இப்போ தேவையா? ஸ்டாலினின் கனவு "பிளான்".. பட்டென குறுக்கே புகுந்த விஜயகாந்த்! என்ன இப்படி சொல்கிறாரே?
சென்னை: மக்கள் ஐடி திட்டம் குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலினின் கனவு திட்டம் என்று கூறப்படும் இந்த திட்டம் குறித்து விஜயகாந்த் முக்கியமான சில கேள்விகளை எழுப்பி உள்ளார்.
தமிழ்நாட்டில் மக்கள் ஐடி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த மக்கள் ஐடியை பலரும் ஐடி கார்ட் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இதற்காக சர்வே, ஆய்வுகள் செய்யப்படும் என்று நினைக்கிறார்கள். ஆனால் இதற்காக நேரடி சர்வே எதுவும் எடுக்கப்படாது. அதேபோல் ஆதார் கார்ட் போல கையில் இதற்காக கார்ட் எல்லாம் கொடுக்க மாட்டார்கள்.
இது தொடர்பாக ஐடி துறை அமைச்சர் மனோ தங்கராஜ் முக்கிய விவரங்களை வெளியிட்டு இருக்கிறார். அவர் அளித்துள்ள பேட்டியில், இது முதல்வரின் கனவு திட்டம். அவர் கொண்டு வர வேண்டும் என்று விரும்பிய முக்கியமான திட்டம். மக்களுக்கு தரவுகளின் அடிப்படையில் அரசை ஏற்படுத்தி திட்டங்களை கொடுப்பது. பல்வேறு துறைகள் உள்ளன, திட்டங்கள் உள்ளன. இந்த திட்டங்கள் எல்லாம் சாப்ட்வேரில் இருக்கிறது. இந்த திட்டங்களை எல்லாம் ஒருங்கிணைப்பதே இந்த திட்டத்தின் நோக்கம். இதன் மூலம் திட்டங்களை எல்லாம் ஒருங்கிணைப்போம், என்று கூறி இருக்கிறார்.

அறிக்கை
இந்த நிலையில்தான் மக்கள் ஐடி திட்டம் குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அனைத்து சலுகைகளும் பெற ஆதார் எண் இருக்கும் போது மக்கள் ஐடி திட்டம் தேவையா? என்ற பெயரில் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு மாநிலத்தில் வசிக்கும் மக்களுக்கு, மக்கள் ஐடி என்ற தனித்துவ அடையாள எண்ணை வழங்கப்போவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. தமிழக அரசின் மின் ஆளுமை முகமையின் சமீபத்திய டெண்டர் அறிவிப்பின்படி, குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் மக்கள் ஐடி என்ற பெயரில் 12 இலக்க எண் வழங்கப்படவிருப்பதும், அனைத்து சேவைகளையும் இதன் மூலம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது. மேலும் மக்கள் ஐடி மாநிலத்தில் உள்ள பல்வேறு துறைகளுக்கு இடையிலான தொடர்புக்கு மட்டுமே பயன்படுத்தப்பட உள்ளது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்த்
இதன் மூலம் இந்த திட்டத்தில் வெளிப்படை தன்மை இல்லாத நிலை உருவாகியுள்ளது. இந்த திட்டம் தொடர்பாக தமிழக அரசு தரப்பில் பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்பட்டாலும், ஏற்கனவே அனைத்து சலுகைகளுக்கும் ஆதார் எண் பயன்படுத்தி வரும் நிலையில், மக்கள் ஐடி திட்டம் எதற்கு என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. இப்படி ஒவ்வொரு மாநிலமும் தனி அடையாள எண் வழங்க முன்வந்தால், நாட்டில் குழப்பம் ஏற்படாதா? எனவே இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பு தமிழக மக்களிடம் அரசு கருத்து கேட்க வேண்டும். அதேசமயம் தமிழகத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

வரையறை
அவர்களின் வருகையை வரைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் வசிக்கும் வெளி மாநில தொழிலாளர்களை கணக்கெடுப்பு நடத்திய பிறகு, மக்கள் ஐடி போன்ற திட்டங்களை வெளிப்படைத் தன்மையோடு தமிழக அரசு செயல்படுத்த வேண்டும், என்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மக்கள் ஐடியை பலரும் ஐடி கார்ட் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இதற்காக சர்வே, ஆய்வுகள் செய்யப்படும் என்று நினைக்கிறார்கள். ஆனால் இதற்காக நேரடி சர்வே எதுவும் எடுக்கப்படாது. அதேபோல் ஆதார் கார்ட் போல கையில் இதற்காக கார்ட் எல்லாம் கொடுக்க மாட்டார்கள்.

ஆதார் கார்ட்
மக்கள் ஐடி என்பது ஆதார் கார்ட் போல இருக்காது. ஆனால் இதில் ஆதார் விவரங்களும் இடம்பெற்று இருக்கும். இது மாநில குடிமக்களுக்கான ஒரு டேட்டா பேஸ் அடையாள எண் ஆகும். இந்த ஒரு டேட்டா பேசில் உங்களை பற்றிய எல்லா தகவலும் இருக்கும். உதாரணமாக ஒரு நபரை எடுத்துக்கொள்வோம். அந்த நபருக்கு என்று ஒரு ஐடி கொடுக்கப்படும். இது அவரிடம் கொடுக்கப்படாது. ஆனால் அரசுக்கு அவருக்காக இந்த ஐடியை உருவாக்கி டேட்டா பேஸில் வைத்து இருக்கும். 12 இலக்கம் கொண்ட ஐடி ஆகும் இது. இந்த ஐடியில் அந்த நபர் பற்றிய எல்லா தகவலும் இருக்கும். அவர் எங்கே படித்தார், அவரின் வருமானம் என்ன, அவர் ஏழையா,அவர் என்ன ஜாதி, இடஒதுக்கீடு இருக்கிறதா என்றெல்லாம் விவரங்கள் இருக்கும். அவர் பெற கூடிய திட்டங்களின் பயன்கள் என்னென்ன, அவர் வீட்டில் சிலிண்டர் எத்தனை உள்ளது, அவர் ரேஷனில் எவ்வளவு பொருட்கள் வாங்குகிறார் போன்ற விவரங்கள் எல்லாம் இருக்கும்.

விவரங்கள்
ஒருவேளை அவர் ஏழையாக இருந்து, அவருக்கு ஏதாவது ஒரு அரசின் திட்டம் சென்று சேரவில்லை என்றால் அதை உடனே அவருக்கு வழங்க முடிவு எடுக்கப்படும். அரசின் 30 + துறைகளும் இந்த ஒரு எண்ணுக்குள் வந்துவிடும். ஆம் அனைத்து துறைகளில் இருந்தும் ஒருவருக்கு கிடைக்கும் திட்டங்களுக்கான விவரங்கள் இந்த ஐடிக்குள் வந்துவிடும். அரசு அலுவலகங்களில் ஏதாவது திட்டத்திற்காக நீங்கள் சென்றீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அது போன்ற சமயங்களிலும் கூட இந்த ஐடி மூலமாக உங்களுக்கு அந்த திட்டம் ஏற்புடையதா, நீங்கள் தகுதியானவரா என்று எளிதாக கண்டுபிடிக்க முடியும்












Click it and Unblock the Notifications