மிரட்டிய கமல்.. இந்த "Thug life" என்றால் என்ன அர்த்தம் தெரியுமா.. பின்னால் இருக்கும் ரத்த வரலாறு
சென்னை: உலக நாயகன் கமல் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் 'Thug life' என்ற படத்தின் அறிமுக வீடியோ வெளியாகியுள்ள நிலையில், இந்த Thug வார்த்தைக்கும் இந்தியாவுக்கும் இடையே இருக்கும் தொடர்பு, அதன் ரத்த வரலாறு குறித்துப் பார்க்கலாம்.
மணிரத்னம் இயக்கத்தில் உலக நாயகன் கமல் நடிப்பில் உருவாகும் படம் "Thug life." இந்தப் படத்தில் துல்கர் சல்மான், ஜெயம் ரவி, த்ரிஷா உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். இன்று இந்த படத்தின் அறிமுக வீடியோ வெளியாகியுள்ள நிலையில், இப்போதே இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துவிட்டது.

Thug life என்ற இந்த வார்த்தை நமக்கு ஒன்றும் புதிதான வார்த்தை இல்லை. சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்கில் இருக்கும் வார்த்தை தான். ஆனால், இந்த 'Thug life' என்பதற்கு உண்மையில் என்ன அர்த்தம். அது எப்படி புழக்கத்தில் வந்தது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
வார்த்தை பின்னணி: ஆங்கில வார்த்தையான thug என்ற இந்த வார்த்தையின் வேர்ச்சொல் வடமொழி அல்லது இந்தியில் இருந்து நவ்திருக்காலம் என கூறப்படுகிறது. இந்தியில் 'வஞ்சகர்' அல்லது 'ஏமாற்றுபவர்' என்பதற்கு தக் என்று குறிப்பிடுவார்கள். இன்னும் சிலர் உருது மொழியின் 'தாக்' என்ற வார்த்தையில் இருந்து இந்த தக் என்ற வார்த்தை தோன்றியிருக்கலாம் என்கிறார்கள். இந்த வார்த்தை 19ஆம் நூற்றாண்டில் இந்தியாவைப் பிரிட்டிஷ் ஆண்டு கொண்டிருந்த சமயத்தில் ஆங்கிலத்தில் பரவலாகப் பயன்பாட்டிற்கு வந்தது.
மேலும், ஆங்கிலேயர்கள் முதலில் இந்தியாவுக்குள் வந்த சமயத்தில் அவர்களை அலற வைத்தவர்களும் இந்த "தக்"கள் தான்.. 1800களில் இந்தியச் சாலைகளில் பயணிப்போரைக் கொன்று, அவர்கள் உடைமைகளை ஒரு கும்பல் கொள்ளையடித்ததாக நம்பப்பட்டது. இந்த கும்பலைத் தான் பிரிட்டிஷ் அரசு தக்குகள் எனக் குறிப்பிட்டார்கள். கொலை செய்து கொள்ளை அடிப்பதையே தொழிலாகக் கொண்ட இவர்களைப் பார்த்து ஆங்கிலேயர்கள் அலறினர்.
பரம்பரை தொழில்: இந்த தக்குகள் குறித்து 1837இல் வெளிவந்த Illustrations of the history and practices of the Thugs என்ற புத்தகத்திலும் கூட விரிவாக விளக்கியுள்ளனர். அதாவது இந்தியாவில் பல்வேறு பரம்பரை தொழில்கள் இருக்கும் நிலையில், அதுபோல தான் இப்படி கொலை செய்து கொள்ளையடிப்பதும் ஒரு பிரிவினருக்குத் தொழிலாக இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. இவர்கள் பொதுவாகக் காளி தெய்வத்தைத் தான் வணங்குவார்கள்.
அவர்களின் தாக்குதல் முறைகளும் அவர்களின் வழக்கமும் அப்போது இங்கிருந்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. அவர்களை வேருடன் அழிக்கவில்லை என்றால் தங்கள் ஆட்சியைத் தொடர முடியாது என்பதைப் பிரிட்டிஷ் அரசு உணர்ந்தே இருந்தது. இது தொடர்பாக அவர்கள் இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்குப் பல ஆவணங்களையும் அறிக்கைகளையும் கடிதம் வாயிலாக அனுப்பியுள்ளனர். அதில் இந்த பரம்பரையை தக்குகள் என்றே குறிப்பிட்டுள்ளனர்.
ரத்த வரலாறு: பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல் லார்ட் வில்லியம் பெண்டின்க், கேப்டன் வில்லியம் ஸ்லீமன் ஆகியோர் இணைந்து இந்த தக்குகளை சிறைபிடித்தார்கள். இப்படி அவர்கள் பல நூறு பேரைக் கொன்று குவித்தனர். மேலும், பல ஆயிரம் பேரைச் சாகும் வரை சிறையில் அடைத்தனர். அதன் பின்னரே தக்குகள் அனைவரையும் ஒழித்துவிட்டதாகப் பிரிட்டனுக்கு அறிக்கையும் அனுப்பினார்கள்.
ஆனால், இந்தச் சம்பவம் நடந்த பிறகும் கூட பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் சிக்காமல் நாட்டில் பல இடங்களில் இந்த தக்குகள் வாழ்ந்து வந்ததாகவே கூறப்படுகிறது. அதன் பிறகு ஒரு சில பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தக்குகள் குறித்து தங்கள் ஆவணங்களில் குறிப்பிட்டதே இதற்குச் சாட்சியாகும். இப்படி தக் என்ற வார்த்தைக்கு மிகப் பெரிய வரலாறு இருக்கிறது. அதுவும் அந்த வரலாறு இந்தியாவுடன் தொடர்புடையதாக இருக்கிறது.
நவீன தக் லைஃப்: இந்த தக் லைஃப் என்பதை தற்போதைய தலைமுறைக்கு எடுத்து வந்தவர் பிரபல ராப்பர் டூபக் ஷகுர். இவர் தக் லைஃப் என்று தனது உடலில் டாட்டூ போட்டுள்ளார். வாழ்க்கையில் பல துன்பங்களைக் கடந்தும் வெல்பவன் என்று இதற்கு அர்த்தம். அதன் பின்னரே நவீன நெட்டிசன்கள் மத்தியில் இந்த வார்த்தை டிரெண்டானது. பலரும் சமூக வலைத்தளங்களில் தக் லைஃப் என்ற வார்த்தை வைத்து வீடியோக்களை எடிட் செய்யப் போட்டார்கள்.
இது தான் இந்த தக் லைஃப் என்ற வார்த்தைக்கு அர்த்தமாகும். நாம் இணையத்தில் ஜாலியாக நினைத்த இந்த தக் என்ற வார்த்தைக்கு இவ்வளவு பெரிய ரத்த வரலாறு இருக்கிறது என்பதே உண்மை.
பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை அலறவிட்ட இந்த தக்குகள் அழிவின் தெய்வமான காளியை வணங்குபவர்கள். மேலும், இந்த தக்குகளை 'பிறவி குற்றவாளிகள்' என்று பிரிட்டிஷார் தங்கள் ஆவணங்களில் குறிப்பிடுவார்கள். இப்போது வெளியாகியுள்ள கமலின் தக் ஃலைப் அறிமுக வீடியோவில் கமலும் இதே வசனத்தை தான் சொல்கிறார். அப்படி வாழ்ந்த ஒருவர் குறித்த கதையாக இது இருக்கலாம்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications