மஞ்சுமெல் பாய்ஸில் "எடா லூஸ் அடிக்கடா"! அது என்ன டெக்னிக்? எந்த போட்டிக்கு பயன்படுகிறது தெரியுமா?
சென்னை: மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் எடா லூஸ் அடிக்கடா என ஒருவர் சொல்லும் போது அரங்கமே அதிரும் பார்த்திருக்கிறீர்களா? அது என்ன லூஸ் அடி டெக்னிக்?
மஞ்சுமெல் பாய்ஸ் படம் வந்தாலும் வந்தது, தற்போது எங்கு திரும்பினாலும் கண்மணி அன்போடு காதலன் பாடல்தான் ஒலிக்கிறது. இந்த மலையாள படம் கடந்த மாதம் 22 ஆம் தேதி வெளியானது.

பொதுவாக மலையாள படங்களுக்கு தமிழ் ரசிகர்களிடையே அதிக வரவேற்பு இருக்கும். ஆனால் இந்த படத்தில் மலையாளம் பாதியும் தமிழ் மீதியும் வைத்து எடுக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு அதிக ஆதரவு உள்ளது. இதை அதன் கலெக்ஷனை பார்த்தாலே தெரியும்.
இந்த படத்தை சிதம்பரம் என்பவர் இயக்கியுள்ளார். கடந்த 2006ஆம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம்தான் இது. கேரள மாநிலம் கொச்சியில் உள்ள மஞ்சுமெல் என்ற இடத்தை சேர்ந்த நண்பர்கள் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்கிறார்கள். அப்போது வந்த இடத்தில் குணா குகையின் தடை செய்யப்பட்ட பகுதிக்கு செல்கிறார்கள்.
அங்கு சுபாஷ் என்ற நண்பர் தவறுதலாக பல அடி ஆழ குழிக்குள் விழுந்து விடுகிறார். அவரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என நண்பர்கள் துடிக்கிறார்கள். உடனே பிணத்தை தூக்கும் நபர்கள், கைடுகளிடம் உதவி கேட்கிறார்கள். அவர்களோ அங்கு ஏன் சென்றீர்கள். அது ஆபத்தான இடம். பெரிய பிரச்சினையாகிவிடும்.
எனவே அவரை விட்டுவிட்டு அப்படியே ஊருக்கு செல்லுங்கள் என்கிறார்கள். ஆனாலும் இவர்கள் கெஞ்சுவதை பார்த்து சரி போலீஸுக்கு தகவல் சொல்லிவிட்டு வாருங்கள் என கூற, அவர்களும் செல்கிறார்கள். போலீஸ், தீயணைப்புத் துறையினர் வந்து பார்க்கிறார்கள். இது பெரிய ஆழம் கொண்டது, இதில் விழுந்தவர்கள் யாருமே பிழைத்ததில்லை.
எனவே ஊருக்கு சென்றுவிடுங்கள் என சொல்ல நண்பர்களோ முடியாது, என்கிறார்கள். அப்போது அவர்களை அப்புறப்படுத்த போலீஸார் முயன்ற போது நண்பர்களில் ஒருவர் சுபாஷு சுபாஷு என அழுகிறார்கள். உடனே பதிலுக்கு ஒரு குரல் கேட்கிறது. இது ஊர் மக்களுக்கும் தெரிந்துவிடுகிறது. இதனால் வேறு வழியில்லாமல் மீட்பு பணிகளில் போலீஸார் ஈடுபடுகிறார்கள்.
அந்த ஆழத்தில் இறங்க போலீஸாரே தயங்கும் போது குட்டன் என்ற நண்பர் நான் இறங்குகிறேன் என்கிறார். சுபாஷ் விழுந்ததற்கு ஒவ்வொரு வகையில் ஒவ்வொரு நண்பர்கள் காரணமாகிவிடுகிறார்கள். அந்த குணா குகைக்கு தடுப்பை தாண்டி அபிலேஷ் என்ற நண்பர் குதிக்க அவரை பார்த்துதான் இவர்கள் எல்லாருமே குதிப்பார்கள்.
இதனால் சுபாஷ் விழுந்ததில் அபிலாஷுக்கு குற்ற உணர்ச்சி ஏற்படுகிறது. இதனால் அவர் சுபாஷ் போய்ட்டான், போய்ட்டான் என பிதற்றிக் கொண்டே இருப்பார். இதனால் அவரை அழைத்து கொண்டு வேறு ஒரு இடத்தில் உட்கார வைத்திருப்பர். இந்த நிலையில் மீட்பு பணியின் போது சுபாஷை மேல் கொண்டு வரும் போது பாறை ஒன்று இடிக்கும், கயிறும் வேறு பக்கம் திரும்பி இருக்கும்.

அப்போது கயிறை இழுக்கும் நண்பர்கள் போராடுவார்கள். இவர்கள் இழுப்பதால் வலியால் சுபாஷும் கதறுவார். அப்போது ஒரு பாறை மீது ஏறி நிற்கும் அபிலாஷ், ஏதோ செய்ய போகிறார் என பயந்தப்படியே நண்பர்கள் பார்க்க, அங்கிருந்து போகச் சொல்கிறார்கள். உடனே அபிலாஷ், " எடா லூஸ் அடிக்கடா" என கத்தும் போது ரசிகர்கள் தியேட்டர்களில் ஆரவாரம் செய்வார்கள்.
அது என்ன லூஸ் அடி டெக்னிக் என்பதை பார்க்கலாம். இந்த லூஸ் அடிக்கும் டெக்னிக் கயிறு இழுக்கும் போட்டியில் எப்படி உதவுகிறது தெரியுமா? இரு புறமும் கயிற்றை இழுக்கும் போது நேக் தெரிந்து பயன்படுத்துவதுதான் லூஸ் அடி டெக்னிக். அதாவது எதிரணியினர் டைட்டாக இழுக்கும் போது மற்றொரு அணியினர் சில வினாடிகள் குரூப்பாக லேசாக லூஸ் விடுவார்கள். அப்போது மாற்று அணியினர் உடனே டைட்டாக இழுத்துவிடுகிறார்கள். இதனால் எதிரணியினர் தோல்வி அடைவார்கள்.
நீங்கள் கேட்கலாம் லூஸ் அடிக்கும்போது அவர்கள் பிடித்து இழுக்க மாட்டார்களா என்று? லூஸ் விடும் போது எதிரணியினர் லேசாக அவர்கள் நிற்கும் இடத்திலிருந்து நகருவர். அப்போது மாற்று அணியினர் டைட் செய்யும் எதிரணியினர் நிலத்தின் உராய்வு தன்மையை (ground friction) இழந்துவிடுவார்கள். இதனால் அவர்களால் டைட்டாக இழுக்க முடியாமல் எல்லாரும் மொத்தமாக விழுந்துவிடுவார்கள். இதுதான் லூஸ் அடி டெக்னிக்!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications