வந்த வழியே திரும்பி போகணும்.. வெலவெலத்து போன ஓபிஎஸ்.. இனி இருக்கும் ஒரே சான்ஸ்.. மனசு மாறுவாரா?
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் அடுத்தடுத்து தோல்வி அடைந்த நிலையில், ஓ பன்னீர்செல்வம் அடுத்து என்ன செய்வார் என்று கேள்வி எழுந்துள்ளது. அவருக்கு தற்போது 2 விதமான வாய்ப்புகள் மட்டுமே உள்ளன.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும், ஜூலை 11ம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.
அதேபோல் பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிரான ஓபிஎஸ் தரப்பு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.

பொதுக்குழு தீர்மானம்
ஜூலை 11 அன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும், அதோடு பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த தடை இல்லை என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. பொதுக்குழு உறுப்பினர்களின் பெரும்பான்மை வாக்குகள் மூலம் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதனால் அந்த தீர்மானங்களை நிராகரிக்க முடியாது. அதோடு பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அதனால் பொதுக்குழு தீர்மானங்களும் செல்லும். அதிமுக பொதுக்குழு வழக்கில் வென்ற நிலையில் எடப்பாடி பழனிச்சாமி இன்றே அதிமுகவின் பொதுச்செயலாளராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளார். அதாவது அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக அதிமுக தேர்தல் குழு நிர்வாகிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்த தீர்ப்பு காரணமாக ஓ பன்னீர்செல்வத்திற்கு பின்வரும் பின்னடைவுகள் ஏற்பட்டு உள்ளன,
ஓபிஎஸ் நீக்கப்பட்டது செல்லும்.
பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எல்லாம் செல்லும்.
அதிமுகவில் இனி எல்லாம் எடப்பாடி பழனிசாமிதான்.
அதிமுக பொதுக்குழு வழக்கில் அடுத்தடுத்து தோல்வி அடைந்த நிலையில், ஓ பன்னீர்செல்வம் அடுத்து என்ன செய்வார் என்று கேள்வி எழுந்துள்ளது. அவருக்கு தற்போது 2 விதமான வாய்ப்புகள் மட்டுமே உள்ளன.

சான்ஸ் 1
அதன்படி ஓ பன்னீர்செல்வம் இன்று நடக்கும் மேல்முறையீடு வழக்கில் இந்த உத்தரவிற்கு இடைக்கால தடை கோர முடியும். அல்லது அங்கும் அவருக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால் ஓ பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்ய முடியும். உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்புகள் உள்ளன. ஆனால் உச்ச நீதிமன்றத்தில் இவருக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால் அதன்பின் வேறு எங்கும் தீர்வு கிடைக்கும் வாய்ப்புகளும் இல்லை. ஏனென்றால் ஏற்கனவே உச்ச நீதிமன்றம் பொதுக்குழு செல்லும் என்று கூறிவிட்டதால் இனி பொதுக்குழு தீர்மான வழக்கிலும் அதே போன்ற தீர்மானத்தைதான் உச்ச நீதிமன்றம் வழங்க வாய்ப்புகள் உள்ளன. சட்ட போரட்டத்தில் ஓ பன்னீர்செல்வம் தீர்வு பெற்று வெல்வது என்பது இனி கடினம்தான்.

சான்ஸ் 2
இந்த வழக்கில் ஓ பன்னீர்செல்வத்திற்கு இருக்கும் இரண்டாவது சான்ஸ் சமாதானம் பேசுவது. அதாவது ஓ பன்னீர்செல்வம் அதிமுக தரப்பில் ஏதாவது சமாதானம் செய்து. கட்சிக்குள் ஏதாவது பதவி வாங்கிக்கொண்டு மீண்டும் அதிமுகவில் இணைய முடியும். அதாவது வந்த வழியே அவர் திரும்பி செல்லலாம். ஏனென்றால் வரிசையாக பொதுக்குழு வழக்குகளில் அவர் தோல்வி அடைந்துவிட்டதால் இனி அவரால் வழக்கு ரீதியாக வெல்ல முடியாது. அவருடன் நெருக்கமாக இருக்கும் நபர்களும் அணி மாற வாய்ப்புகள் உள்ளன. தனித்துவிடப்பட்டு அவமானப்படுவதை விட கொஞ்சம் சமாதானம் செய்து எடப்பாடி தலைமையை அவர் ஏற்றுக்கொள்வது சரியாக இருக்கும்.. ஆனால் எடப்பாடி ஓ பன்னீர்செல்வத்தை ஏற்றுக்கொள்வாரா என்பது சந்தேகம்தான்!












Click it and Unblock the Notifications