இவ்ளோதாங்க வாழ்க்கை.. "கெளசிக்" வைத்திருந்த உருக்கமான வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்.. இப்படி ஆகிடுச்சே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமா விமர்சகர் மற்றும் சினிமா புரொமோஷன் பணிகளை செய்ய கூடிய கெளசிக்கின் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் இணையம் முழுக்க தீயாக பரவி வருகிறது. 30 வயதை எட்டிய இளைஞர்களுக்கு மிகப்பெரிய பாடமாக இந்த ஸ்டேட்டஸ் உள்ளது.

Recommended Video

    இவ்ளோதாங்க வாழ்க்கை, Kaushik வைத்திருந்த உருக்கமான Whatsapp Status *Celebrity | Oneindia Tamil

    கோலிவுட்டில் பிரபலமாக வலம் வந்த விமர்சகர்களில் கெளசிக் முக்கியமானவர். இவர் சினிமா புரொமோஷன், சினிமா விளம்பரம் உள்ளிட்ட பல்வேறு பணிகளையும், பிஆர்ஓ தொடர்பான பணிகளையும் செய்து வந்தார்.

    சினிமா தொடர்பான தகவல்களை உடனுக்குடன் தெரிவித்து வந்தார். தனியார் யூ டியூப் சேனல் ஒன்றில் தொகுப்பாளராகவும் பணியாற்றி வந்தார்.

    இவருக்கு 35 வயதுதான் ஆகிறது.

    என்ன ஆனது?

    என்ன ஆனது?

    இந்த நிலையில் நேற்று மாலை திடீரென இவர் மரணம் அடைந்தார். நேற்று காலை கூட சலார் உள்ளிட்ட சில படங்கள் பற்றிய அப்டேட்களை வெளியிட்டார். இந்த நிலையில் மாலை வேறு ஒரு சினிமா நிகழ்வில் இவர் கலந்து கொள்வதாக இருந்தது. அதற்கு முன் வீட்டில் ஓய்வு எடுப்பதற்காக உறங்க சென்றவர் தூக்கத்திலேயே மரணம் அடைந்துவிட்டார் என்று கூறப்படுகிறது. தூக்கத்திலேயே இவருக்கு கார்டியாக் அரஸ்ட் ஏற்பட்டு உள்ளது.

    மரணம்

    மரணம்

    இதுவே இவரின் மரணத்திற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. நேற்று மாலை இவரின் வீட்டிற்கு சென்று.. அந்த சினிமா நிகழ்ச்சிக்கு அழைக்க சென்ற நபர்கள்தான்.. இவர் மரணம் அடைந்துவிட்டார் என்பதை கண்டுபிடித்து உள்ளனர். இவரின் மரணம் தமிழ் சினிமா உலகை உலுக்கி உள்ளது. பல முன்னணி சினிமா நட்சத்திரங்களுக்கு இவர் மிகவும் நெருக்கமாக இருந்தவர். இதனால் முன்னணி நட்சத்திரங்கள் பலர் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

    இரங்கல்

    இரங்கல்

    இந்த நிலையில்தான் கெளசிக் வைத்திருந்த வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் இணையம் முழுக்க பரவி வருகிறது. நல்ல உடல்நலம்தான் நம்முடைய சொத்து. மற்றதெல்லாம் அதற்கு பின்புதான். வலியை மறந்து விடுங்கள்.. வாழ்க்கையில் விட்டுக்கொடுக்க கூடாது என்று கெளசிக் தனது வாட்ஸ் ஆப்பில் பயோவில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். அவரின் இந்த பயோ பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இணையத்தில் பலர் இதை ஷேர் செய்து வருகிறார்கள்.

    ஷேர்

    ஷேர்

    உடல்நலம் குறித்து கவனமாக இருந்தவருக்கு மாரடைப்பு எப்படி வந்தது. என்ன கொடுமை இது. 35 வயதிலேயே ஒருவருக்கு மாரடைப்பு வருவது எப்படி என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதிலும் சமீபத்தில் பலருக்கு இப்படி மாரடைப்பு வருவது, ஆண்கள் பலர் 35 வயதிலேயே மரணம் அடைவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. . 30 வயதை எட்டிய இளைஞர்களுக்கு மிகப்பெரிய பாடமாக கெளசிக் வைத்துள்ள ஸ்டேட்டஸ் பார்க்கப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+