் கேப்சூல் அனுப்பப்படும். உள்ளே வெற்றிடம் என்பதால் காந்த அலைகள் மூலம் மின்னல் வேகத்தில் இந்த கேப்சூலை நகர்த்த முடியும். இதுதான் ஹைப்பர்லூப் தொழில்நுட்பம்.. நிலத்திற்குக் கீழ் இந்த வெற்றிட அமைப்பை ஏற்படுத்தலாம். அல்லது மேலே ரயில் பாலங்களைப் போல இதற்காகவும் தூண்களை அமைக்கப்படும். இந்த கேப்சூல் போன்ற அமைப்பில் பயணிகள் பயணிக்கலாம்.

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

உலகில் இதுவரை எந்தவொரு நாட்டிலும் ஹைப்பர்லூப் தொழில்நுட்பம் செயலில் இல்லை. இருப்பினும், இதற்கான ஆய்வுகள் உலகெங்கும் நடந்து வருகிறது. குறிப்பாக அமெரிக்காவிலும் இதற்கான சோதனைகளைத் தொடங்கப்பட்டுள்ளது. அங்கே இதை எலான் மஸ்க் தனது போரிங்க் கம்பெனி என்ற நிறுவனம் மூலம் ஆய்வுகளைச் செய்து வருகிறார். மணிக்கு 1200 கிமீ வேகத்தில் செல்வதன் மூலம் இது பொது போக்குவரத்து முறையே மாற்றும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இது தொடர்பான ஆய்வுகள் அங்கே தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்தியா

இந்தியா

சென்னை- பெங்களூர் இடையே மட்டுமின்றி, மும்பை புனே இடையே ஹைப்பர் லூப் பாதை அமைக்கும் திட்டமும் பரிசீலனையில் இருக்கிறது. இத்திட்டம் வந்தால் சென்னை டூ புனே வரை வெறும் 35 நிமிடங்களில் செல்ல முடியும். இதற்குத் தேவையான ஒப்புதல்களைப் பெற்று, அடுத்தகட்ட நடவடிக்கையைத் தொடங்கும் பணிகளில் மகாராஷ்டிர அரசு ஈடுபட்டுள்ளது. சென்னை ஐஐடியின் ஏரோ நாட்டிக்கல் மாணவர்களும் இது குறித்து தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். எவ்வளவு சீக்கிரம் முடியுமா அவ்வளவு சீக்கிரம் போக்குவரத்தைத் தொடங்க இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

டெண்டர்

டெண்டர்

இந்தச் சூழலில் தான் ஹைப்பர் லூப் திட்டத்திற்கான சாத்தியக் கூறு அறிக்கை கோரப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் அறிவிப்பை ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள நிலையில், சோதனை முறையில் செயல்படுத்துவது, நிதி ஆதாரம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்படும். இந்தியாவில் 2026இல் புல்லட் ரயில் பயன்பாட்டிற்கு வரும் என்றும் அதன் பிறகு சில ஆண்டுகளில் ஹைப்பர் லூப் போக்குவரத்து திட்டத்திற்கான பணிகள் தொடங்கப்படும் என்றும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+