நாள்முழுக்க டார்ச்சர்! ஆனா அந்த விஷயம்தான் இடிக்குது! செந்தில் பாலாஜி வழக்கறிஞர் இப்படி சொல்றாரே?
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது தொடர்பாக அவரின் வழக்கறிஞர் இளங்கோ அதிர்ச்சி அளிக்கும் விஷயங்களை தெரிவித்துள்ளார்.
நெஞ்சு வலியால் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளார். ரத்த அழுத்தம், நெஞ்சுவலியால் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இதையடுத்து செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்ட ஓமந்தூரார் மருத்துவமனையில் துணை ராணுவம் குவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் கரூரில் பல்வேறு இடங்களில் போலீஸ் குவிக்கப்பட்டு உள்ளது. முன்னெச்சரிக்கையாக இருக்க காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இது செந்தில் பாலாஜி வழக்கறிஞர் எம்பி இளங்கோவன் பேட்டி அளித்துள்ளார். அதில், செந்தில் பாலாஜியை நாள் முழுக்க துன்புறுத்தி உள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்; வழக்கு குறித்து சட்டப்படி உறவினர்களிடம் தெரிவிக்கவேண்டும்; ஆனால், செய்தியாளர்களிடம்தான் தெரிவிப்பார்கள் போல.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்து மருத்துவ பரிசோதனைக்கு பின் தெரியவரும். செந்தில் பாலாஜியை பார்ப்பதற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை; கைது நடவடிக்கை என்றால் அதற்குரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை.
செந்தில் பாலாஜி விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டாரா? கைது செய்யப்பட்டாரா? எனத் தெரியவில்லை; வழக்கை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம். செந்தில் பாலாஜியை கைது செய்ததாக கூறவில்லை.
கைது நடவடிக்கை என்றால் அதற்குரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. கைது செய்யப்பட்டால் ஏன் கைது என்று சொல்லவில்லை என்று கூறியுள்ளார். அவரின் இந்த பேட்டி காரணமாக செந்தில் பாலாஜி முறையாக கைது செய்யப்பட்டு உள்ளாரா அல்லது விசாரணைக்கு செல்லும் வழியிலேயே அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுவிட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
உடல்நிலை எப்படி? : செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்து ஓமந்தூரார் மருத்துவமனை தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது. அதில், செந்தில் பாலாஜியின் இதயத்துடிப்பு , உடலில் ஆக்சிஜன் சமநிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது. இரண்டிலிருந்து 3 நாட்கள் வரை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை தேவைப்படுகிறது.
சீரான இதயத் துடிப்பு இல்லாத நிலையில் தேவைப்பட்டால் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கும். தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி மயக்க நிலையிலேயே இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.,
கைது நடந்தது எப்படி? : நேற்று 17 மணி நேரம் சோதனை முடிந்த பின் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்து சென்றபோது நெஞ்சில் கைவைத்து வலிப்பதாக கூறி அவர் காரில் படுத்ததால் மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்று இருக்கிறார்கள்.
அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு உள்ளது. நெஞ்சை பிடித்துக்கொண்டு காரில் படுத்துக்கொண்டு செந்தில் பாலாஜி அழுது இருக்கிறார். உடனே அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

வழக்கு: போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் உள்ளது. இதில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவருக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக அரசு முடிவு எடுத்த நிலையில் இதில் தொடர்ந்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான விசாரணையை தொடர வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
இதையடுத்தே வருமான வரித்துறை அவருக்கு எதிராக ரெய்டு நடத்தியது. அதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் பல அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்டு உள்ளது. அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில்தான் நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வந்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications